Showing posts with label கேள்வி-பதில். Show all posts
Showing posts with label கேள்வி-பதில். Show all posts

நிலவனுடன் ஒரு பேட்டி...

தமயந்தியினால் மூன்று நான்கு முறை நினைவூட்டலுக்குப் பின்....

1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
இரட்டையராய் பிறந்ததால் முறைப்படி ராமர் லட்சுமணன் என வைத்தனர். பள்ளியில் சேர்க்கையில் அண்ணன் எனது பெயரை விஜயலட்சுமணன் எனவும், அண்ணனுக்கு ராமமூர்த்தி எனவும் இட்டதாகச் சொன்னார்கள். எனது பெயருள்ளவர்கள் யாரையும் இதுவரை சந்தித்திராததொரு பெயர். வீட்டில் லட்சுமணன், அலுவலகத்தில் விஜய், தமிழுக்காக நிலவன் என பெயர் பிடிக்கும் தான்.

2.கடைசியாக அழுதது எப்பொழுது?
எதிர்பாரதவைகளை எதிர்நோக்கும் பொழுது மனம் அழுத்தமானதுண்டு.

3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
எனக்குப் பிடிக்கும், மற்றவர்களுக்கு அவ்வளவு அழகாய்த் தோன்றாது. பள்ளியில் மதிப்பெண்ணில் போட்டியிட்டு என்னை பின்னுக்கு இரண்டாவது இடத்தில் தள்ளியவர்களின் வெற்றியில் எனது கையெழுத்து ஒரு காரணம்.

4.பிடித்த மதிய உணவு என்ன?
வாழை இலையுடன் கமகம முழுச்சாப்பாடு

5.நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா ?
கண்டிப்பா.. என்னைப் போல நெறைய பேரை பார்க்கிறேன். ஆனால் தொடர்ச்சியாய் என்னுடன் ஒத்துவருவதில்லை. ஆதலால் என்னை எனக்கு மட்டுமே நீண்டகால நண்பன்.

6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
அருவி சென்று குளித்து 10 வருடங்களாகிறது. கடலில் குளித்து இரண்டு வருடங்களாகிறது. அருவி, கடலுக்கான நெருக்கம் மிக அதிகம். ஆதலினால் வாய்ப்பு வருகையில் விடுவதில்லை.

7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
பலவருடம் பழகினாலும் உண்மையான உணர்வுகளையும், உருவங்களையும் உணர முடிவதில்லை. முதலில் பார்த்ததும் எதையும் தீர்மானிக்க முடியாதது தான். இருப்பினும் பேசுபவரின் பாவனைகளையும், நடையையும் மட்டும் தான் கவனிப்பேன்.

8.உங்க கிட்ட உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
1. வேகம். 2. விவேகம்.

9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விஷயம் எது?
சரிபாதி இன்னும் அமையவில்லை. ஆதால் இங்கே பதில் இல்லை.


10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
அம்மா, அப்பாவுடன்

11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
கறுப்பு மஞ்சளுடன் மேல்சட்டை, அரைக்கால் சட்டை

12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கேட்பதில்லை..

13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
ஊதா ஊதா.. ஊதாப்பூ..


14.பிடித்த மணம்?
மல்லிகை

15.நீங்க அழைக்கப் போகும் நபர்கள் யார் யார் ? ஏன் உங்களுக்கு அவர்களை பிடித்து உள்ளது. அவர்களை அழைக்கக் காரணம் என்ன ?
அம்மா, தணிகைஅரசு, மேரி, யுவனேஷ்வரி, நிஷா, இலாவண்யா
தொடர்புக்கு, விடயமாக, கருத்து பரிமாற்றம், விசாரிப்பிற்கும்..

16.பிடித்த விளையாட்டு?
கபடி.. தற்போது கணிப்பொறி உலவுதல் மட்டும்..


17.கண்ணாடி அணிபவரா?
ஆம்.. கடந்த 10 ஆண்டுகளாய்.

18.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்?
கருத்தாழமிக்க.. பார்த்து முடித்தவுடன் நம்முள் மாற்றம் கொண்டுவரக்கூடிய தகுதியுடைய ..


19.கடைசியாகப் பார்த்த படம்?
ஒன் மேன் ஆர்மி ... ( தமிழ்படத்துகான சிட்டை கிடைக்காததால்)

20.பிடித்த பருவ காலம் எது?
பருவங்கள் அனைத்தையும் பழகிக் கொண்டிருக்கிறேன். பிடித்தது எது எனச் சொல்லத் தெரியவில்லை.

21.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்
புதிதாய் ஒன்றை கவனிக்கும் போது, அல்லது ஏற்கனவே இருப்பது புளித்துப் போய் மாற்றம் வேண்டும் என மனம் விரும்புகையில்.

22.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
மென்மையான இசை, அலறும் அனைத்தும். ( குழந்தை முதல் குக்கர் வரை)

23.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
இந்தியாவுக்குள் மும்பை வரை, உலகத்தில் அமெரிக்கா(டெட்ராய்ட், நியூயார்க்) வரை

24 உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
வலிகளை, வழுக்கல்களை அனுபவமாய் ஏற்றுக் கொண்டு நடைபோடுவது, கொஞ்சமாய் கவிதை, கொஞ்சமாய் எழுதுவது.

25.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிளவுபடுத்தும் சாதிகள் நம்மால் இன்னும் பிழைத்துக் கொண்டிருப்பதேன்?

26 உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சில சமயங்களில் விடாமுயற்சிக்கு விடை கொடுப்பது.

27. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
ஊட்டி

28.எப்படி இருக்கணும்னு ஆசை?
புரட்சிகளை புகுத்தும் பொதுமனிதனாய்.. (அல்லது புரட்சியாளனாய்...)

29.மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம் ?
எதுன்னு தெரியலை.. ‘அது’ வா இருக்குமோ.. ?!

30.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க..?
ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையே நடக்கும் அங்கலாய்ப்பில் வென்றவர் சிலர், தோற்பவர் பலர்.

31.இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்த‌க‌ம்?
பெரியாரின் இடதுசாரித் தமிழ்த் தேசியம்.

32..உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அனைத்துமே.. இருப்பினும் தமயந்தியின் நக்கலும், நையாண்டியும். கவிதை, கதைகளில் காணப்படும் நளினமும், கற்பனைக் கவியும்.

Read more...

கேள்வி-பதில்

பெண்கள் தங்கள் கணவனிடமோ, காதலனிடமோ அவர்களுடைய உடல் நலத்தில் அக்கறையுடன் இருக்கிறார்கள். ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லையே! இதற்குக் காரணம் என்ன? இந்த விஷயத்டில் ஆண்களைக் கண்டாலே எனக்குப் பிடிக்கவில்லை!

காரணம், இன்றளவும் பெண்கள் ஆண்களைச் சார்ந்திருப்பதுதான்! அவன் நன்றாக இருந்தால்தான் தானும் குழந்தைகளும் நன்றாக இருக்கமுடியும் என்று அவள் நம்புகிறாள். அதே சமயம் மனைவிக்கோ, காதலிக்கோ உடல் நலம் பாதிக்கப்பட்டால், ஆணும் துடிதுடித்துப் போவான். பொதுவாக, ‘எதுவும் விபரீதமாக நடந்துவிடாது’ என்கிற ஆணின் நம்பிக்கையைவிட, ‘ஏதாவது நடந்துவிடுமோ’ என்கிற பெண்ணின் கவலை அதிகமானதே! ஒருமுறை ‘உடம்பு சரியில்லை’ என்பது போல நடித்துப் பாருங்கள். அப்புறம், அவர்களைக் கண்டாலே பிடிக்கவில்லை என்று சொல்லமாட்டீர்கள்!
--விகடன்

Read more...

ஒரு கேள்வி - ஒரு பதில் !

( கவிதாவின் கேள்வியும், திருநங்கை விதயாவின் பதிலும்.... )

கவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?


இதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும். ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது? இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?



நன்றி : http://kavithavinpaarvaiyil.blogspot.com/

Read more...

மனிதன் பிறக்கும் போது கூடவே பிறக்கும் குணம் எது ?


குணமெல்லாம் போகப் போக வருவது. பிறக்கும் போதே மனிதன் எதற்குத் தயாராகிறான் என்று கேளுங்கள்!

1. உயிர் வாழ;
2. இன்னொரு உயிரை உற்பத்தி செய்ய!

உயிர் வாழ, வாய்வழியாகச் சாப்பிட வேண்டும் என்கிற உணர்வு, பிறந்த உடனேயே குழந்தைக்கு வந்து விடுகிறது. அதற்கு முன்பே, கர்ப்பம் ஏற்பட்ட எட்டாவது வாரத்தில் (அதாவது ஒண்ணே கால் அங்குலமே உள்ள குழந்தைக்கு) ஆண் - பெண் உறுப்புகள் உருவாகத் துவங்குகின்றன.


பிறக்கும் போதே பெண்ணுக்குள் மூணரை லட்சம் முட்டைகள் ரெடி! அதில் சுமார் 400 முட்டைகளே கர்ப்பத்துக்குத் தயாராகின்றன. முதல் முட்டை வெளிவருவதுதான் 'வயசுக்கு வருவது'!


எட்டாவது வாரத்தில், ஆண் குழந்தைக்கும் உறுப்பு(penis) தயார். வயிற்றுக்குள் இருக்கும்போதே அது அவ்வப்போது விறைத்துக் கொள்வதைக் கூட 'ஸ்கேனிங்' மூலம் பார்த்துவிட்டார்கள்! எதிர்காலத்துக்காக இப்போதே 'டெஸ்ட்' பண்ணிக் கொள்கிறது!



- நன்றி 'ஹாய் மதன்'

Read more...

ஹாய் மதன் லிருந்து.....

அழகான ஆண்களைவிட, வசதியுள்ள ஆண்களைத்தானே இந்த காலத்துப் பெண்கள் விரும்புகிறார்கள்! இது பெண்களின் பலவீனத்தைத்தானே காட்டுகிறது?
பலத்தைக் காட்டுகிறது! வெளித் தோற்றம் முக்கியமல்ல இது சம்பந்தமாக உலகெங்கும் கருத்து கணிப்புகள் நடத்தியாகிவிட்டது. அன்பான, புத்திசாலியான, நகைச்சுவை உணர்வு மிகுந்த, வசதியான, பாதுகாப்பான ஆண்களைத்தான் பெண்கள் விரும்புகிறார்கள். சிவப்பு, அழகு எல்லாமே பெண்களுக்கு மூன்றாம் பட்சம் தான்.
- 'ஹாய் மதன்' லிருந்து.

Read more...

ஒரு கேள்வி - ஒரு பதில் - I

சான்றிதழ்களில் ஆணா பெண்ணா என்பதைக் குறிக்க sex என்று போட என்ன காரணம். Gender என்று போடலாம் அல்லவா?

போடலாம் தான்! ஆனால், gender என்பதுதான் உண்மையிலேயே 'செக்ஸி'யான வார்த்தை. குறிப்பாக ஆண்-பெண் என்பதை உடல்ரீதியாகக் குறிப்பிடும் வார்த்தை அது. அதிலிருந்துதான் 'Genetics' போன்ற வார்த்தைகள் பிறந்தன. 'செக்ஸ்' என்றால் இரு பகுதிகளாகப் பிரிப்பது (section, sector) என்றுதான் அர்த்தம். அதாவது ஆண்-பெண் என்று பிரிப்பது! Sex-க்கு 'இப்போதைய' கிளுகிளுப்பான அர்த்தம் வந்தது, ஜஸ்ட் 20-ம் நூற்றாண்டில் தான்!

Read more...

ஒரு கேள்வி - ஒரு பதில் - II

பெண்களை ஆண்கள் ரசிப்பதுபோல், பெண்களும் ஆண்களை ரசிக்கிறார்களா? (திருட்டுப் பார்வை மூலம்?)

திருட்டுப் பார்வையா? எந்த யுகத்தில் இருக்கிறீர்கள்! ஆண்களைவிடப் பல மடங்கு பெண்கள் (ஆண்களை) ரசிக்கிறார்கள். சந்தேகமே வேண்டாம்! ஒரு பெண்ணைப் பார்த்தவுடன், ஆண் உணர்ச்சி மயமாக ஆகி விடுவதால் அவன் மூளை அவ்வளவாக வேலை செய்வதில்லை! பெண்களுக்கு அப்படி இல்லை. அவர்களின் மூளை துறுதுறுவென்று இயங்குவதால் ஆணை ரொம்ப நுணுக்கமாக ரசிக்க முடியும்.

ஒரு காதல் ஜோடியிடம் வினாத்தாள் கொடுத்தால், ஆண் பரிதாபமாக 'நான் எதையும் கவனித்ததில்லை, அவள் முகம்தான் முழு நிலவு போல எனக்குத் தெரிகிறது!' என்பான். அதுவே பெண் (காதலனைப் பற்றிய) அனைத்துக் கேள்விகளுக்கும் - காதுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு இருக்கும் மச்சம் உட்பட - கட்சிதமான விடைகளை எழுதுவாள்!

- 'ஹாய் மதன்' லிருந்து.....

Read more...