Showing posts with label ஈர்த்ததில். Show all posts
Showing posts with label ஈர்த்ததில். Show all posts

திருமணத்திற்கு முன் !



காதல் என்பது நேற்று முளைத்ததல்ல, பன்னெடுங்காலமாய் மனிதம் தோன்றிய காலத்திலிருந்தே நம்முள் உணர்வாய், உயிராய், மூச்சாய் இருந்திருந்தாலும் இன்று வரை இளைஞர், இளைஞிகளுக்கு காதலுக்கு ஆதரவு, எதிர்ப்பு என முரண்பட்ட கருத்துக்களுடன் சாதி, மதம், இனம் கலந்து காதலை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பணம் குவிந்துள்ள இடங்கள், மனிதர்கள் மிகக் குறைவு. ஆனால் சமீபத்திய ஐ.டி வளர்ச்சியின் மூலம் பணம் குவிந்துள்ள இடங்கள் எனபது தனது சதவிகிதத்தைக் கூட்டி மிகப்பெரும் அளவில் பரவலாக்கியுள்ளது.

இங்கே ஐ.டி வளர்ச்சி எனக் குறிப்பிடுவதால் ஐ.டி பணியாளர்களை மட்டும் குறிக்க முடியாது, ஐ.டி வளர்ச்சியின் மூலம் நிலம், வீடு, சம்பளம், சுகாதாரம், கல்வி, மளிகை, உணவு, மருத்துவம், கேளிக்கை, என அனைத்து துறைகளின் அளவும் கணிசமாய் உயர்ந்துள்ளதை மறக்க முடியாது.

காதலுக்கு ஆதரவா ? எதிர்ப்பா என இன்னும் கனந்து கொண்டிருக்கும்

இச்சமூகத்தில்

இனி,

திருமணத்திற்கு முன் இளைஞர், இளைஞிகளின் உணர்வுகளை வென்றெடுக்கும் விருப்ப புணர்வு அவசியமே, அவசியம் இல்லை, அவரவர் விருப்பமே, உரிமையே, சரி, தவறில்லை, என்பனவான ஒரு அடுத்த முன்னோட்டத்திற்கு அடிபோட்டிருக்கிறது சமீபத்திய உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பு.


இன்னும் விளக்கமாய் யோசித்து அடுத்த கட்டுரையில் படிக்கலாம்..

Read more...

மாயவலை - ஈர்த்ததில்



சில தினங்களுக்கு முன்பு உ.பி யில் உள்ள ஒரு கோவிலில் நடந்த நெரிசலில் ஐம்பதிற்கும் அதிகமானோர் இறந்து போயினர். அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்க உ.பி மாநில கஜானாவில் பணம் இல்லை என்றார் உ.பி முதல்வர் மாயாவதி. ஆனால் தனது கட்சியின் 25ம் ஆண்டு விழாவை 200 கோடி கொண்டு செலவு செய்து கொண்டாடியுள்ளார். இதை எதிர்க்கும் எதிர்க்கட்சியினருக்கு மாநில பட்ஜெட்டில் இருந்து ஒரு சதவிதத்துக்கும் குறைவான அளவே செலவு செய்யப்பட்டது என நியாயம் பேசுகிறார்கள். அத்துடன் மேலே உள்ள பண மலர்மாலையில் மட்டும் 5 கோடி ரூபாய் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது, தொடர்ந்து இனிவரும் நாட்களில் மாயாவதிக்கு பணமாலை தான் போடப் போகிறோம் எனக் கூறி வருகிறார்கள். தலித் முதல்வர் ஒரு முன்னோடியாய் இருந்து தலித் மக்களுக்காக பாடுபடுவார் எனப் பார்த்தால் இப்படி செயல்பட்டால் எங்கே உ.பி காணப்போகிறது முன்னேற்றத்தை ?

பின் குறிப்பு : சென்ற ஆண்டு 2000 கோடி செலவில் மாநிலத்தை அழுகுபடுத்த என பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, மாயாவதி, கன்ஷிராம் சிலைகள், தனது கட்சி சின்னமான யானை என நிறுவி



தெலுங்கு மற்றும் கன்னட வருடப்பிறப்பான உகாதி பண்டிகைக்கு தமிழகம் முழுவதும் அரசு விடுமுறையாக உள்ளது. அத்துடன் ஒணம் பண்டிகைக்கும் அரசு விடுமுறை வழக்கில் உள்ளது. இதுபோன்ற நடைமுறைகள் நம்மைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களான கர்நாடகம், ஆந்திரா, கேரளம் ஆகிய மாநிலங்களில் ஒன்றுகூட இல்லையே. அவர்கள் தமிழ் வருடப்பிறப்புக்கு வாழ்த்துச் செய்திகளாவது அனுப்புகிறார்களா எனத் தெரியவில்லை. இது பற்றி முதல்வர் வாய் திறப்பாரா என்ன ? அல்லது இவ்வாறு அளிக்கப்படும் விடுமுறைகள் அம்மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கான அரசியல் தந்திரமா ?!




"ஆன்மீகமும் பிஸினஸ், மாட்டிக்கிட்டா அந்தரங்கமும்(அம்மண) பிஸினஸ்"

Read more...

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Read more...

தமிழ் மரபு அறக்கட்டளை !

கணித்தமிழ்ச் சங்கமும், தமிழ் மரபு அறக்கட்டளையும் இணைந்து தமிழ் மரபு மின்னாக்கம் பற்றிய பயிற்சிப் பட்டறை கடந்த ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இப்பயிற்சிப் பட்டறையில் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா.ராஜேந்திரன், பத்திரிக்கையாளர் மாலன், எழுத்தாளர் திரு லேனா தமிழ்வாணன் ஆகியோர் முன்னிலை வகுத்துச் சிறப்பித்தனர்.


எனது நண்பர் சேலம் செல்வமுரளியின் அறிமுகத்தில் இப்பயிற்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது. கணித்தமிழ் சங்கத்தினர் நிறுவனர் ஆண்டோ பீட்டர், கொரியாவில் பணிபுரியும் நா.கண்ணன், சுபாஷினி ட்ரெம்மல், மற்றுமுள்ள ஏனையவர்களின் அறிமுகமும், தமிழ் மரபினைக் காக்க அவர்கள் எடுக்கும் முயற்சிகளையும், ஆற்றும் பணிகளையும் அறிந்து கொள்ளும் அரிய வாய்ப்பினைப் பெற முடிந்தது.



தமிழில், தமிழாக, தமிழுக்கென ஏனைய அறிஞர் பெருமக்களின் அரிய படைப்புகளை நம்மால் உருவாக்க முடியாது ஆனால் அவற்றைக் காப்பதற்கான கட்டாயத்தை உணர்த்தும் வகையில் பயிற்சி அமைந்திருந்தது. ஓலைச்சுவடிகளை ஸ்கேன் செய்து மின்னாக்கம் செய்வது, இலக்கிய நூல்களை ஸ்கேன் செய்து பாதுகாப்பது, வாய்மொழிப்பாடல்களாய் பாடப்படுபவைகளை ஒலிப்பதிவு செய்து பாதுகாப்பது போன்ற பணிகளை கடந்த பத்தாண்டுகளாய் பணியாற்றி வரும் இக்குழுவின் பணி மிகுந்த பாராட்டுதலுக்குரியது. அத்துடன் மண்ணின் குரல் எனும் பகுதியாக படைப்புகளையும், பாட்டுக்களையும் ஒலியாக பதிவு செய்து பாதுகாப்பது பற்றியும், புத்தகங்களை மின்னாக்கம் செய்யவேண்டியது பற்றிய விளக்கங்களும் உபயோகமாய் இருந்தது. அத்துடன் மரபுவிக்கி எனும் இணைய தளத்தில் பதிவேற்றப்படும் ஏனைய தகவல்களின் அறிமுகவும் சிறப்பாக இருந்தது.


இத்தளத்தினை நாம் அனைவரும் உலவி தமிழின் மரபுகளை அறிந்து பாதுகாப்பதோடு நமக்கு கிடைக்கும் அரிய வகை ஓலைச்சுவடிகளையும், புத்தகங்களையும் மின்னாக்கம் செய்து பாதுகாக்க வேண்டும். அவற்றுக்கான வழிமுறைகளை இத்தளத்தில் கொடுக்கப்படுள்ளன. வாருங்கள் நண்பர்களுக்கான தமிழ் மரபைக் காக்கும் அரும்பணியில் நாம், நம்மை இணைத்துக் கொள்வோம். வாழ்க தமிழ் !








Read more...

எப்புடீ ?!

Read more...

மும்பையை கைப்பற்றிய கதை !


இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிப்பதற்கு இந்திய தேசிய காங்கிரஸ் உறுதியுடன் இருந்தது. ஆனால் சுதந்திரம் வாங்கிய பின் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கும் எனக் கருதிய நேருவும், பட்டேலும் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிவதை எதிர்த்தனர். நாமெல்லாம் திராவிடர்கள், நமக்கென திராவிட நாடு வாங்கிக் கொள்வோம் என முழங்கிக் கொண்டிருந்த நேரத்தில் தெலுங்கு மக்களுக்கென தனி மாநிலம் தேவை என தொடர்ந்து 58 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த ஸ்ரீராமுல் போட்டி அவர்களின் மரணத்தைத் தொடர்ந்து மொழிவாரி மாநிலங்கள் அமைவது வலுப்பெற்றது. அவர் இறந்த நாளிலிருந்து தொடர்ந்து நான்கைந்து நாட்கள் பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் பல்வேறு வகையிலான போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அதன் அடிப்படையில் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு தெரிவித்தார்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினம் தான் தென்னிந்தியாவின் மிக்கப்பெரிய நிகழ்வாக இன்றும் கருதப்படுகிறது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படுவதென்பது தம் மொழியை வளர்ப்பதற்காகவும், தம் இனமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காகவும், தம் எல்லைகளை வகுத்துக் கொள்வதற்காகவும் என்ற அடிப்படையிலேயே பிரிக்கப்பட்டது.

1956ல் மாநில மறுசீரமைப்புக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் ஆந்திரா, கர்நாடகம், கேரள மாநிலங்கள் சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாநிலங்கள் அமைந்தன. ஆனால் அதே வேலையில் குஜராத்தையும், மாராட்டியத்தையும் இணைத்து பம்பாயை தலைமையாகக் கொண்டு இருமொழிகள் உள்ள மாநிலமாக உருவாக்க பரிந்துரை செய்தது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் வேண்டுமென்றால் விதர்பா பகுதியை ஒன்றிணைத்து மராத்தி மக்களுக்கான மாநிலமாக உருவாக்கிக் கொள்ளுங்கள் என இக்குழு பரிந்துரை செய்தது. நாங்கள் மட்டும் என்ன இளிச்சவாயர்களா என வரிந்து கட்டிய மராத்திமக்கள் சம்யுக்த மஹாராஷ்டிரா சமிதி கட்சியின் தலைவர் கேசவ்ராவ் ஜேதேயின் தலைமையில் 1956 நவம்பர் 1 ல் மாபெரும் கண்டனப் போராட்டத்தையும், ஊர்வலத்தையும் நடத்தினார். . மும்பையை உள்ளடக்கிய மாராட்டிய மாநிலம் கோரிய ஊர்வலத்தில் ஃபுளோரா ஃபவுண்டன் என்னும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிகளுக்கு 105 பேர் பலியாயினர். இந்நிகழ்வுக்கு பொறுப்பேற்று பாம்பே மாநிலத்தின் முதல்வர் மொரார்ஜி தேசாய் பதவியைத் துறந்தார்.

சம்யுக்த மஹாராஷ்டிரா சமிதி 1960 தனது குறிக்கோளை அடைந்தது. 1960ம் ஆண்டு மே 1 ல் குஜராத்தை உள்ளடக்கிய பாம்பே மாநிலம் பிரிக்கப்பட்டு மராத்தி பேசும் மக்களுக்காக மராட்டிய மாநிலம் என உருவாக்கப்பட்டது.



ஆக, கடுஞ்சினம் கொண்ட பால் தாக்கரே சச்சினைக் கடிந்து கொண்டதன் காரணம் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். பல்வேறு மக்களின் இடைவிடாத போராட்டதில் பெற்ற நகரை மிக எளிதில் மும்பை அனைத்து இந்தியர்களுக்கு சொந்தம் என தாரைவார்த்துக் கொடுக்கும் சச்சினை கடிந்து கொண்டதில் என்ன தவறு உள்ளது?. மராட்டிய மக்களின் மொழிக்கும், வளர்ச்சிக்கும், அம்மக்களின் வேலைவாய்ப்புக்கும், அடிப்படை உரிமைக்களையும் பாதிக்காத வகையில் செயல்படுகின்ற வகையில் அனைத்து இந்தியரும் மும்பையை சொந்தம் கொண்டாடுவதில் தவறுகளே அல்ல. கருத்துச் சொல்லும் பிரபலங்கள் இதுபோன்ற கருத்துக்களையும் சேர்த்துச் சொல்ல வேண்டும். எல்லாவற்றையும் பொத்தாம் பொதுவாகச் சொன்னால் இப்படித்தான் ஆகும். இதை தாக்கரேயும் ஒத்துக் கொள்வார். இது முமபைக்கு மாத்திரமல்ல, பெங்களூர், சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் சேர்த்துத் தான்.

மும்பை மராட்டியத்துக்குச் சொந்தம். மராட்டியம் இந்திய அரசுக்குச் சொந்தம். சரி தானே ? உங்களோட கருத்தையும் சொல்லுங்க.. அப்டியே ஓட்டையும் போடுங்க..

Read more...

ஈர்த்ததில் .. - காதுல பூ

”இலங்கையில் தமிழர்களை மீள்குடியமர்த்தக் கோரி தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் போராட்டங்கள் நடைபெற்று, ஒட்டுமொத்தச் சங்கங்களும், குழுக்குளும் அனைத்து இடங்களிலும் மறியல், போராட்டம் என மாநிலத்தின் அனைத்து துறைகளும் ஸ்தம்பித்து மாநிலத்தின் சட்ட ஒழுங்குகள் மிகப்பெரும் கேள்விக்குறியாக்கும் நிலையில், தமிழக முதல்வரின் அழுத்தங்களால் அனுபவமற்ற வெளியுற மந்திரியாக இருக்கிற எஸ்.எம்.கிருஷ்ணாவை அனுப்பாமல் நிதியமைச்சராக இருக்கிற பிரணாப் முகர்ஜியை ஏற்கனவே உள்ள அனுபவத்தின் மூலம் சரியாக தீர்வு காண்பார் என இந்தியா அவசர நடவடிக்கையாக அனுப்புகிறது.

இப்படி ஒரு நிலை இருந்திருந்தால் நாம் அதை நம்பலாம், ஆனால் இச்செய்தியில் முதலில் சொல்லப்பட்ட சூழ்நிலைகள் எதுவுமே இல்லை. (வெட்கப்பட வேண்டும் தான்..) இலங்கையின் ராணுவ அதிகாரியும், சீன பாகிஸ்தானின் ஆதரவாளரான சரத்பொன்சேகா தனது பதவியை ராஜினமா செய்து விட்டு அரசியல் நுழைவதாலும், ராஜபக்சே ராணுவ புரட்சி ஏற்படப் போகிறது என பயந்து இந்திய ராணுவத்தின் உதவியை நாடினார் என அறிக்கை விட்டதும் அங்கே சென்று அரசியல் நிலைகளை ஆராய்ந்து ராஜபக்சேவுக்கு ஆதரவான நிலையைத் திரட்ட ஓடிக்கொண்டிருக்கும் இந்திய வல்லரசு சகாக்களுக்கு எங்கே தமிழர்களின் கவலைகளை கவனிக்கப் போகிறார்கள். ஏன் இந்த அவசரம், என்ன செய்ய வேண்டும், யாரைப் பார்க்க வேண்டும், என்ன பேச வேண்டும் என ஏற்கனவே டெல்லியில் முடிவு செய்துவிடப்பட்டது. இதில் இலங்கை செல்கின்ற வழியில் சென்னையில் கருணாநிதி சொல்லியனுப்பியதாக அமைச்சர் பொன்முடியால் சொல்லப்பட்ட விடயங்களை பிரணாப் முகர்ஜியிடம் சொல்லியாகிவிட்டது. பொன்முடி சொன்னவற்றை இந்த காதில் வாங்கி அந்த காதில் வழியனுப்பி வைத்திருப்பார் முகர்ஜி .

இந்த பொன்முடி சந்திப்பின் பயன் எல்லாமே அன்று இரவு வரும் கலைஞர் செய்திகளில் மீள்குடியமர்த்தத் தான் பிரணாப் முகர்ஜி அவசரமாகச் செல்கிறார் என அறிவிக்கத்தான் என்பது விபரம் தெரிந்தவர்கள் தெளிவாக அனைவருக்கும் உணர்ந்திருப்பார்கள். அச்செய்திகளில் தமிழக முதல்வர் திரு ”மு.கருணாநிதி கேட்டுக் கொண்டதன் பேரில்” என இருப்பது தான் மிகப்பெரும் காமெடி. கிடைக்கும் வாய்ப்பையெல்லாம் ஒட்டாக மாற்றும் தந்திரம் எங்கே கற்றுக் கொண்டார்களோ ?! நடுவண் அரசு தமது காதுகளில் மாட்டிவிடும் பூக்களை அப்படியை தமது ஊடகங்களின் மூலம் தமிழக மக்களுக்கு மாட்ட முயற்சிக்கும் அபத்தமான முயற்சி இது ?!

எங்களுக்கு அறிக்கைகளும், செய்திகளும் தேவையில்லை.. தீர்வைக் கொடுங்கள் அய்யா !

------------------x--------------------

பதவி, அதிகாரம், பணம் ஆகியவற்றின் மூலம் பலமுள்ள ரெட்டி சகோதரர்கள் தனக்கு எதிராகவோ அல்லது தமது நலன்களுக்கு பாதகம் ஏற்படுத்தும் வகையில் அரசு முற்பட்ட நிலையில் தனது அதிகார, பண பலத்தின் மூலம் கணிசமான எம்.எல்.ஏக்களை கூட்டிக் கொண்டு போய் அடைத்து வைத்துக் கொண்டு மாநில அரசின் வளர்ச்சிக்கு நல்ல முதல்வர் தேவை என முதல்வரை மாற்ற வேண்டும் என மிரட்டியதும், பின் மாற்றுவதற்குப் பதில் தனது பாதகமான எவற்றையும் பண்ணக்கூடாது என சமரசம் ஆகி கேக் ஊட்டி மகிழ்ச்சியுடன் மாநிலம் திரும்பிதும் அபூர்வமாய் அப்பட்டமாய் நிறைவேறியதை ஓட்டு போட்ட மாநில மக்களும் நாட்டு மக்களும் நல்லா பார்த்து ரசித்துக் கொண்டிருந்தோம். அதுசரி வேறென்ன செயவது ஓட்டு வாங்கி ஜெயித்தவுடன் தமக்கு எங்கே இலாபம் வரும் பார்த்து எல்லா எம்.எல்.ஏக்களும் ஆதரவு கொடுக்க் வேண்டியது தான்.

எடியூரப்பா தனது ஆதரவாளரான ஷோபா அவர்களின் ரெட்டிக்களுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்ந்தே அனைத்துக் காரியங்களுக்கும் நடந்தேறியிருக்கிறது. நல்லதைச் செய்ய நினைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இந்நிலை தொடர்ந்தால் பாவம் என்ன தான் செய்வார்கள். அன்று குமாரசாமி எம்.எல்.ஏக்களை கடத்திக் கொண்டு போய் ஆட்சியில் அமர்ந்தார். இன்று ரெட்டிக்கள் கடத்திக் கொண்டு போய் மிரட்டுகிறார். எம்.எல்.ஏக்கள் கடத்தல் கர்நாடகாவின் கலாச்சாரமாகவே மாறுவது விந்தை தான். தன்னிச்சையாக எதுவும் முடிவு எடுக்ககூடாது, குழு அமைத்துத் தான் அரசின் முடிவை அறிவிக்க வேண்டும் என புதிதாக எழுதப்படாத விதி ஒன்று எடியூரப்பாவுக்கு இடப்பட்டு விட்டது. பாவம் அவர், அடிப்பட்ட புலியாக இருக்கிறார். இருந்தாலும் ரெட்டிக்களுக்கு எதிரான சூழ்ச்சிகள் தொடரும் என்றே நினைக்கிறேன். பார்ப்போம், பாதிக்கப்படப் போவது ரெட்டிக்களா, இல்லை எடிக்களா, அல்லது தென்னிந்தியாவில் காலூன்றியிருக்கும் பி.ஜே.பியா என்று.
------------------x--------------------

சென்ற வாரம் வெள்ளிக்கிழமை பெங்களூரில் நியூஸ் 9 எனும் செய்திச் சேனலில் முழுக்க முழுக்க ஆக்கிரமிப்பு செய்யப் பட்டிருந்த ஒரு செய்தி. எம்.பி.ஏ படிக்கின்ற பிரியங்கா என்னும் பெண், தன் காதலானான ஆனந்த் என்பவர் தன்னை திருமணம் செய்வதாக ஏமாற்றி கற்பமாக்கி விட்டு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்ளப் போகிறார் எனத் தெரிந்து திருமண மண்டபத்திற்குச் சென்று செய்த கலாட்டாவில் மணமகன் ஆனந்தின் உறவினர்கள் அடித்து காயப்படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். காவல்துறையில் முன்பே புகார் செய்யப்பட்ட போதும் நடவடிக்கை எடுக்காததால், ஊடகங்களுக்கு முன்பே அறிவித்துச் சென்றதால் அனைத்தையும் வீடியோக்களில் பிடித்து நாள் முழுதும் ஒளிபரப்பி மணமகனின் குடும்பத்தை நாறச்செய்து விட்டார்கள்.

இந்த காதல் ஜோடிகளின் பெயர் ஆனந்த்-பிரியாங்கா. இது போன்ற அதே நிகழ்வுகள் வெவ்வேறு இடங்களில் பல்வேறு பெயர்களில் இவ்வகையான நிகழ்வுகள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. காதலில் காமம் கசந்த பின் ஏமாற்றம் போன்ற எத்தனையோ கதைகள் வந்து கொண்டே இருந்தாலும் திருந்துவதாக இல்லை. தன்னை ஏமாற்றியவன் தண்டிக்கப்பட வேண்டும் என முனைந்து அனைத்துப் பெண்களும் வருவதில்லை, ஆதலால் இவ்வகை ‘காதலர்கள்’ தைரியமாய் உலா வந்து கொண்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த ‘ஏமாற்றங்களை’ மறந்து விடுகிறார்கள், அல்லது மறக்கபடவேண்டிய சூழ்நிலையிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆக, பெண்களை உஷாராக இருங்கள், தவறினால் உறுதியுடன் இருங்கள் எனக் கேட்டுக் கொள்ள நான் கடமைப்பட்டிருக்கிறேன்.




தற்போது ஊடகத்தின் கவனத்தைப் பெற்று விட்டதால் மணமகன் ஆனந்துக்கு எதிரான போராட்டமும், சட்டமும் தனது கடமையை செய்து கொண்டிருக்கிறது. ஆனந்த கைது செய்யப்பட்டு 15 நாள் காவலில் வைக்கப்பட்டுள்ளார். திருமண மண்டபத்தில் அடித்து காயப்படுத்திய, மணமகனை கட்டாயப்படுத்திய குடும்பத்தினரை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான மேலதிக விபரங்கள் இருந்தால் அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்.

Read more...

சிலை உண்டு, நமக்குள் வள்ளுவன் வர வழியுண்டா ?


ஒரு சிலை ! பதினெட்டு ஆண்டுகளாய் பிரச்சனைகளால் திறக்கப்படாமல் பெங்களூரில் மூடப்பட்டிருக்கிறது. உலகப் பொதுமறை நூலொன்றை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வாழ்க்கைக்கான நல்வழிகளை நம்முலகுக்கு உணர்த்தியவருக்கு பெங்களூரில் சிலை வைக்கப் போராட்டம். ஒரு சிலை வைப்பதால் ஏதோ அப்பகுதியையே கைப்பற்றியது போல் வரும் எதிர்ப்பாளார்களை என்னவென்று சொல்வது. சரி இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகு விடிவுகாலம் வந்து எதியூரப்பாவின் எண்ணங்களினாலும், கருணாநிதியின் வேண்டுகோளினாலும் சிலை நிறுவப்படுகிறது என்றாலும் அதனைக் கட்டிக் காப்பது யார் ?! பெங்களூரில் ஏதெனும் பிரச்சனை ஆரம்பித்தது என்றால் முதலில் கை வைக்கப்படும் முதல் தமிழனாய் வள்ளுவர் இருப்பது சரியாய்த் தெரியவில்லை தானே ?

அவர்கள் கை வைத்தால் சென்னையில் வைக்கப்படும் சர்வக்னர் சிலை சும்மா இருக்குமா என்றாலும் இது தேவையற்ற வீணாண அதிர்வுகளை உண்டாக்கும். ஏற்கனவே தமிழகம் மாவட்டங்களில் ஏற்படும் சாதித் தலைவர்கள் சிலை உடைக்கப்படும் போது ஏற்படும் கலவரங்களை கலக்கமுடன் கண்டு வருகிறது. கன்னட இலக்கியம் இதுவரை ஏழு ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது. அத்துனை சிறப்பு வாய்ந்த பெருமைகளை கன்னட மொழியும், இலக்கியமும் புலமை பெற்றதாய் உள்ளது. ஆனால் தனது சகோதர மொழியின் இலக்கியப் புலவரான வள்ளுவனை எதேதோ பிரச்சனைகளைச் சொல்லி எதிர்ப்பு காட்டும் எதிர்ப்பாளர்களை கன்னட இலக்கியம் விட்டு வைத்திருக்கின்றது. ”மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்” எனக்கூறிய வள்ளுவன் கூற்று இப்பிரச்சனைகளில் எவ்வாறு கூறியிருக்கிறார்.

வள்ளுவர் சிலை பெங்களூரில் இருப்பதால் என்ன பயன்? யாராவது ”ஹு இஸ் திஸ்” எனக் கேட்டால் “அவர் தமிழ் புலவர், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தார், இரண்டு வரிகளில், ஏழு வார்த்தைகளில் திருக்குறள் எனும் நூலை 1330 குறள்களை எழுதி வைத்துவிட்டுச் சென்றுள்ளார். அவரது திருக்குறள் தமிழையும் தாண்டி எண்ணற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது எனும் விவரங்களைத் தாண்டி..


ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும் - ஒழுக்கத்திற்கு
யாகாவாராயினும் நாகாக்க - நாவடக்கத்திற்கு
அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு - அன்பிற்கு
பொய்யா விளக்கே விளக்கு - வாய்மைக்கு
கற்க கசடறக் கற்பவை - கல்விக்கு
முகநக நட்பது நட்பன்று - நட்புக்கு
பிறன்மனை நோக்கா பேராண்மை - வாழ்வியலுக்கு
புணர்தலின் ஊடல் இனிது - காமத்திற்கு

இவைதவிர

வீரத்திற்கு, மானத்திற்கு, ஈகைக்கு, நாட்டிற்கு, அறிவுக்கு, கேள்விக்கு, பெருமைக்கு, மானத்திற்கு, சூதிற்கு, கள்ளுண்ணாமைக்கு, உழவுக்கு, பழமைக்கு, குறிப்புக்கு, நினைவுக்கு, பிரிவிற்கு, நாணத்திற்கு, துறவுக்கு, புகழுக்கு, பொறையுடமைக்கு, விருந்தோம்பலுக்கு, புணர்ச்சி விதும்பலுக்கு, புலவி நுணுக்கத்திற்கு


என எத்தனையோ கருத்துக்களை எழுதி வைத்ததன் பெருமையே அதனை நாம் வழிமொழிந்து நமது வாழ்வியலின் கொள்கைகளாய் கடைபிடித்து வருவது தானே ?! வள்ளுவனின் குறளையும், வள்ளுவரையையும் மனதிலேற்றி நமது வாழ்வியல் கொள்கைகள் வள்ளுவனின் குறளைப் பின்பற்றித்தான் என குரல் கொடுப்பது எப்போது ?!

Read more...

பூமி வெப்பமடைகிறது !

- நிலவன்

சமீபத்தில் மும்பையில் அலைகள் நூறு வருடங்களில் இல்லாத அளவுக்கு உயர எழும்பியது. இதற்கு காரணமாக பூமி வெப்பமடைந்து கொண்டிருக்கிறது என காரணம் கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் பூமி வெப்பமடைவதால் பனிப்பாறைகள் உடைந்து கடலின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டு “சுனாமி” போன்றவைகள் நிலப்பகுதிக்குள் நுழையும் அபாயம் உள்ளது. இம்மாதிரியான ஆளுயர் அலைகளும், சுனாமியைப் போன்றவையுமாக கடல்நீர் நிலப்பகுதிக்குள் பரவ ஆரம்பித்தால் நாம் நமது எல்லைகளை காலிசெய்து கொண்டே செல்ல வேண்டியது தான்.

அண்டைநாடான பாகிஸ்தானிடமிருந்து நமது நிலப்பரப்பை தற்காத்துக் கொள்ளவும், பாதுகாக்கவும் எத்தனையோ கோடிகள் பாதுகாப்புக்கு என ஒதுக்கப்படுகிறது. ஆனால் பூமி வெப்பத்தால் தீபகற்பமான இந்தியாவின் பல ஆயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்புகள் கடலால் ஆக்கிரமிக்கப்பட்டால் அதன் இழப்பு எத்தனை கோடிகளாய் இருக்கும் என்று. சற்றே நினைத்துப் பார்த்தால் மிகப்பெரிய ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுக்கத் தவறுவதில்லை.

இவ்வுலகைப் பற்றிய வரலாறுகளை ஏறக்குறைய 2000 ஆண்டுகள், 3000 ஆண்டுகள் என எண்ணற்ற வரலாறுகளைப் படித்திருக்கின்றோம். ஆனால் வாகனங்கள், கணிப்பொறி, தொழிற்சாலைகள், நவீனத்துவங்கள், ரோபோக்கள், விமானங்கள் என நாம் காண்டுபிடித்த அறிவியல் வளர்ச்சிகள் பயன்பாடு செய்யப்பட்ட நூறு வருடங்களுக்குள்ளாகவே அதனை தாறுமாறாய் உபயோகித்து அழிவுக்கு இட்டுச் செல்கிறோமோ எனத் தோன்றுகிறது. கணிப்பொறியின் பயன்பாட்டுக்குப் பின் எத்தனையோ துறைகள் மிகவேகமாய் தன் வளர்ச்சியினைக் கொண்டு செல்கிறது. கணிப்பொறி முறையாய் செயல்பாட்டுக்கு வந்து செயல்பட ஆரம்பித்து வெறும் 50 வருடங்களைச் சொல்லலாம். ஆனால் கணிப்பொறி மூலம் எண்ணற்ற துறைகள் கணிப்பொறியிடன் சமமாக முன்னேறியுள்ளன.

பூமி வெப்பமாவதை கண்டுகொள்ளாமல் விட்டால் இன்னும் 50 வருடங்களில் உலகம் அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் சொல்லி வருகிறார்கள். இதனை நாமும் கண்முன்னாக உணர முடிகிறது. உதாரணமாக பத்து வருடங்களுக்கு முன் பெங்களூரின் வெப்பநிலை கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. இன்னும் பத்து ஆண்டுகளில் இதன் வெப்பநிலை எவ்வாறு இருக்கப்போகிறது? இதனைக் கட்டுப்படுத்த என்ன வழி ?! காரணம் என்ன?
இந்த பத்து ஆண்டுகளில் பெங்களூர்க்கான வளர்ச்சி எனக் கொண்டால் வாகனங்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது, கட்டிடங்களின் வளர்ச்சி அபரிதமாய் வளர்ந்திருக்கிறது. அக்கட்டிடங்களைக் கட்டுவதற்கு ஏனைய இயற்கை வளங்களான மரங்கள் அழிக்கப்பட்டிருக்கின்றன.

ஆக அழிவுக்கான காரணங்கள் வேகமாய் வளர்கின்றன, ஆனால் நம்மைக் காப்பவைகளான இயற்கை வளங்கள் குறைந்து வருகின்றன. மரங்களை வளர்க்க வேண்டும், காடுகளை அழிக்கக் கூடாது, பாலித்தீன் போன்றவைகளை பயன்படுத்தக் கூடாது, எரிபொருள்களை தேவையில்லாமல் செயல்படுத்தக் கூடாது என எத்தனையோவைகள் இருக்கின்றன. ஆனால் இவையனைத்தும் அனைவராலும் மீறப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது. பூமி வெப்பத்தைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு சில சமூக அமைப்புகள் தாங்களின் முயற்சிகளை செய்து வருகின்றன என்றாலும் பூமி வெப்பத்தை குறைப்பதற்கான ஆக்கப்பணிகளில் செயற்பட்டு விதிகளை செயல்படுத்தி நடைமுறைப்படுத்துவது தான் சரியானதாய் இருக்கும். இல்லையெனில் நாளைய சமுதாயம் நாம் சரியாக செயல்படவில்லை என்று நம்மைப் பழிக்கும்.

Read more...

ஈர்த்ததில்....மறுபடியும்

ஈர்த்ததில் என தலைப்பு வைத்ததே படித்ததில், பார்த்ததில் ஈர்த்தவற்றை எடுத்துப் இங்கே பதியலாம் எனற எண்ணத்தில் தான் என்றாலும் அவ்வப்போது நேரம் கிடைக்கையில் எனது எணணங்களையும் கருத்துக்களையும் பதிவிட்டுக் கொண்டு தான் வந்திருக்கிறேன். இருப்பினும் சொந்தமாக இடும் பதிவுகள் அதிகமாக இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணங்கள். இதில் அவ்வப்போது என்ன புதிதாய் பதிவு போட்டீர்களா என கேட்டு ஞாபகப்படுத்துவது தோழி தமயந்தி மட்டும் தான் என்றாலும் நானும் பதிவிட வேண்டும் என எண்ணம் மேலோங்குகிறது ஆனால் நேரம் ஓய்வாய் அமர்ந்து எழுதவேண்டியவற்றை எடுத்துக் கொடுக்க அனுமதிப்பதில்லை.

ஒவ்வொரு நிகழ்வுகளிலும் எனது கருத்தைப் பதிவிட ஆவல் இருந்தாலும் அதை செயல்படுத்த சில நேரங்கள் தேவைப்படுகிறது என்றாலும் சோம்பலும் ஒரு காரணமாய் வந்து தடுத்தாள்கிறது. எப்போது எழுதி வைத்த கவிதை ஒன்றை இன்னும் பதிவேற்றவில்லை, மேலும் பாதியிலேயே விடப்பட்ட கவிதையையும் இன்னும் முடிக்கவில்லை. பதிவுக்கென ஒரு அரை மணிநேரம் ஒதுக்கி எழுத முனைகிறேன்.

நாகர்கோயில் பயிலரங்கில் சந்தித்த முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் மிகவும் எளிமையாக இருந்தார். தமிழுக்கான பணிகளில் தன்னை சீரியதாய் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார். அத்துடன் தன்னைப் போல் தமிழுக்கு பணியாற்றிட ஏனையவர்கள் தயாராய் இல்லாமல் இருக்கின்ற வருத்தம் அவரிடம் நிறைய காணப்படுவதை காணமுடிகிறது. தனக்குத் தெரிந்த இணைய அறிவுகளை தமிழுக்கான பணிகளில் முடுக்கிட அவர் முனையும் காரியங்களை மிகுந்த பாராட்டத்தான் வேண்டும். தமிழுக்கான பணிக்கு பாராட்டு தேவையில்லை என்றாலும் அவர் தம் பணிகளைக் கண்டாவது மற்றவர்கள் தத்தம் வழியில் பணிகளை செய்திட வேண்டும் எனும் எண்ணங்களும் மேலோங்குகிறது.

அவர் தம் பணியினை மேலும் சிறக்கின்ற வகையில் தமிழ் இணையப் பயிலரங்கக் குழுவினை ஆரம்பித்துள்ளோம். பயிலரங்க நிகழ்வுகள் மேலும் சிறக்கத் தேவையான ஆவணங்களையும் அச்சுப் பிரதிகளையும் உருவாக்கும் முயற்சிகள் நடைமுறையில் உள்ளன. இக்குழுவில் இணைய விருப்பமுள்ளவர்கள் உங்களது ஆலோசனைகளையும், பணிகளையும் பங்கிட்டுக் கொள்ள இப்பதிவின் வாயிலாக வரவேற்கிறேன்.

கடந்த வார நிகழ்ந்த ஒரு சோகமான நிகழ்வாக மைக்கேல் ஜாக்சனின் மரணத்தைக் கூறலாம். இசை, நடனம் என ஒன்றால் உலக மக்களை தன் நடனத்தால் கட்டிப்போட்ட ஒரே மனிதன் மைக்கேல் ஜாக்சன். தனது வாழ்க்கையில் எத்தனையோ சர்ச்சைகளைக் கொண்டிருந்தாலும் அவர்தம் அரை ஆயுள் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியதில் ஆச்சரியமில்லை தான். அவரது ஆட்டத்தைக் கண்டே அலறி அழும் ரசிகர்கள் கூட்டத்தைக் கண்டிருக்கிறோம், ஆனால் அவரின் ம்ரணம் ?! இசையின் மரணமாய், நடனத்தின் மரணமாய்த் தான் அது இருந்தது.



மூன்று, நான்கு நாட்களாக தினசரிகளில் குத்தாட்டம் போட்டு குதூகலம் அடைந்து கொண்டிருந்த குழுவினரின் நிழற்படங்கள் முதல்பக்கத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தன. அவற்றிற்கான காரணம் ஓரினச் சேர்க்கையாளர்களின் வாழ்வும் உரிமையும் நியாயமானதே என தில்லி உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பளித்த மகிழ்ச்சியினால் தான் அது. கலாச்சாரமாய், பண்பாடாய் நாம் வாழ்ந்து வந்தோம் எனக் கூறி நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிருக்க வேண்டிய பணியினை அந்நிகழ்வை எதிர்ப்பவர்கள் கையாள்கிறார்கள். உலகமயமாக்கலின் அடுத்த வழியாக உலகின் அடுத்தடுத்த மாற்றங்களை நாம் கையாண்டு செல்வதற்கான வழியாக இதைக் காண்கிறோம்.


சரி.. இப்போது அதிகாலை 1 மணி ஆகிறது, அடுத்த பகுதியில் மீண்டும் சந்திக்கிறேன்... நேரம் கிடைக்கையில்..

Read more...

கலைஞர் உண்ணாவிரதம் : வெற்றியா ? தோல்வியா ?

காலை முதல் உண்ணாவிரதமிருந்து மதியம் 12 30 மணிக்கே இலங்கையிடமிருந்து பலமான ஆயுதங்களை பிரயோகிக்காமல் போரைக் கையாள்கிறோம், மக்களை பாதுகாக்க வழிசெய்கிறோம் என கூற வைத்த கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆனால் இதை ஒன்றை வைத்து இந்த வெற்றியை பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மேலும் பல இனப்படுகொலைகளை மறைக்காமல் இருந்தால் சரி. 

இவர்களிடம் இருக்கும் ஊடக பலத்தைக் கொண்டு இவர்கள் செய்யப்போகும் பிரச்சாரங்கள் மிகைப்படுத்தியதாய் இருக்கும். திருமாவளவனின் உண்ணாவிரதம், மாணவர்களின் உண்ணாவிரதம், வழக்கறிஞர்களின் உண்ணாவிரதம், பெண்களின் உண்ணாவிரதம் என எவற்றையும் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லாத சூரிய ஊடகங்கள் கருணாநிதியின் இவ்வெற்றியை வெகுவாக கொண்டாடுவதோடு, மேலும் பல இனப்படுகொலைகள் இலங்கையில் ஏற்பட்டால் அவற்றை மறைக்கவே செய்யும். 

இனப்படுகொலைகளும் தொடர்ந்து நடக்கின்றன என அறிவித்தால் தற்போதைய வெற்றியை பிரச்சாரத்தில் மேற்கொள்ள முடியாதே ? ஆக கருணாநிதியை வரலாறு மன்னிக்க வேண்டுமெனில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கொண்டு மேலும் கொலைகள் நடைபெறாமல் இருக்கவும், பேச்சு வார்த்தை மேற்கொண்டு இலங்கைக்கும், ஈழத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டு அங்கே அமைதி ஏற்பட வழிவகை செய்யலாம்.. 

இவற்றை மேற்கொண்டால் காலம் கடந்தாலும் வரலாறு கலைஞரை மன்னிக்கும், இல்லையெனில் இவை ஆரிய, வடநாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போல் “தேர்தலுக்கான நாடகம்” மட்டுமே என தமிழினம் உணரும், என்றும் தமிழினம் மன்னிக்காது. 

Read more...

ஒற்றுமை வேண்டும் ..

சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்தித்த பின் இலங்கையில் நடக்கும், நடந்த கொடுமைகளைக் கண்டு "இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சமவுரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான்" என ஜெயலலிதா உறுதி மேற்கொண்டுள்ளார். இத்திருப்புமுனையை ஏராளமான தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இத்தருணத்தில் கருணாநிதியின் உண்ணாவிரதமும் மத்திய அரசின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை.

ஆயினும் இவர் செய்வது நாடகம், அவர் செய்வது நாடகம் என அறிக்கைப் போரிடாமல் இலங்கைத் தமிழர்களின் தமிழீழக கனவை நனவாக்க இருபெரும் கட்சிகளும் முயற்சித்தால் தமிழினம் என்றுமே மறவாத நன்றியினை, பெருமையினை இவர்கள் பெறுவார்கள்..

அரசியல் தவிர்த்து ஒற்றுமையுடன் இவர்கள் பாடுபடுவார்களா ?

Read more...

காதலில் காமம்...தொடர்ச்சி

நான் பதிவிட்ட ‘காதலில் காமம், கசந்த பின் ஏமாற்றம்’ க்கு தோழி ஒருவரிடமிருந்த வந்த கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.


ஆண்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறா ? அவர்களின் மீது ஆழமான அன்பு வைப்பது தவறா ? ஒரு பெண்ணின் உச்ச கட்ட நம்பிக்கை தான் அவள் வீட்டின் கவுரவும் மற்றும் அவளின் எதிர்காலம் அனைத்தைதும் காதலனின் விருப்பத்திற்காக இழக்கிறாள். ஆனால் ஆண்கள் சுயநலமியாகவும், நம்பிக்கை துரோகிகளாகவும், உறுதியான மனநிலை இல்லாதவர்களாகவும் இருப்பது இதற்குக் காரணம். ஆடை அழகாக, ஒழுக்கமாக இருந்தால் மட்டும் விட்டு விடுவார்களா என்ன ? - பெயர் வெளியிடாத ‘ஈர்த்ததில்’ வாசகி

ஆண், பெண் என வேறுபட்டு இருந்தாலும் பருவ வயதாலும், உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டு கொள்கிற செயல்முறைக்கு ஒழுக்கம் என்னும் பெயரில் ஆணாதிக்க துணை கொண்டு குற்றம் சாற்றிடல் நியாயம் இல்லை தானே? பாலின பாகுபாட்டைக் கொண்டு ஒருவன் மற்றொருவரை குற்றவாளி எனக் கூறுவது தான் கொடுமையிலும் கொடுமை. எதுவாயினும் இதில் நீக்கமற நிலைத்திருப்பது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே. காதலில் காமம் நெருக்கங்களையும் , அன்பையும், நம்பிக்கையையும் அதிகம் ஆழப்படுத்துகிறது. சில இடங்களில் சந்தேகங்களையும், வெறுப்புகளையும் ஏற்படுத்துகிறது.

Read more...

காதலில் காமம், கசந்த பின் ஏமாற்றம்...

அறிவிலியின் பதிவுகளிலிருந்து


அன்புடன் அந்தரங்கம், உண்மைக்கதை போன்றவைகள் படிப்பதற்க்கு சுவாரசியமாக இருக்கும். இது உங்களின் சுவாரசியத்திற்காக அல்ல, வாழ்வியல் பாடங்களுக்காக.. 

சிந்தியுங்கள் நண்பர்களே !

என்னதான் படித்துக் கல்வி அறிவு பெற்று விட்டாலும், சமூகத்திலும் வேலை வாய்ப்புகளிலும் ஓரளவிற்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளைப் பெற்று விட்டாலும் இன்னமும் கூட ஆண்களை நம்பித் தங்களைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெண்களைத் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

திருப்பூரில் பிறந்து வளர்ந்த 23 வயதான பிரியதர்சினி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்.

பிறந்ததில் இருந்தே தைரியசாலியாக இருந்த இந்தப் பெண் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அதற்காகத் திருப்பூரில் உள்ள தனது குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் சென்று வேலை பார்க்கும் அளவுக்குத் தைரியம் உள்ளவராகத்தான் இருந்து உள்ளார்.

சென்னையில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி ஒரு இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். வாரம் ஒருமுறை தனது சொந்த ஊரான திருப்பூருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி ரயிலில் செல்லும் போது ஒருமுறை எதிர் இருக்கையில் பயணம் செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து உள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட உடனேயே இருவருக்கிடையேயும் காதல் கனிந்து விட்டது. பார்த்த உடன் பற்றிக் கொண்ட காதலுக்கு பிரியதர்சினியின் தைரியமான சுபாவம் ஊக்கம் தரக் காதல் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது,

பிரியதர்சினி வீட்டை விட்டு வெளியில் தங்கி இருந்தது இந்தக் காதல் பறவைகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சென்னையில் உள்ள திரையரங்கம், பூங்காக்கள், கடற்கரை என்று சிறகு விரித்துப் பரந்த இந்தக் காதல் பறவைகளுக்கு நாளடைவில் சிற்றின்பம் அலுத்து விடப் பேரின்பம் தேட முனைந்து உள்ளனர்.

கேள்வி கேட்கக் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில் அடிக்கடி வெளியூர் சென்று அங்குள்ள விடுதிகளில் இருவரும் தனியாகத் தங்கித் தங்கள் காதலை வளர்க்க ஆரம்பித்து உள்ளனர்.

பலமுறை இது போன்று வெளியூர் விடுதிகளில் தங்கி வரம்பு மீறி உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்து உள்ளனர் இந்தப் புனிதமான காதல் ஜோடிகள். காதலன் விரும்பிய போதெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னையே அவனுக்கு விருந்தாக்கித் தனது காதலனை இன்பத்தில் திளைக்க வைத்துத் தானும் இன்புற்று வந்திருக்கிறார் இந்தப் பெண்.

திருமணத்திற்கு முன்பே தான் விரும்பிய போதெல்லாம் தன்னுடைய காம இச்சைகளைத் தீர்த்து வைத்துத் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்த பிரியதர்சினியைப் பற்றி அவரது காதலனுக்கு திடீரென சந்தேகம் வந்து உள்ளது.

திருமணத்திற்கு முன்னர் சிலநாட்கள் மட்டுமே பழகிய தன்னுடன், பலமுறை தகாத உறவு வைத்துக் கொள்ளச் சிறிதும் தயங்காத இந்தப் பிரியதர்சினி எப்படி ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும் என்று எண்ணி உள்ளார் அந்த யோக்கியமான காதலன்.

அந்தப் பெண்ணைத் தன் விருப்பம் போல அனுபவித்து முடித்து, அந்தப் பெண்ணின் மீது தனக்கு இருந்த எல்லாவிதமான இச்சைகளையும் தீர்த்துக் கொண்ட பின்னர்தான் இந்தப் புனிதக் காதலனுக்கு இப்படிப்பட்ட ஒரு ஞானோதயம் தோன்றி அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அந்தக் காதலன் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அந்தப் பெண்ணுடனான உறவைத் துண்டிக்க முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை சந்திப்பதைத் தவிர்த்த அவர், தனது அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டிருக்கிறார்.

இன்பம் வேண்டும் என்ற போதெல்லாம் தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு, பின்னர் கருப்புச் சக்கையைப் போலத் தன்னைத் தூக்கி எறிய, தனது காதலன் முடிவு செய்து விட்டதை அறிந்த அந்தப் பெண் அதிர்ந்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை அந்த இளைஞனைக் கெஞ்சிக் கூத்தாடி உள்ளார்.ஆனாலும் அதற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த இளைஞனின் மனது சிறிதும் மாறவில்லை. பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று முற்றாக மறுத்து விட்டிருக்கிறான் அந்த இளைஞன்.

பிரியதர்சினி தைரியசாலி அல்லவா, உடனே காவலர்களிடம் புகார் கொடுத்து தனக்கு நியாயம் பெற்றுத் தரும் படி முறையிட்டு உள்ளார். காவலர்களின் விசாரணையின் போதும் பலத்த நிர்பந்தத்திற்குப் பின்னரே அந்த இளைஞன் பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளார்.

இந்த இளம் பெண்ணான பிரியதர்சினி ,

நாகரீகம் என்ற போர்வையில் கண்டது காதலில் விழுந்தது,

சில நாட்கள் பழகிய உடனேயே அந்தக் காதலன்தான் தனக்கு உலகம் என்று நம்பித் தன்னை முழுமையாக அவனுக்குக் கொடுத்தது,

காதல் என்பதையும் தாண்டித் தனது உடல் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் தனது காதலனுடன் எல்லை மீறிப் பலமுறை உல்லாசத்தை அனுபவித்தது,

தான் ஒரு பெண் என்பதையும் - சமுதாயத்தில் பெண்ணிற்குரிய கட்டுப்பாடுகளைய்ம், பொறுப்புகளையும் மறந்து - தனது கற்பையே காவு கொடுத்தது,

பின்னர் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த போது அழுது புலம்பியது,

என்ற சம்பவங்கள் வரை பிரியதர்சினி தொடர்ந்து தவறுகளையே செய்து வந்திருந்தாலும் பின்னர் காவல்துறை மூலம் நீதியைப் பெற்றது புத்திசாலித்தனம் என்றால் அதை விட முன் யோசனையுடன்- தீர்க்க தரிசனத்துடன் - இன்னொரு முடிவையும் தைரியமாக எடுத்து உள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே தன் மீது இத்தனை சந்தேகம் வைத்த தனது காதலன் இப்போது காவலர்களின் மிரட்டலால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ள சூழலில் அவனைத் திருமணம் செய்து கொண்டால் தனது எதிர்காலம் எப்படி வளமாக இருக்கும்? என்று எண்ணி அஞ்சியுள்ளார் பிரியதர்சினி.

நிதானமாக சிந்தித்து சமயோசிதமாக செயல்பட்டு உள்ளார் அந்தப் பெண், தன்னை விரும்பியபடி எல்லாம் அனுபவித்து விட்டு, காரியம் முடிந்த உடன் கழட்டி விட்டு விடத் தீர்மானித்த - தன் மீது சந்தேகப் பட்ட - அந்த இளைஞன் இனிமேல் தனக்கு இனிமையான வாழ்வினைத் தருவான் என்று நம்புவது ஒரு முட்டாள் தனமான நம்பிக்கையாக இருக்குமே தவிர புத்திசாலித் தனமான முடிவு அல்ல என்று முடிவெடுத்து இருக்கிறார் அந்தப் பெண்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், காவலர்களின் மிரட்டலுக்குப் பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்ட அந்த இளைஞனை உதறி விட்டு விட்டு நடையைக் கட்டி உள்ளார் அந்தப் பெண்.

இவ்வளவு புத்திசாலித் தனமாகவும் , தீர்க்கமாகவும் சித்தித்து தைரியமாகச் செயல்படக் கூடிய துணிவு உள்ள பிரிய தர்சினியைப் போன்ற பெண்கள் கூட காதல் என்று வரும் போது மட்டும் இப்படி அவசரப்பட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவதான் வேதனையாக உள்ளது.

இளம் பெண்கள் படிக்கும் போதே அவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்ளுவது என்பது பற்றிய பயிற்சிகளையும் பெண்களின் மனவலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது மிக அவசியம்........

Read more...

வெறுப்பிலிருந்து தப்பிக்க !


அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்.
உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

Read more...

’நம்பிக்கைகள்’ பட்டியலில் கல்கி

ஆனந்த விகடனின் Top 10 நம்பிக்கைகளில் இடம் பிடித்திருக்கிறார் கல்கி.  அவருக்கு வணக்கங்களும், மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துகளும், 



திசை வென்ற திருநங்கைகளில் ஒருவர். திருநங்கைச் சமூகத்தின் குரலாக, 'சகோதரி' என்னும் இதழைத் தொடங்கியதுதான் கல்கியின் முதல் முகவரி. 'இப் படிக்கு ரோஸூ'டன் இணைந்து 'சகோதரி ஃபவுண் டேஷன்' அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, கல்கியின் ஒவ்வொரு செயல்பாடும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கே அர்ப்பணிப்பானது. கடலூர் குடிகாரத் தம்பதிகள் 500 ரூபாய்க்குத் தங்கள் குழந்தையை விற்க, அதைத் தத்தெடுத்து வளர்க்கிற கல்கி, இப்போது தாயுமானவர். திருநங்கைகளுக்கான ஊடகங்களை

Read more...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள்

பார்த்ததும்..ஈர்த்ததும்...(3)

இது ஓர் புதுமையான போராட்டம் அல்ல.. புதுமையானவர்களின் போராட்டம். உள்நாட்டில் இனம்,மொழி, உறவு, சாதி என எதையும் பாராது பாலினத்தின் அடையாளமின்றி அங்கீகாரமின்றி ஒடுக்கப்பட்ட ஓர் இனம் வெளிநாட்டில் ஒடுக்கப்பட்டும் சிங்கள இனவெறிச் செயலில் கொலையாகிக் கொண்டிருக்கும் தம் இனத்திற்கு ஆதரவாய் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம்.

ஆம் நண்பர்களே,

சென்னை சேப்பாக்கத்தில் திசம்பர் 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் உள்ள திருநங்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்துடன் ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். இப்போராட்டத்தை நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இப்போராட்டத்தில் திருநங்கைகள் தவிர ஏராளமான பத்திரிக்கையாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என சிறப்பாக போராட்டம் நடைபெற்றது.



அவ்வப்போது திருநங்கைகள் அவர்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் முதன் முதலாக ஈழத்தமிழர்களுக்காக திருநங்கைகள் போராட்டம் நடத்தியிருப்பது மிகுந்த பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும். கல்வி, வேலைவாய்ப்பு, ஊடகம், சமூகபணி என மெல்ல மெல்ல அவர்களின் பார்வைகளும், பணிகளும் திரும்பியிருப்பது ஓர் நல்ல முன்னேற்றத்தை திருநங்கைகளுக்கு, அவர்களின் தவறான பார்வையை வீசும் சமூகத்திற்கும் தருகிறது.

சகோதரி என்னும் இதழை நடத்தி வரும் கல்கி, சுடர் எனும் அமைப்பின் செயலாளர் பிரியா பாபு, விஜய் தொலைக்காட்சி புகழ் இப்படிக்கு ரோஸ், லிவிங் ஸ்மைல் வித்யா எனும் ஊடகங்களுக்கு தெரிந்த முகங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.



கல்கி பேசுகையில் பலதுறைகளில் முன்னேறி வரும் திருநங்கைகளை புறக்கணிக்காமல் ஆதரவுக்கரம் கொண்டு அவர்களையும் சமூகத்தில் ஒரு மனிதராய் பாருங்கள் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் இனவெறியுடன் நடந்து கொண்டு தமிழ் மக்களை அழிக்கும் சிங்கள அரசுக்கும் கண்டனம் செய்தார். லிவிங் ஸ்மைல் வித்யா ஓர் நல்ல எழுத்தாளர் என்பதால் அதிகம் பேசுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் சுருக்கமாக முடித்துக் கொண்டார். பின்னால் பேசிய சில திருநங்கைகளும் தாங்களின் வலிகளையும், வேதனைகளையும் கூறியதோடு தமிழர்களுக்காக தாம் கொடுக்கும் நோக்கத்தையும் கூறினர். அவ்வப்போது ஒப்பாரிப் பாட்டுக்களையும் பாடினர், அப்பாட்டுக்களின் முழு வரிகளும், வலிகளும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.

சுபாஸ்னா என்னும் கல்லூரி மாணவி திருநங்கைகளின் துயரால் மனம் பாதிக்கப்பட்டு அவர்களின் மீது சமூகத்தின் பார்வையை மாற்றிட ஆராய்ச்சி பல செய்து தம் கல்லூரியில் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் திருநங்கைகள் நிலை விளக்கி மாற்றம் உண்டு பண்ணியிருக்கிறார். அவர் தம் உரையின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் பெண்மையையும், ஆண்மையையும் உணர்ந்து திருநங்கைகளை ஒதுக்கும் மனநிலை நீங்கி மதிக்கும் மனநிலை உருவாகிட கேட்டுக் கொண்டார். சகலமாய் திருநங்கைகளிடம் பேசி, அன்பு பாராட்டி, அவர்களுடன் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்ததில் தெரிந்தது அவரின் ஆராய்ச்சிப் பணிகள்.





சினிமா கலைஞர்களான தயாரிப்பாளர் வி.சேகர், ஆர்.கே.செலவமணி, தமிழ் ஆர்வலர் தியாகு, ஜெகஸ்தர் திருநங்கைகளை பாராட்டி பேசியதோடு ஈழத்தமிழர்களை ஆதரித்தும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டித்தும் பேசினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் தாம் பிரதமரை சந்தித்த போது நடந்த சம்பங்களை விளக்கி தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிற நடுவண் அரசையும், ஏதோ ஒருவன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்து வந்திருப்பது போல் கொடுத்து வந்திருப்பதையும், இயலாமையின் விளிம்பில் தமிழக தலைவர்களும், தமிழனும் இருக்கிறான் என்பதை தோலுரித்து மிகுந்த வேதனையுடன் சொன்னார். அத்துடன் தமிழகத் தலைவர்களை விமர்சித்த இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவையும் கண்டித்தார். மாலை ஐந்து மணி அளவில் திருநங்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

பரவலான அறிவில்லாமல் தம் சிறு அறிவிலிருந்து விமர்சிப்பவர்களுக்கு மத்தியிலும், பதவி சுகங்களுக்காகவும், சுயநல விரும்பிகளாகவும் ஈனத்தனமாய் ஈடுபடும் ஒரு சில நபர்களிலிருந்து, அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு ஒற்றுமையுடன் தம் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகைகளுக்கு குரல் கொடுக்கும் இத் திருநங்கைகளின் வலிகளை உணர்வோம், வாய்ப்பளிப்போம் !

Read more...

மதங்கள் மறந்து மனிதம் வளர்ப்போம் !

பார்த்ததும்..ஈர்த்ததும்...(2)


மும்பை வழக்கம் போல் தாக்குதலாகி இருக்கிற்து.. அரசியல் கட்சிகளும் வழக்கம் போல் ஓர் அறிக்கை, தீவிரவாதிகளுக்கு ஒரு கண்டனம், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை பதவி விலக வைக்கும் கோரிக்கை, மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டு பணிக்குச் செல்லும் வழக்கமான நிகழ்வுகளுக்கு மேலே “பொறுத்தது போதும்” என்னும் சிறியதொரு மாற்றங்களைக் காண முடிகிறது. நடுவண் அரசும் இம்முறை தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை குற்றம் சாட்டி தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. தீவிரவாதத்தின் தீவிரத்தை நேரலையில் ஒளிபரப்பி மக்களுக்கு உண்மை உணர்த்தி உணர்ச்சிகளை எழுப்பி குடிமகனின் கடமை என்னவென்பதை உணர்த்தி பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டென்றாலும் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களை படமெடுத்து தப்பி வந்தவர்களை தாவி பிடித்து பேட்டி கண்டுகொண்டு ராணுவ நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பி தீவிரவாதிகளுக்கு உதவுவது மாதிரியான செயல் என்னவென்று தெரியவில்லை. இம்மாதிரியான தருணங்களில் நேரலைகளை தவிர்ப்பது நல்லது, அல்லது தடை செய்ய வேண்டும் தான்.



பாதுகாப்பு படையினரும் திறமையாகப் போரிட்டு சிலர் உயிரையும் தியாகம் செய்தது பெரும் வருத்தமளிக்கிறது. பல்வேறு தருணங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மிக முக்கியமான உயர் அதிகாரிகளும் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தீவிரவாதிகள் மிக நுணுக்கமாய் நாட்டில் உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் செய்யும் அளவுக்கு நமது பாதுகாப்பு இருப்பது மிகுந்த வேதனை தான். நாட்டில் பாதுகாப்புக்கு மட்டும் செலவிடப்படும் கோடிகளை என்ன பண்ணுகிறார்கள் என்ற கேள்வியும் வருகிறது. நீர் வழியே ஒரு நாட்டிற்குள் நுழைந்து நாடு முழுவதையும் சுமார் 60 மணி நேரம் பதட்டத்தில் வைக்கும் இந்த புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான தருணங்களில் சிறப்பாக செயல்பட எல்லா காவல் துறை அதிகாரிகளால் முடியுமா? துப்பாக்கியை பெரும்பான்மையானவர்களுக்கு இயக்கவே தெரியாது. தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட வகை துப்பாக்கிகளால் தான் இயக்க முடியும்.


தீவிரவாதம் ஆரம்பிக்கப்படும் போதே அதாவது சுட ஆரம்பிக்கும் போதே தகர்த்தெறிந்திருந்தால் பெரியளவு பாதிப்புகள் கட்டுப்படுத்த முடியும். ஆனால் காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கியைத் தூக்கி கொண்டு ஓடி ஒழியும் எங்கே காண்பீர்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ? சோம்பேறிகளாய், பெரும் தொப்பை உடையவர்களாய், மாமூல் பண்ணவும், அப்பாவி மக்களை மிரட்ட மட்டுமே தெரிந்த காவல் துறை என்ன செய்ய முடியும் ? அவர்களை ஆளும் அரசால் தான் என்ன செய்ய முடியும்?


தீவிரவாதம் எங்குமே எதிர்வினையாகவே கொள்ளப்படுகிறது. அதாவது முன்னால் செய்த நிகழ்வுகளின் எதிர்வினைகளே ஆகும். சிறுபானமையினருக்கும், பெரும்பானையினருக்கும் ஏற்படும் சிறு சிறு தவறுகள் பெரியனவாகி சகிப்புத் தன்மையின்றி மக்களை சவப்பெட்டிக்குள் தள்ளுவதற்கான ஆயத்தங்களை மனிதர்களின் மனங்களே வழி செய்கிறது.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்பது மாதிரி மற்றொருவர் வழிபடும் கோயிலை இடிப்பானேன் ? பெரும்பான்மையினர் நம்பும் இடத்தை விட்டுக் கொடுத்து தனது பண்பை உலகிற்கு உணர்த்த சிறுபான்மையினர் வழிவகுத்திருக்கலாம் ? எங்கோ தனது மதம் அழிந்து விடுமோ என்றெண்ணியே இளரத்தங்களில் வன்மை வளர்த்து நெருப்பு வளர்த்து தீவிரவாதத்தை வளர்ப்பது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ எல்லாமே தீவிரவாதம் தான்.
கண்முன்னே காணும் ஒரு நிகழ்வுக்கு உனது ரத்தம் துடித்து அந்நிகழ்வுகளின் காரணகாரர்களை களைந்திட உன் உள்ளம் துடிக்குமாயின் தீவிரவாத நபர் உன்னைக் கையாண்டால் நீயும் ஒரு தீவிரவாதிதான். உனக்கு கிடைத்திடாத ஒரு தீயவழி எங்கோ வறுமையிலிருக்கும் இளைஞனுக்கு தீவிரவாதியாகும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

இதில் அரசியல்வாதிகள் பண்ணும் அக்கிரம அநியாயங்கள் வெட்கித் தலைகுணிய வைக்க வேண்டியவை. எங்கும் எதிலும் எவ்வளவு ஓட்டுகள் விழும் என்ற எண்ணம் கொண்ட ஓட்டுப்பொறுக்கிகளாக இருப்பது தான். ஒவ்வொரு நிலையிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் அரசியல் ஓட்டுக்களுக்காக இயக்கப்படுகின்றன. அறுபது நாட்களுக்கொருமுறை அழைக்காமல் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்னும் அளவுக்கு பாதுகாப்பில் அவ்வளவு ஓட்டை. அவ்வளவையும் புறந்தள்ளி விட்டு எந்த கட்சியை சமாதானப்படுத்தலாம் எங்கே ஓட்டைப் பொறுக்கலாம் என வழக்கமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவே முயல்வதில்லை. மக்களுக்கான அரசு என்பது போய் ஏதோ ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு தள்ளவது தான் அரசு என்பதில் தான் குறியாயிருக்கிறது.



ராமனோ, கிருஷ்ணனோ, விநாயகனோ, யேசுவோ, அல்லாவோ எல்லாமே கடவுள் தான்.. அவர்களை நாம் யாரும் பார்த்ததில்லை ஆனால் அவர்களின் பெயரில் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறோம்.. மதங்களை நம்பி மனிதம் அழியலாமா? மதங்களை மறப்போம், மனிதம் காப்போம்.. !

Read more...

மனிதம் கொண்டு புனிதம் வளர்ப்போம்.

பார்த்ததும்.. ஈர்த்ததும்.. (1)


கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக கல்வி ஒன்றினால் தான் முடியும் என்ற பெரும் வைராக்கியத்துடன் வறுமை நிலையிலும், பல்வேறான சாதீய கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகி மாணவர்களுடன் அமர்வதற்கும், தங்குவதற்கும் என பெரும் அவமானங்களுக்குட்பட்டு அமெரிக்கா, இங்கிலாந்து வரை படிக்க வேண்டியவைகளைப் படித்து பின் தம் இனத்திற்கான அங்கீகாரம் பெற எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டு இந்தியா சுதந்திரமடைந்து சட்ட அமைச்சராகி உடல்நிலை பொருட்படுத்தாது பல்வேறு மாதங்கள் இரவும் பகலுமாய் சட்டவரைவு பணி மேற்கொண்டு இந்திய நாட்டிற்கான சட்டத்தையும், இனம் என பாராது கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த ஒரு மேதாவியை, அறிவுச்சுரங்கத்தை, ஆற்றல் மிக்க தலைவரை படித்த, எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகள் அவரின் பெயரை பயன்படுத்த மறுப்பதென்பது ஏன்?

சிலைகள் உடைப்பதும், பெயரை மறுப்பதும் என ஒரு ஆற்றல் மிக்க தலைவரை நாம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மனித மடையர்களால் வகுக்கப்பட்டிருக்கும் சாதிகள். புனிதப்படுத்தப்பட வேண்டிய மதங்களில் ஏனோ புண்களாய் சாதீய பிரிவுகள்.

பண்பில்லையெனினும் தம் இனம் மட்டும் பார்த்து ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் ஏன் இங்கே செழுமை பெற்றிருக்கிறது? எந்த ஒரு செயலையும், செயலுக்கும் காரணமாய் நிற்கும் தலைப்புகளையும், தலைமைகளையும் அவர் சார்ந்த சாதீ தவிர்த்து, தனது சாதீ தவிர்த்து நல்லவைகளையும், தீயவைகளையும் பகுத்தறிந்து பார்த்து படிப்பது தானே நம் முன்னோர் நமக்கு அளித்த நல்ல பண்பு.

படிக்கின்ற வயதிலே இளம் ரத்தம் துடிக்கின்ற நிலையிலே சாதீயத்தை தீட்டி தம் நெஞ்சினில் தீயதை வளர்க்கு சில பல தீயசக்திகளிடம் தம் மூளையை கொடுக்கும் மாணவர்கள் தன்னிலை அறிவதெப்போது?

நாம் மனிதர்கள்...
நாம் தமிழர்கள்..
சாதிகள் மறப்போம்..
மதங்களை மறப்போம் - நம்
சுயநிலை அறிவோம்

மனிதம் கொண்டு
புனிதம் வளர்ப்போம்.
மாணவர்களே..!

Read more...

தந்தி அனுப்புங்கள் நண்பர்களே !


புகைப்படம் பார்த்தே நெஞ்சம்
புதைகிறேதே..

புதுவழி வேண்டி மனம்
புகைகிறதே

குண்டு மழை பொழிந்து
கூண்டோடு அழிக்கும்
இழிசெயல் இன்றே
ஒழிந்திட வழி வேண்டும்....

இரக்கமில்லா மனிதர்களின்
அரக்க ஆற்றலிருந்து
விடுதலை பெற வழி வேண்டும்...



"இலங்கையில் இடைவிடாது நடக்கும் ராணுவத்தினரின் தாக்குதலில் இருந்து இலங்கை வாழ் தமிழர்களை காத்திட அங்கு உடனடி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட வேண்டும்.

இலங்கை தமிழர் பிரச்சனையில் சுமூக தீர்வு கண்டு அமைதி காண வேண்டிய தீவிர முயற்சியில், இதுவரை நடந்துள்ள விரும்பத்தகாத நிகழ்வுகளை எல்லாம் இந்திய பேரரசு மனதில் கொண்டு தயக்கம் காட்டாமல் இந்த இன வெறி படுகொலை தொடர மேலும் இடம் கொடுத்து விடாத அளவுக்கு வழிகாண வேண்டும்"

என்னும் முதல்வர் கருணாநிதியின் வேண்டுகோளுக்கிணங்க...

தந்தி அனுப்புங்கள் நண்பர்களே...

The Prime Minister's Office, ('PMO')
South Block, Raisina Hill,
New Delhi,
India-110 011

Read more...