Showing posts with label பெங்களூர். Show all posts
Showing posts with label பெங்களூர். Show all posts

இலங்கையின் இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும்!



பெங்களூரு மே 23, இனப்படுகொலை செய்த நாடான இலங்கையில் இந்திய திரைப்பட சங்கமும், இந்திய முதலாளிகள் சம்மேளனமும் இணைந்து நடத்தும் கலைச் சேவை மற்றும் வணிக ஒப்பந்தங்களை கண்டித்து பெங்களுரு மகாத்மா காந்தி சாலையில் கண்டண ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சேவ் தமிழ் பெங்களூரு கிளை தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் மற்றும் கர்நாடக தமிழ் மக்கள் இயக்கமும் இணைந்து நடத்திய இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் அதிகமான இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இனப்படுகொலையை மறைக்கும் இந்தி(ய) திரைப்பட உலகம் மற்றும் இந்திய முதலாளிகள் சம்மேளனத்திற்க்கும் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக திரு. இராசன் (தலைவர் .க‌ர்நாட‌க தமிழ் மக்கள் இயக்கம்), திரு.பாலன் (கர்நாடக உயர் நீதி மன்ற வழக்கறிஞர்), திரு. சிவ சுந்தர் (கன்னட ஊடகவியலாளர்) ஆகியோர் க‌ல‌ந்து கொண்ட‌ன‌ர்.




ஆர்ப்பாட்ட‌ நிக‌ழ்வில் ஊட‌க‌விய‌ளால‌ர் திரு.சிவ‌ சுந்த‌ர் , உல‌க‌ ஊட‌க‌வியாள‌ர்க‌ள் இல‌ங்கை அர‌சின் போர்குற்ற‌த்தை வெளிக்கொண‌ரும் இவ்வேளையில் இந்திய‌ திரைப்ப‌ட‌ விருது வ‌ழ‌ங்கும் விழாவை கொழும்பில் ந‌ட‌த்துவ‌த‌ன் மூல‌ம் இன‌வெறி பிடித்த‌ இல‌ங்கை அர‌சை, ந‌ல்ல‌ர‌சு என்று ந‌ற்சான்றித‌ழ் வ‌ழ‌ங்கும் முய‌ற்சியில் இந்திய‌ அர‌சு ஈடுப‌ட்டுள்ளது என்றும், த‌டைசெய்ய‌ப்ப‌ட்ட‌ ஆயுத‌ங்க‌ளை அப்பாவி த‌மிழ‌ர்க‌ளின் மீது பிர‌யோகித்து கொன்று குவித்த‌ இன‌வெறி அர‌சுட‌ன் இந்திய‌ அர‌சு கொண்டுள்ள‌ உற‌வான‌து, இந்திய‌ர்க‌ளும் த‌மிழ‌ன ப‌டுகொலையில் ப‌ங்கேற்ற‌தாக‌ பொருள் கொள்ளவும், இந்தியர்கள் அனைவரது கரங்களிலும் த‌மிழ‌ர்க‌ளின் இர‌த்த‌க்க‌றை ப‌டிந்துள்ள‌து எனவும் கூறினார்.

தொட‌ர்ந்து பேசிய வழக்கறிஞர் பால‌ன் அவ‌ர்க‌ள், கொள்ளை அடிப்ப‌தும், கொன்றொழிப்ப‌தும் ஏகாதிப‌த்திய‌த்தின் கொள்கைக‌ளாக‌ உள்ள‌ன‌. இந்திய‌ ஏகாதிப‌த்திய‌ம் ப‌சுமை வேட்டை என்ற‌ பெய‌ரில் ப‌ழ‌ங்குடி ம‌க்கள் வாழும் நில‌ப்ப‌ர‌ப்பில் உள்ள‌ வ‌ள‌ங்க‌ளை கொள்ளை அடிக்க‌, அங்குள்ள‌ ம‌க்க‌ள‌னைவ‌ரையும் ந‌க்ச‌ல்க‌ள் என்ற‌ போர்வையின் கீழ் கொன்ற‌ழிப்ப‌தை போல‌, த‌மிழ‌ர் நில‌ங்க‌ளை இந்திய‌ வ‌ர்த்த‌க‌ முத‌லாளிக‌ள் கொள்ளை அடிக்க‌ இன‌வெறி சிங்க‌ள‌ அர‌சுட‌ன் சேர்ந்து இந்திய‌ ஏகாதிப‌த்திய‌ம் இணைந்து அங்கு வாழ்ந்த‌ த‌மிழ‌ர்களை தீவிரவாதிகள் என்று குற்றம் சுமத்தி கொன்று குவித்த‌ன‌ர். உல‌க‌ அர‌ங்கில் இல‌ங்கையின் போர் குற்ற‌ம் வெளிப்ப‌ட்டால் இந்தியாவின் கூட்டு ச‌தியும் வெளி வ‌ருமென்ற‌ அச்ச‌த்தில் இந்திய‌ ஏகாதிப‌த்திய‌த்தின் கைக்கூலிக‌ளான‌ திரை உல‌கின் உத‌வியுட‌ன் இல‌ங்கையில் அமைதி நில‌வுவ‌தாக‌ ஒரு பொய் தோற்ற‌த்தை ஏற்ப‌டுத்த‌ முனைகிறார்க‌ள் என‌க் கூறினார்.
அத‌ன் பிற‌கு பேசிய‌ க‌ர்நாட‌க‌ த‌மிழ் ம‌க்க‌ள் இய‌க்க‌ த‌லைவ‌ர் இராச‌ன், அப்பாவி த‌மிழ் பெண்க‌ள், குழ‌ந்தைக‌ள் என‌ப் பாராம‌ல் ந‌ச்சுக் குண்டுக‌ள் வீசி கொலை செய்த‌ கொடும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளை புற‌க்க‌ணிக்க‌ வேண்டிய‌து த‌மிழ‌ர்க‌ள் மாத்திர‌ம‌ல்ல‌ மாந்த‌ நேய‌ம் உள்ள‌ அனைவரது க‌டமையாகும். உல‌க‌த்தாரிடமிருந்து சிங்க‌ள‌வ‌ர்க‌ள் செய்த‌ இன‌ப்ப‌டுகொலையை ம‌றைக்க‌ முனையும் இந்திய‌ அர‌சு இந்திய‌ திரைப்ப‌ட‌ துறையின் மூல‌ம், அவ‌ர்க‌ளின் விருது வ‌ழ‌ங்கும் விழாவை கொழும்பில் அவ‌ச‌ர‌ அவ‌ச‌ர‌மாக‌ ஏற்பாடு செய்துள்ள‌து. அதே போல உல‌கெங்கிலும் உள்ள‌ த‌மிழ‌ர்களிடமிருந்து மே மாத‌த்தில் ந‌டைபெற்ற‌ இன‌ப்ப‌டுகொலையை ம‌ற‌க்க‌டிக்க‌ இன‌த்துரோகி க‌ருணாநிதியின் த‌லைமையில் செம்மொழி மாநாடு ந‌டைபெறுகின்ற‌து. உல‌க‌ங்கிலும் வாழ‌க்கூடிய‌ த‌மிழ‌ர்க‌ள் இல‌ங்கையை புற‌க்க‌ணிக்கும் அதே வேளையில், துரோகிக‌ளால் ந‌ட‌த்த‌ப்ப‌டும் செம்மொழி விழாவையும்,விருது வ‌ழ‌ங்கும் விழாவில் ப‌ங்கு கொள்ளும் திரை உல‌கின‌ரையும் புற‌க்க‌ணிக்க‌ வேண்டும் என‌க் கூறினார்.
மேலும் நிக‌ழ்வில் கீழ்காணும் கோரிக்கைக‌ள் வைக்க‌ப்ப‌ட்ட‌ன‌‌.
1. விருது வ‌ழ‌ங்கும் விழாவின் இட‌த்தை மாற்று
2. இந்திய‌ முத‌லாளிக‌ள் சம்மேள‌ன‌மே, இன‌ப்ப‌டுகொலை ந‌ட‌ந்த‌ நாட்டோடு வ‌ர்த்த‌க‌ உற‌வு கொள்ளாதே
3. கமல் ஹாசன் அவர்களே இன‌ப்ப‌டுகொலை செய்த‌ நாட்டோடு வ‌ர்த்த‌க‌ உற‌வு கொண்டுள்ள‌ FICCI யின் பொழுதுபோக்கு துறைத் த‌லைமை ப‌த‌வியிலிருந்து வில‌குங்க‌ள்.
4. அமிதாப் ம‌ற்றும் ச‌ல்மான் கான் அவ‌ர்க‌ளே த‌மிழ‌ர் இர‌த்த‌க்க‌றை ப‌டிந்த‌ இல‌ங்கையில் ந‌டைபெறும் விருது வ‌ழ‌ங்கும் விழாவை புற‌க்க‌ணியுங்க‌ள்.
5. மாந்த‌ நேய‌முள்ள‌ ச‌மூக‌மே போர்குற்ற‌ம் புரிந்த‌ இல‌ங்கை புற‌க்க‌ணியுங்க‌ள்.

Read more...

பாலிவுட்டுக்கு எதிராக பெங்களூரில் போராட்டம்

இலைங்கையில் போர் எனும் பெயரில் தமிழினத்தை அழிக்கும் நோக்குடன் ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டு ஒரு வருடம் ஆகின்ற இந்நேரத்திலும், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நிவாரணப் பணிகளையும் செய்து முடிக்காத இலைங்கையை கண்டிக்க வக்கின்றி இலங்கைப் பொருளாரத்தை முன்னேற்றும் வகையிலும், போர்க்குற்றங்களை மறைக்கின்ற வகையில் இந்தித் திரைப்பட விருது விழாவான ஐஐஎஃஃப்ஏ 2010 ஐ கொழும்புலிருந்து மாற்றக்கோரி கர்நாடகா தமிழ் மக்கள் இயக்கமும், தமிழர் பாதுகாப்பு இயக்கமும் இணைந்து இப்போராட்டத்தை நடத்துகின்றன.

இப்போராட்டத்தில் கலந்து கொண்டு நம்முடைய எதிர்ப்புக்கிற்கு வலுசேர்க்க வரவேற்கிறேன்.


Read more...

விஷ்ணுவர்தனுக்கு அஞ்சலி



இன்று (30 திசம்பர்) காலை 2 30 மணிக்கு மாரடைப்பின் மூலம் உயிர் துறந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தனுக்கு அஞ்சலி செலுத்திக் கொள்கிறோம்.

Read more...

மூன்று இலட்சத்திற்காக மூன்று கொலைகள்



மாலை 5:45 : லோகேஷ் என்பவர் தனது உதவியாளர் இருவருடன், தாஸின் வீட்டிற்குச் சென்று அவரது பண்ணை தோட்டத்தை பராமரிக்க இருவரைக் கூட்டிக் கொண்டு வருகிறார். அச்சமயத்தில் தாஸ் வீட்டில் தனியாக, மது அருந்திக் கொண்டு இருக்கிறார். லோகேஷ் அழைத்து வந்த இரண்டு நபர்கள் சரியாக இருப்பார்களா என்பதை முடிவு செய்ய வெளியில் சென்றுள்ள மனைவிக்கு போன் செய்து வரச்சொல்கிறார்.



லோகேஷ் மற்றும் நண்பர்கள் தாஸைத் தாக்கி கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, கைகளைக் கட்டி குளியலறைத் தொட்டியில் கிடத்துகிறார்கள்.



பின் பீரோவிலுள்ள 110000 பணம், மற்றும் 2.5 லட்சம் மதிப்புள்ள நகைகளை எடுத்துக் கொள்கிறார்கள், கூடவே ராயல் ஸ்டாக் மதுவினையும் எடுத்துக் கொள்கிறார்கள்.



மாலை 6:45 : பணம், நகை, இன்னபிறவைகளை மூட்டை கட்டி கிளம்பும் சமயத்தில் தாஸின் மனைவி வருவதை பார்க்கிறார்கள். ஆதலால் வீட்டில் மறைந்திருந்து அவர்களையும் தாக்கி கொலை செய்து, சிறுமி அக்னீசாவையும் கொலை செய்து குளியலறைத் தொட்டியில் போடுகிறார்கள்.



இரவு 9:30 : மூன்று கொலை செய்துள்ளதால் மாலையில் வெளியில் சென்றால் தெரிந்து விடும் என்பதால் வீட்டில் காத்திருந்து, பணநகைகளை பகிர்ந்து கொண்டு, தொலைக்காட்சியைப் பார்த்து ரசித்துவிட்டு இரவு 9 30 மணிவாக்கில் கலைந்து செல்கிறார்கள்.


இச்சம்பவம் பெங்களூரில் நடந்தது. பல வருடங்களாகத் தனக்கு தெரிந்த நபர் தமது நண்பர்களுடன் சேர்ந்து வெறும் 3 இலட்ச மதிப்பிற்காக மூன்று நபர் திட்டமிட்டு மூன்று கொலைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். மதிப்பு வாய்ந்த மூன்று மனித உயிர்கள் அநியாயமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இக்கொலையை நிகழ்த்தியவர்கள் குற்றப்பிண்ணனி கொண்டவர்கள் அல்லர், சந்தர்ப்பங்களை பயன்படுத்தி இவ்வாறு செய்யலாம் என அவர்கள் முடிவெடுத்து குற்றங்களைச் செய்திருக்கிறார்கள். இப்பதிவு நாமும் நமது சுற்றமும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்பதை உங்களுடன் பகிர்வதற்காகத் தான்.

Read more...

வாழை.. அன்பில் செழித்த உறவு



வாழை மரத்தின் ஒரு சிறப்பு என்னவென்றால் அதன் அனைத்து பாகங்களும் பயனுள்ளதாய், உபயோகமுள்ளதாய் அமையும். வாழைப்பூ, வாழைக்காய், வாழைப்பழம், வாழைத்தண்டு, வாழைக்கன்று, வாழைமட்டை என அனைத்தும் கொண்டதாய் தன்னை வடிவமைத்துக் கொண்டுள்ளது. தனது வாழ்நாளில் தனது அனைத்து பாகங்களையும் உபயோகமானதாய் மனித் சமூகத்திற்குக் கொடுத்துவிட்டுச் செல்கிறது. இச்சிறப்பு மற்ற எந்த வகையிலான காய், கனிகளுக்கும் இல்லையென்றே நினைக்கிறேன். சரி தற்போது விடயத்திற்கு வருவோம்.



வாழை.. வழிகாட்டி என்னும் சமூக அமைப்பு பற்றியும், அதன் செயல்பாடுகள் பற்றியும் கடந்த ஆண்டு ஆனந்த விகடனில் படித்திருந்தேன். ஆயினும் அந்த அமைப்பினில் பங்கேற்று செயலாற்ற முயற்சியினெதையும் எடுக்கவில்லை. எச்.சி.எல் நிறுவனத்தில் பணிபுரியும் ரவி அவர்கள் அறிமுகம் கிடைத்தபிறகு அவரும் வாழை அமைப்பினில் முனைப்புடன் பங்கெடுத்து வருவதை அறிந்தேன். ஒரு மாலை நேரத்தில் எனது அறைக்கு வந்து அவர்களது செயலாக்கம் பற்றி விரிவுரைத்தார். வாழை அமைப்பில் உறுப்பினராவதற்கென “மெண்டர்சிப்” எனப்படும் பயிற்சிக்கு வரவேண்டும் எனவும் அழைத்திருந்தார். கடந்த முறை ஏற்பாடாகியிருந்த சென்னையில் என்னால் பணியிலிருந்து விடுப்பில் வரமுடியாத காரணத்தினால் பங்குபெற முடியவில்லை. அதன் அடுத்த பயிற்சியாக 2ம் திகதி ஆகத்து ஞாயிறன்று மடிவாளாவில் உள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் ஏற்பாடாகியிருந்தது.

காலை 10:30 க்கு ஆரம்பான பயிற்சி ஆரம்பமானது. பயிற்சியின் ஆரம்பமாய் யூடியூப் வகையான ஒரு விளக்கக் காணொளியும் பின் வாழையின் கடந்த அய்ந்து வருட செயல்முறைகளை விளக்கும் வகையில் நிழற்பட காணொளிகள் காண்பிக்கப்பட்டன. முற்றிலும் சிறப்பாய் பள்ளிக் குழந்தைகளுக்கு அவர்களின் ஆர்வத்தை, திறமையை வெளிக்கொணரும் வகையில் சிறப்பான பயிற்சி அளித்திருந்ததை உணர முடிந்தது. ரவி அவர்கள் பங்கேற்பாளர்களை உற்சாகப்படுத்த என சிறு விளையாட்டை நடத்தினார். அவ்விளையாட்டின் மூலம் பங்கேற்பாளர்கள் தங்களுக்குள் அறிமுகப்படலம் அமைக்கும் வகையிலிருந்தது.




அடுத்த விளையாட்டாய் ஒன்றை வைத்து அரும்பெரும் கருத்தை உணர்த்தினார். அதன்படி ஒவ்வொருவருக்கும் அய்ந்து தீக்குச்சிகள் கொடுக்கப்பட்டது. மற்றவர்களிடம் கேள்விகள் கேட்டு ஆம், இல்லை, பதில் இல்லை என பதில்கள் வரமால் வார்த்தைக் கோப்பாக பதிலைப் பெற வேண்டும். அவ்வாறாக பதிலளிக்கத் தவறியவர்கள் ஒரு தீக்குச்சியை இழக்க நேரிடும். அதன்படி அடுத்த அய்ந்து நிமிடத்தில் குழுவில் பங்கேற்றவர்களில் நான்கு நபர்கள்(நான் உட்பட) 7 தீக்குச்சி வைத்திருந்தனர். அதன் அடுத்த இடத்தில் ஆறு பேர் 4 முதல் 6 வரையிலான தீக்குச்சிகளை வைத்திருந்தனர். மூன்றும் மூன்றுக்கும் குறைவான தீக்குச்சிகளை 3 பேர் வைத்திருந்தனர். இதன் அடுத்த சுற்றாக விளையாட்டிற்கான விதிகளை வகுக்கும்படி முதலிடத்தில் வந்த நான்கு நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

நான் உட்பட அமைந்த நான்கு பேர் குழு என்னவெல்லாம் விதியை அமைக்கலாம் என தீர்மானித்தோம். அதன்படி
1. நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களைத் தரவேண்டும்,
2. ஆங்கிலம் கலந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலக் கலப்பில்லாத தமிழில் பதில் தரவேண்டும்.
3. மூன்றும் மூன்றுக்கு குறைவாக தீக்குச்சி வைத்திருப்பவர்கள் கேள்வியே கேட்க முடியாது.
என்பன போன்ற விதிகளைச் சொன்னோம்.

அதாவது இந்த விதிகளின் அடிப்படையே விளையாட்டில் வென்று முதலிடத்தில் வந்த எங்கள் குழு இரண்டாம், மூன்றாம் நிலைகளில் உள்ளவர்களுக்கு விதிகளை அமைத்து மேலும் மேலும் அழுத்தங்களைக் கொடுத்து எங்களின் வெற்றிகளை தக்கவைத்துக் கொள்வதாய் அமைந்திருந்தது. ஆனால் இவ்விளையாட்டிற்குப் பின் ஒரு ஆழமான, அழுத்தமான கருத்தொன்று இருப்பதை உணராமலிருந்தோம். அதாவது இச்சமூகத்தில் பிறந்து, வளர்ந்து சில பல உதவிளின் மூலமும், வாய்ப்பு, வசதிகளின் மூலமும் ஒருவாறான உயரிய நிலைகளை அடைந்தவர்கள் தங்களது வெற்றிகளையும், செல்வாக்கையும் தக்கவைத்துக் கொள்ள தமக்கு கீழுள்ளவர்கள் மீது எவ்வாறாக அதிகாரம், ஆதிக்கம் செலுத்துகிறார்கள் அல்லது கீழுள்ளவர்கள் தமது கரங்களைக் கொடுத்தும் சமூகத்திற்கு திருப்பிச் செய்யும் தம் சேவைப்பணியை செய்யாமலிருக்கிறார்கள் என்பதையே உணர்த்த வேண்டியது. இந்த் அரிய கருத்து பங்கேற்ற அனைவரும் உணர வேண்டியதும், மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டியதும் தானே ?!

நம்மில் பலரின் வளர்ச்சி நம்முடன் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்தவர்களின் வளர்ச்சிக்கான விழுக்காடுகளில் பலமடங்கு உள்ளதாய் அமைந்திருக்கும். அதுதவிர நமது கல்லூரியில், பள்ளியில் படித்துக் கொண்டிருப்போரின் வளர்ச்சி விகிதங்களும் பெருமளவு குறைவானதாய் இருக்கும். நமது பலமடங்கு வளர்ச்சியானது நமக்கு கிடைத்திட்ட வாய்ப்பினையும், வசதியினையும் செம்மையாக பிடித்து மேலே வந்ததாய்க் கொள்ளப்படும். நாம் பெற்ற அவ்வாய்ப்பினை வாய்ப்புகள் மறுக்கப்பட்டு, மறக்கப்பட்ட நிலையிலிருக்கும் நம் சமூகத்துக்கு அளிக்கவேண்டும் என்பதை உணர்த்துவதாய் இருந்தது. அவ்வாய்ப்பு என்பது பாடங்களை எப்படிப் படிப்பது, எவ்வாறு மனநிலையில் கொளவது, படிப்பதால் என்ன எதிர்கால வாழ்க்கை எவ்வாறு அமையும், எந்த துறையை தேர்ந்தெடுப்பது, எந்தக் கல்லூரியில் படிப்பது போன்ற வழிகாட்டல்களாய் நமக்குக் கிடைக்காத, கிடைத்த வாய்ப்பை நம் சமூகத்திற்கு நமது பணியாய் அது அமையும் தானே?!

இப்பணியினை வாழை அமைப்பின் மூலம் பள்ளியைத் தவறவிட்டவர்கள், குடும்பத்தில் முதல் தலைமுறைகளாய் படிப்பைத் தொடருபவர்கள், வறுமைக் கோட்டிற்கு கீழுள்ளவர்கள் என மாணவர்களை குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுத்து அவர்களுக்கு பயிற்சிகளை அளித்து அவர்களது வாழ்வின் நம்பிக்கைகளைப் பெறவும், ஆலோசனைகளைப் பெறவும் வழிசெய்கின்றார்கள். அதாவது தேர்ந்தெடுக்க்பபடும் மாணவ, மாணவிகள் யாராவது ஒருவருக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு வாரம் ஒருமுறை அலைபேசியில் அழைத்துப் பேசுதல், மாதமொருமுறை கடிதம் எழுதுதல், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரண்டு நாட்கள் நேரடிப் பயிற்சி என அளிக்கப்பட்டு தம்மால் இயன்ற உதவியை நாளைய சமூக மாணவ மாணவியருக்கு வழங்கும் அரிய பணிகளைப் பற்றிய விளக்கங்களும் தரப்பட்டன.

வாழை அமைப்பின் எல்லைகள் பற்றியும் விவாதம் நடைபெற்றது. சில நூறு வழிகாட்டிகள் செயல்படுவதன் மூலம் சமூகத்தில் மாற்றங்களை ஓரிரவில் கொண்டு வரமுடியாது. அதன் எல்லைகள் விரிவுற்று, பங்கேற்பாளர்கள் பலவாறு பெருகி வாழையின் நோக்கங்கள் நூறு விழுக்காடு அடையும் நேரத்தில் அதற்கான மாற்றத்தை நாம் நம் கண் முன்னே காணலாம். சென்னையில் 150 வழிகாட்டிகள், பெங்களூரில் 25 வழிகாட்டிகள் என தன் பயணத்தை ஆரம்பித்திருக்கும் வாழைக்கு வழிகாட்டிகளாக நீங்கள் உருவாகலாம். அதுதவிர வாழை அமைப்பின் என்ன பாடங்கள் நடத்தப் படுகின்றன, செயல்முறைகள், நடைமுறைகள் போன்றவற்றை அறிந்துகொண்டு நமது கிராமம், பக்கத்து கிராமம், அல்லது உறவுகள் என நம்மைச் சுற்றி இருக்கும் மக்களின் கல்விக்கான வழிகாட்டல்களை செயல்படுத்தும் போது அதன் பலன் சிறப்பானதாய் அமையும்.

தொடர்ந்து மலைத் தேன் என்னும் குறும்படம் ஒன்று காண்பிக்கப்பட்டது. மலைவாழிடங்களில் வாழும் ஒரு தாய் ஊனமுற்ற தனது மகளின் படிப்பிற்காக எவ்வளவு கடினப்படுகிறார், தன் தோள்களில் சுமந்து சென்று கல்வி கற்று முன்னேற்ற முற்படுகிறார் எனும் கருத்தைக் கொண்ட ஒரு உண்மைக் கதை குறும்படத்தைக் காண்பித்தார்கள். படிப்பிற்காக எத்தனையோ மக்கள் பெரும் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கான கல்விக் கண்ணைத் திறந்து வாழ்வில் ஒளியேற்றிடும் பணி நமக்கு உள்ளதையுமே அது காட்டிற்று. ஆகவே நண்பர்களே, நமது பெரும் பணிச்சுமைகளுக்கிடையேயும், தனிக்காரியங்களுக்கிடையேயும் நாம் நம்மாலான பணியினை இச்சமூகத்திற்கு அளிக்க தாங்கள் அருகிலுள்ள சேவை அமைப்பின் மூலமோ அல்லது வாழை அமைப்பின் மூலமோ இருந்து செயல்படுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

வாழை அமைப்பின் அடிப்படைத் தத்துவமாய் ”அன்பில் செழித்த உறவு, இது தலைமுறை தாண்டிய கனவு “ எனச் சொல்கிறாது. நாளைய தலைமுறை மாணவ மாணவர்களுக்கு கல்வியைத் தொடர, வெற்றி பெற நம் அன்பைக் கொடுத்து செழிப்பை வரவழைத்து செழிப்படைவோம், செயலாற்றுவோம்.

தொடர்பு கொள்ள :

VAZHAI (Reg.No. 296/05)
19/10,3rd Lane, Shastri Nagar,
Adyar, Chennai - 600 020
Email: info@vazhai.org

மேலும் விபரங்களுக்கு www.vazhai.org இணைய தளத்தில் காணுங்கள்.
Chennai Contact: +91-9894345962 (Or) +91-9884707546
Bangalore Contact: +91-9945349702

Read more...

அய்யனின் அருள் பெங்களூருக்கு !



அய்யன் திருவள்ளுவரின் சிலை பெங்களூரில் திரு. மு.கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. திறக்கப்பட்டது வள்ளுவரின் சிலை மட்டுமல்ல, தமிழக, கர்நாடக மக்களிடையேயான மனதும் தான்..

Read more...

சிலை உண்டு, நமக்குள் வள்ளுவன் வர வழியுண்டா ?


ஒரு சிலை ! பதினெட்டு ஆண்டுகளாய் பிரச்சனைகளால் திறக்கப்படாமல் பெங்களூரில் மூடப்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறை நூலொன்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வாழ்க்கைக்கான நல்வழிகளை நம்முலகுக்கு உணர்த்தியவருக்கு பெங்களூரில் சிலை வைக்கப் போராட்டம். ஒரு சிலை வைப்பதால் ஏதோ அப்பகுதியையே கைப்பற்றியது போல் வரும் எதிர்ப்பாளார்களை என்னவென்று சொல்வது. சரி இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகு விடிவுகாலம் வந்து எதியூரப்பாவின் எண்ணங்களினாலும், கருணாநிதியின் வேண்டுகோளினாலும் சிலை நிறுவப்படுகிறது என்றாலும் அதனைக் கட்டிக் காப்பது யார் ?! பெங்களூரில் ஏதெனும் பிரச்சனை ஆரம்பித்தது என்றால் முதலில் கை வைக்கப்படும் முதல் தமிழனாய் வள்ளுவர் இருப்பது சரியாய்த் தெரியவில்லை தானே ?

அவர்கள் கை வைத்தால் சென்னையில் வைக்கப்படும் சர்வக்னர் சிலை சும்மா இருக்குமா என்றாலும் இது தேவையற்ற வீணாண அதிர்வுகளை உண்டாக்கும். ஏற்கனவே தமிழகம் மாவட்டங்களில் ஏற்படும் சாதித் தலைவர்கள் சிலை உடைக்கப்படும் போது ஏற்படும் கலவரங்களை கலக்கமுடன் கண்டு வருகிறது. கன்னட இலக்கியம் இதுவரை ஏழு ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது. அத்துனை சிறப்பு வாய்ந்த பெருமைகளை கன்னட மொழியும், இலக்கியமும் புலமை பெற்றதாய் உள்ளது. ஆனால் தனது சகோதர மொழியின் இலக்கியப் புலவரான வள்ளுவனை எதேதோ பிரச்சனைகளைச் சொல்லி எதிர்ப்பு காட்டும் எதிர்ப்பாளர்களை கன்னட இலக்கியம் விட்டு வைத்திருக்கின்றது. ”மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” எனக்கூறிய வள்ளுவன் கூற்று இப்பிரச்சனைகளில் எவ்வாறு கூறியிருக்கிறார்.

வள்ளுவர் சிலை பெங்களூரில் இருப்பதால் என்ன பயன்? யாராவது ”ஹு இஸ் திஸ்” எனக் கேட்டால் “அவர் தமிழ் புலவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார், இரண்டு வரிகளில், ஏழு வார்த்தைகளில் திருக்குறள் எனும் நூலை 1330 குறள்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவரது திருக்குறள் தமிழையும் தாண்டி எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனும் விவரங்களைத் தாண்டி..


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கத்திற்கு
யாகாவாராயினும் நாகாக்க - நாவடக்கத்திற்கு
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - அன்பிற்கு
பொய்யா விளக்கே விளக்கு - வாய்மைக்கு
கற்க கசடறக் கற்பவை - கல்விக்கு
முகநக நட்பது நட்பன்று - நட்புக்கு
பிறன்மனை நோக்கா பேராண்மை - வாழ்வியலுக்கு
புணர்தலின் ஊடல் இனிது - காமத்திற்கு

இவைதவிர

வீரத்திற்கு, மானத்திற்கு, ஈகைக்கு, நாட்டிற்கு, அறிவுக்கு, கேள்விக்கு, பெருமைக்கு, மானத்திற்கு, சூதிற்கு, கள்ளுண்ணாமைக்கு, உழவுக்கு, பழமைக்கு, குறிப்புக்கு, நினைவுக்கு, பிரிவிற்கு, நாணத்திற்கு, துறவுக்கு, புகழுக்கு, பொறையுடமைக்கு, விருந்தோம்பலுக்கு, புணர்ச்சி விதும்பலுக்கு, புலவி நுணுக்கத்திற்கு


என எத்தனையோ கருத்துக்களை எழுதி வைத்ததன் பெருமையே அதனை நாம் வழிமொழிந்து நமது வாழ்வியலின் கொள்கைகளாய் கடைபிடித்து வருவது தானே ?! வள்ளுவனின் குறளையும், வள்ளுவரையையும் மனதிலேற்றி நமது வாழ்வியல் கொள்கைகள் வள்ளுவனின் குறளைப் பின்பற்றித்தான் என குரல் கொடுப்பது எப்போது ?!

Read more...

பெங்களூரில் மனிதச் சங்கிலி போராட்டம் !



இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!,

வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது.
தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது.
செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை கொன்று விட்டதாகவும், இனி தமிழ் ஈழ போராட்டம் என்பதே இல்லை எனவும் கூறி இலங்கை, இந்திய உளவு படைகளும் இராணுவமும் சேர்ந்து செய்யும் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் பொய் செய்திகளுக்கும் மத்தியில் இப்போராட்டம் நடைபெற உள்ளது.

ஆகவே, தமிழ் வீரர்களே! , திரண்டு வாரீர் !, அணி அணியாக வாரீர் !, ஆண்கள் , பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு " தமிழர்களின் இன மான உணர்வு, போராட்டம் , லட்சியம் சாக வில்லை" என்பதை நிரூபிக்க வாருங்கள். வெற்றியை நிரூபித்து இவ் உலகத்தில் வரலாறு படைப்போம் .

நன்றி
நிலவன்

Read more...

பெங்களூர் கவனஈர்ப்பு போராட்ட நிகழ்வுகள், நிழற்படங்கள்

பெங்களூரில் கவனஈர்ப்பு போராட்டம் உலகத் தமிழ் மக்கள் அரங்க இளையோர் அமைப்பால் பிப்ரவரி 15ல் மகாத்மா காந்தி சாலையில் நடைபெற்றது. காலை 8 50 க்கு எம்.ஜி சாலையை அடைந்தேன். நிகழ்ச்சி அமைப்பாளர் அறிவழகன் மற்றுமுள்ள பத்து தோழர்கள் மும்முரமாய் பணிகளைச் செய்து கொண்டிருந்தனர். எதிர்பார்த்த அளவிற்கு மேலாக பந்தல்களும், காட்சி பலகைகளும், அட்டைப் பதாகைகளும் தேவையான அளவு மேடையை அலங்கரித்தும் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அமைந்திருந்தது.

மூன்று சாலைகள் சந்திக்கும் முச்சந்தியானதால் மூன்று பகுதிகளிலிருந்து வரும் வாகனங்களிலும் வரும் பயணங்களின் பார்வை நன்றாகப் படுமாறும் கவனத்தை ஈர்க்கும் வரையிலும் அமைந்திருந்தது. மீதமிருந்த பதாகைகளை ஒட்டுவது போன்ற சிறுவேலைகளை முடித்துவிடவும் நேரம் பத்து மணியைத் தொடவும் சரியாயிருந்தது. பத்து பேராயிருந்த மேடை பத்து மணி அளவில் ஐம்பது பேரை தொட்டு விட்டிருந்தது. பெரியவர் பார்த்திபன் என்னும் ஊனமுற்றவர் தனது மூன்று சக்கர வாகனங்களில் வந்து கலந்து கொண்டார். இளைஞர்களின் இந்த அறப்போராட்டத்தில் கலந்து கொள்வது மகிழ்ச்சி எனக் கூறி நெகிழ்ச்சி ஏற்படுத்தினார். அவரை மேடையிலேற்றி அமரவைத்தோம்.

முதலாவது நிகழ்ச்சியாக மக்களின் எழுச்சித் தீயை ஏற்படுத்த தன்னுடலில் தீயை வைத்து உயிராயுதம் ஏந்தி நம்மை நகலாயுதம் ஏந்த முன்மொழிந்து உயிர்நீத்த வீரத்திருமகன் முத்துக்குமாருக்கு பார்த்திபன் அவர்களால் மாலை செலுத்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. அறிமுக உரையாக வெங்கடேசன் உரையாற்றி கலந்து கொள்ளும் தமிழுணர்வாளர்களுக்கு வாழ்த்தி வரவேற்றார். அவருக்கு அடுத்தபடியாக உரையாற்றிய நிகழ்ச்சி அமைப்பாளர் அறிவழகன் இலங்கையின் வரலாற்று நிகழ்வுகளையும், ஆரம்பத்திலிருந்த் சிங்கள அரசு செய்த கொடூர நிகழ்வுகளையும் பட்டியலிட்டு இனப்படுகொலையை கண்டித்ததோடு, ஆயுத் வழங்கி ஆதரவளித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் சாடினார்.

பின்னர் இனப்படுகொலைக்கு எதிராகவும், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், போரை நிறுத்தி வலியுறுத்தியும், இந்திய அரசைக் கண்டித்தும் பெரும் உணர்ச்சிக்குரலில் வலிமையான குரல்கள் எழுப்பப்பட்டன.

“போராடுவோம் போராடுவோம்
இறுதிவரை போராடுவோம்”

”காந்தி தேசம் கொடுக்குதே !
புத்த தேசம் கொல்லுதே !”

”ஒழித்திடுவோம் ஒழித்திடுவோம்
இனப்படுகொலையை ஒழித்திடுவோம் !”

”நிறுத்து நிறுத்து !
இனப்படுகொலையை நிறுத்து !”

என தமிழிலும் ..

”நிலிசி நிலிசி..
தமிழரன்ன கொலையெ நிலிசி”


என கன்னடத்திலும்

”We Want, We want
Ceasefire, Ceasefire”


என ஆங்கிலத்திலும் பெரும் உணர்வுடன் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அத்துடன் வாகன பயணிகளின் கவன ஈர்ப்புக்கு சாதகமாய் ஆங்கிலத்திலும், கன்னடத்திலும் அச்சடிக்கப்பட்ட காகித அச்சுகள் இரண்டு சக்கர, மூன்று சக்கர, நான்கு சக்கர வாகன் பயணிகளுக்கு கொடுக்கப்பட்டன.

ஊடகங்களிலிருந்து உதயா, டிவி 9, சுவர்ணா, கஸ்தூரி, ஐபிஎன், ஹிந்து, ஹெட்லைன் டுடே என பெரும்பாலோனோர் வந்து நிகழ்வுகளை நிழற்படம் எடுத்து போராட்டத்திற்கான காரணங்களைக் கொண்ட அறிக்கையை வாங்கிக் கொண்டார்கள். அத்துடன் அறிவழகன் கன்னடத்திலும், வேல்முருகன் ஆங்கிலத்திலும் பேட்டி கொடுத்தார்கள். நேரம் ஆக சிறிது சிறிதாய் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கையும் அதிகமானது. நேரம் பன்னிரெண்டைத் தொடுகையில் எண்ணிக்கை 120 ஐக் கொண்டிருந்தது. பெரும்பானமையானவர்கள் வலைப்பதிவர்களும், கவிஞருமாக ஒரு சிலர் அறிமுகமாயினர்.

எந்தவிதமான அரசியல் கட்சியையும் சாராது இளைஞர்களால், தமிழுணர்வாளர்களால் முதல் முயற்சியாக நடத்தப்பட்ட இப்போராட்டம் நண்பகல் 12:30 மணியளவில் வெற்றிகரமாக முடிவடைந்தது. தமிழுணர்வாளர்களால் மேடை நிரம்பியிருந்ததாக இருந்தது. அங்கொன்றும் இங்கொன்றுமாய் தமிழுணர்வாளர்களாக இருப்பதில் அனைவரும் ஒன்று கூட தமது நிகழ்வுகளை, உணர்வுகளைப் புரிந்து கொண்டதில் நல்லதொரு முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் கொள்ளும் என்னும் நம்பிக்கையிலும் உணர்வாளர்கள் காணப்பட்டனர். ஏறக்குறைய 150 இளைஞர்களால் குழுமியிருந்த மேடையின் காட்சிப் படங்களையும், கோஷங்களையும், அச்சுக்காகிதங்களிலும் பெங்களூர் நகரத்தின் கவனத்தை ஈர்த்ததில் சிறு வெற்றியே !














Read more...

இனப்படுகொலையை எதிர்த்து பெங்களூரில் போராட்டம்


நண்பர்களே ! 

இலங்கையில் தமிழர்களுக்கெதிராக நடக்கும் இனப்படுகொலைகளைக் கண்டித்து கவனஈர்ப்பு போராட்டம் பெங்களூரிலுள்ள எம்.ஜி சாலையில் காந்திசிலை அருகில் நடைபெற இருக்கிறது என்பதை அறிவீர்கள் என நினைக்கிறேன். நமது தமிழகம் தாண்டி தொழில்களுக்காகவும், வேலைகளுக்காவும் நமது சொந்த மண்ணை விட்டு இங்கு வாழ்ந்து வரும் ஒவ்வொரு தமிழரும் தமிழுணர்வை உணர வேண்டும். தமிழகத்தில் நாள்தோறும் மாணவர்கள், வழக்கறிஞர், வியாபாரிகள், அரசியல் கட்சிகள், பத்திரிக்கையாளர்கள், திருநங்கைகள், அரசியல் கட்சிகள் என எண்ணற்றோரின் முயற்சியால் நாளொரு வண்ணம் போராட்டம் நடந்தவண்ணம் உள்ளன. அவற்றிலெல்லாம் நமது வேலைப்பளுக்கிடையில் வெகுதூரம் சென்று பயணம் செய்து கலந்து கொள்வது இயலாத காரியம். தற்சமயம் பெங்களூரில் நடக்கும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளலாமே ?

இலங்கையில் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்து ஏற்கனவே பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தின் மூலம் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. அதுதவிர இலங்கையில் நிலை குறித்த கருத்தரங்கமும் நடைபெற்றது. இதில் எவற்றில் நீங்கள் கலந்து கொண்டீர்கள் எனபது தெரியவில்லை. எனினும் தற்போது ஏற்பாடாகி இருக்கும் இப்போராட்டம் உலகத் தமிழ் மக்கள் அரங்கம் என்னும் இணைய குழுவின் மூலம் நடத்தப்படுகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னரே திரு அறிவழகன் அவர்கள் மாநகர கண்காணிப்பாளரிடமிருந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வாங்கியுள்ளார். நமது போராட்டதின் மூலம் கர்நாடக அரசுக்கும், நடுவண் அரசுக்கும் நமது எண்ணங்களைத் தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும். 

சந்தித்துக் கொண்டால் சினிமாவைப் பற்றி பேசுவதுமாய், புது பட வெளியீடென்றால் பெரும் கூட்டமெடுத்து கொடிக்கணக்கில் பொழுதுபோக்கிற்கு செலவிடும் மக்களது மனங்களில் மக்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் இப்போராட்டங்களிலும் கலந்து கொண்டு உஙகளின் வருகையைப் பதிவு செய்வது கடமையன்றோ ?! 

இனிய தொழில்நுட்ப நண்பர்களே, நீங்கள் அனைவரும் கடும் பணிச் சுமைகளுக்கிடையில் தொடர்ச்சியாய் பணி செய்து மிகுந்த களைப்புடன் இருப்பீர்கள் என்பதை அறிவோம். கிடைக்கின்ற ஒரு விடுமுறை நாளில் உங்களை சோம்பல் நாம் மட்டும் போய் என்ன சாதிக்கப் போகிறோம் என சலனப்படுத்தும். இருப்பினும் நினைவில் கொள்ளுங்கள் நண்பர்களே, ஒருவேளை பெங்களூரில் இக்கட்டான நிலையை சந்திக்க நேர்ந்தால் உங்களுக்காக மற்றவர்கள் குரல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நினைக்கும் உங்களின் மனதைப் போலவே பெரும் இக்கட்டில் விருந்தோம்பலில் சிறப்பு பெற்ற தமிழினம் இன்று அநாதையாய், கேட்பாரற்று உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் கொடுமையான போர்க்களத்தில் நிற்கும் நம் தொப்புள்கொடி உறவுகளுக்கு குரல்கொடுக்க அணி திரண்டு வாரீர்.. 

நண்பர் ரமேஷ் அவர்கள் சொன்ன ஒரு நிகழ்வுகளையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மடிவாலா பகுதியிலுள்ள செருப்பு தைக்கும் தொழிலாளி ஒருவர் தான் தினம் சம்பாதிக்கும் 50 ரூபாயில் 20 ரூபாய் இலங்கையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக வெவ்வேறு பத்திரிக்கைகளை வாங்குவதற்காக செலவிடுகிறேன். நானும் போராட வேண்டும் என நினைக்கிறேன். ஆனால் எப்படி என்ன என்பதை தெரியவில்லை. எப்படி என்ன என்று சொல்லுங்கள் என்னால் 400 அல்லது 500 பேரை திரட்டிக் கொண்டு வர முடியும் எனக் கூறியிருக்கிறார். அவரிடமிருந்த தமிழுணர்வும் தமிழ்ப்பற்றும் வேறு யாரிடமும் நான் பார்த்ததில்லை என நெகிழ்வுடன் கூறினார். சொல்லுங்கள் நண்பர்களே நாம் எத்துணை தமிழுணர்வுடன்.. இல்லை கடமையுணர்வுடன் இருக்கிறோம் ? 

இலங்கை அரசின் கொடும்செயல்களையும், ஊழல்களையும் அம்பலப்படுத்தி செய்தி வெளியிட்ட காரணத்திற்காக கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் எனும் பத்திரிக்கை ஆசிரியர் லசந்த விக்கிரமசிங்கே மேற்கோள் காட்டிய ஒன்றினை உங்களுக்கு நினைவுப்படுத்த கடமைப்பட்டிருக்கிறேன். 

இது ஹிட்லரின் நாசி படைகளால் கொலை செய்யப்பட்ட ஜெர்மானிய மதபோதகரான நியூம் மொல்லர் அவர்களின் கூற்று:

யூதனுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் யூதன் இல்லையே. 
கொம்யூனிஸ்டுக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் கொம்யூனிஸ்ட் இல்லையே.
தொழிலாளிக்கு ஆபத்து வந்தது. நான் பேசவில்லை.
ஏனெனில் நான் தொழிலாளி இல்லையே.
எனக்கு ஆபத்து வந்தது. யாரும் பேசவில்லை.
ஏனெனில் நான் யாருக்காகவும் பேசவில்லையே.

இதிலுள்ள வரிகளையும், வலிகளையும் உணர்வீர்களானால் ஒவ்வொரு குடிமகனும் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய அவசியத்தை உணர்வீர்கள். 
அரசியலாலும், அரசியல்வாதிகளாலும் நிலையற்ற வாழ்வினை மேற்கோள்ளும் மக்களுக்கு குரல் கொடுக்க அணிதிரண்டு வாரீர் எனக் கேட்டுக் கொள்கிறேன். 


வாழ்க தமிழுடன், 
தமிழ் நிலவன். 

Read more...

எப்படியெல்லாம் போறாய்ங்க பாரு !


Read more...

C, C++, கன்னடம்



பெங்களூர் சலையோர பலகைகளில் வைக்கப்பட்டிருக்கும் விளம்பரம்.


மொன்பொருள் மொழி பேசும் மக்கள் கன்னடம் பேசும் மக்களை விட அதிகமாக இருக்கிறார்களா என்ன?
அது என்ன C, C++, கன்னடம் என மூன்றாம் இடத்திற்கு கன்னடத்தை தள்ளி விட்டீர்கள் என
மொழியாளர்கள் போராட்டம் நடத்தாமல் இருந்தால் சரி.

Read more...