Showing posts with label தமிழீழம். Show all posts
Showing posts with label தமிழீழம். Show all posts

அழிவுகளில் இருந்து உயிர்த்தெழும் யாழ்ப்பாணம்

Ruins of Northern Sri Lanka 2009 from shedali on Vimeo.

Read more...

பெங்களூரில் மனிதச் சங்கிலி போராட்டம் !



இன மான தமிழ் உணர்வாளர்களே! , களமாடும் போராட்ட வீரர்களே !!,

வருகின்ற ஞாயிறு 07-06-2009 அன்று காலை 10 மணி அளவில் பெங்களூரில் மாபெரும் மனிதச் சங்கிலி போராட்டம் நடை பெற உள்ளது.
தமிழ் ஈழம் அடைய , தமிழர் உயிர், உடமை காக்க இப் போராட்டம் நடை பெறுகிறது. பெங்களூர் கிழக்கு தொடர் வண்டி நிலையம்( East Railway station) அருகில் உள்ள விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கப்பன் சாலை வரை நீண்டு செல்கிறது.
செந்தமிழ் போராளி. சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். மற்றும் கர்நாடகா, தமிழ் நாட்டு தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை அமைப்புகளும், பகுத்தறிவாளர்களும் கலந்து கொள்கிறார்கள்.

விடுதலை புலிகளை அழித்து போரை முடித்து விட்டதாகவும், தமிழ் ஈழ தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களை கொன்று விட்டதாகவும், இனி தமிழ் ஈழ போராட்டம் என்பதே இல்லை எனவும் கூறி இலங்கை, இந்திய உளவு படைகளும் இராணுவமும் சேர்ந்து செய்யும் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் பொய் செய்திகளுக்கும் மத்தியில் இப்போராட்டம் நடைபெற உள்ளது.

ஆகவே, தமிழ் வீரர்களே! , திரண்டு வாரீர் !, அணி அணியாக வாரீர் !, ஆண்கள் , பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், முதியவர்கள், சிறார்கள் அனைவரும் கலந்து கொண்டு " தமிழர்களின் இன மான உணர்வு, போராட்டம் , லட்சியம் சாக வில்லை" என்பதை நிரூபிக்க வாருங்கள். வெற்றியை நிரூபித்து இவ் உலகத்தில் வரலாறு படைப்போம் .

நன்றி
நிலவன்

Read more...

மரணத்தை வென்ற மாவீரன்……….



ஊடகச் செய்திகளினால் பதற்றம் கொண்டிருக்கும் தோழர்களுக்கு தோழர் அறிவழகனின் செறிவு மிகுந்த கட்டுரை.

Read more...

உயிருடன் உள்ளார் பிரபாகரன் - நக்கீரன் கட்டுரை


நன்றி : நக்கீரன்

ஊடகங்களில் ஈழம் பற்றிய செய்திகள் தாறுமாறாக வெளியாகிக்கொண்டே இருந்தன. இந்தியாவில் தேர்தல் முடிவுகளை மக்கள் அறிந்துகொண்டிருந்த நேரம். மே 16-ந் தேதி சனிக்கிழமையன்று வன்னிக் காட்டில் பாரிய அளவிலான திட்டம் ஒன்றிற்குத் தயாராகியிருந்தனர் விடுதலைப் புலிகள்.

நெருங்கி வரும் சிங்கள ராணுவ வளையத்தை ஊடறுத்துத் தாக்கி, புலிகளின் முக்கியத் தலைவர்கள் வெளியேறுவது என்பதுதான் அந்தத் திட்டம். புலிகளுக்கேயுரிய போர் வியூகங்களின்படி நடந்த இந்த ஊடறுப்புத் தாக்குதலில் 100க்கும் அதிகமான சிங்கள ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், பிரபாகரனின் சமகாலத் தலைவரான சொர்ணம் இந்தத் தாக்குதலில் ராணுவத்தினரால் கொல்லப்பட, புலிகளின் முயற்சி தோல்வியடைந்தது.

களத்தில் இழப்புகள் சகஜமானதுதான் என்பதைப் புலிகள் அறிவார்கள். ஆனால், தங்களின் இலட்சியமான தமிழீழத் தாயகம் அமைவதற்கு எதை இழக்கவேண்டும் எதைக் காப்பாற்ற வேண்டும் என்பதிலும் அவர்கள் கவனமாக இருப்பார்கள். அதனால், மே 17-ந் தேதியன்று புலிகளின் மூத்த தளபதிகள் அனைவரும், தங்களுக்கு வழக்கமாகக் கட்டளையிடும் பிரபாகரனிடம், கோரிக்கை வடிவில் ஒரு கட்டளை பிறப்பித்தனர் என்கிறார்கள் தொடர்பில் உள்ள வட்டாரத்தினர்.

தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் இங்கிருந்து வெளியேற வேண்டிய தருணம் இது. ஏணென்டால், சிங்கள ராணுவம் தனது பாரிய படைகளோடு நெருங்கி விட்டது. இது இந்தப் போரின் இறுதிக்கட்டம். இதிலிருந்து தலைவர் அவர்கள் மீண்டால்தான் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க முடியும். நம்முடைய இலட்சியமான தமிழீழத்தை வென்றெடுக்க முடியும் என்று தளபதிகள் சொன்னதை பிரபாகரன் ஏற்றுக் கொள்ளவில்லையாம். நமது மண்ணின் விடுதலைக்காகத்தான் நான் போராடுகிறேன். அதனால் கடைசிவரை இந்த மண்ணில்தான் இருப்பேன் என பிரபாகரன் உறுதியான குரலில் கூற, தளபதிகள் அவரிடம் நீண்ட நேரம் வாதாடியுள்ளனர். இந்த மண்ணில் உங்கட மகன் நின்று போராடட்டும். எங்கட தலைவராகிய நீங்கள் பாதுகாப்பான இடத்துக்குப் போயாக வேண்டும். அப்போதுதான் இந்தப் போராட்டம் எழுச்சியோடு தொடரும் என்று தங்களுடைய கோரிக்கைக்கு அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள்.

தளபதிகளின் கோரிக்கையை யோசித்த பிரபாகரன், தனது மகன் சார்லஸ் அந்தோணியை ஈழமண்ணில் இருக்கச் செய்து போரை தொடர்ந்து நடத்தச் சொல்லிவிட்டு, தளபதிகள் கூறுவதுபோல, அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற நீண்ட யோசனைக்குப்பின் சம்மதித் துள்ளார்.

இதையடுத்து, மே 17-ந் தேதி ஞாயிறன்று இந்தியாவின் ஆங்கில ஊடகங்களில் ஈழநிலவரம் குறித்து சிங்கள அரசு பரப்பிய தகவல்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பாகிக் கொண்டிருந்த நேரத்தில், புலிகள் ஒரு பெருந் தாக்குதல் திட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தியிருந்தனர் என்கிறது கள நிலவரம். மிகச் சரியாக வியூகம் வகுக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட அந்தத் திட்டம் இதுதான் என்றும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.



5000 கிலோ வெடிமருந்துகளை தங்கள் உடலில் கட்டிக்கொண்டு 30-க்கும் அதிகமான கரும்புலிகள் ஊடறுப்புத் தாக்குதல் நடத்துவது என்ற திட் டத்தின்படி இருவரணி, மூவரணியாக கரும்புலிகள் பிரிந்து, முன்னேறி வந்த சிங்கள ராணுவத்தினர் மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தினர். விடுதலைப்புலிகளின் மற்ற படையணியினரும் சரமாரியாக சுட்டுக்கொண்டே ராணுவத்தை எதிர்த்து வீரச்சமர் புரிந்தனர்.

தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்த சிங்கள ராணுவம் இதனை எதிர்பார்க்க வில்லை. தங்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தலைவரைப் பாது காப்பதற்கான ஊடறுப்புத் தாக்குதலில் ஈடுபட்ட புலிகளை ராணுவத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை. இருதரப்பிலும் கடும் சண்டை நடந்த அவ்வேளையில், வெடிமருந்துகளுடன் பாயும் புலிகளைக் கண்டு ராணுவம் சிதறியது. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, பிரபாகரனை அங்கிருந்து பாதுகாப்பாக கொண்டு சென்றனர் தளபதிகள்.

புலிகளின் வசமிருந்த கடல்பகுதியில் போர்த்துகீசியர்கள் காலத்தில் கட்டப் பட்டிருந்த கோட்டை ஒன்று உண்டு. அந்தக் கோட்டைக்குள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர். அந்தக் கோட்டையின் கீழ்ப் பகுதியில் பழையகாலத்து சுரங்கப்பாதை உள்ளது. அந்த சுரங்கப்பாதை வழியாக பிரபாகரனை முள்ளிவாய்க்கால் கடற் பகுதிக்கு அழைத்துச்சென்றனர். அங்கே கடற்புலிகளின் படகு தயாராக இருந்தது. அதில் பிரபாகரனை ஏறச் செய்தனர்.

அதேவேளையில், வன்னிக்காட்டில் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. அப்போது, இன்னொரு தற்கொலைப் படையும் படையணியும் வீரம் செறிந்த தாக்குதலைத் தொடர்ந்தது. மீண்டும் ராணுவத்தினர் சிதற, அந்தத் தருணத்தில் பொட்டு அம்மான் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அப்போது திறம்படக் களமாடியவர் சார்லஸ் அந்தோணி. புலிகளின் தாக்குதலில் சிதறி ஓடுவதும், மீண்டும் ராணுவம் தாக்க வருவதுமாக வன்னிக் களம் அதிர்ந்து கொண்டிருந்த நிலையில், கடற்புலிகளின் தளபதியான சூசையை பாதுகாப்பாக வெளியே அனுப்பும் முயற்சி மேற்கொள்ளப் பட்டது.

தன் குடும்பத்தின் மீது அதிகப் பாசம் கொண்டவர் சூசை. அவரது மனைவியும் 17 வயது மகளும் ராணுவத்தின் பிடியில் சிக்கி சில நாட்கள்தான் ஆகின்றன. மனதை கல்லாக்கிக்கொண்டு, இலட்சி யத்தின் அடுத்த கட்டத்தை அடைவதற்காக பாதுகாப்பாக வெளியேறினார் சூசை.

புலிகளின் அடுத்தடுத்து 23 தற்கொலை தாக்குதல் சம்பவங் களால் இரண்டாயிரத்திற்கும் அதிகமான சிங்கள ராணுவத்தினர் செத்து விழுந்தனர். இந்தத் தாக்குதல்களை முன்னின்று நடத் திய பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி, சிங்கள ராணுவத்தின் தாக்குதலுக்குள்ளாகி களப்பலி யானார். புலிகளின் கடைசிநேர அதிரடித் தாக்குதல், சிங்கள ராணுவத்தின் 58-வது டிவிஷனை நிலைகுலைய வைத்தது. புலிகள் அடிக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற பயபீதியில் ராணுவத்தினர் சிதறி ஓடினர்.வன்னிக்காடு புகை மண்டலமானது. கடைசி இலக்கை நெருங்கிவிடலாம் என நினைத்த ராணுவத்தின் கண்களை கரும்புகை மறைத்து, முன்னேற் றத்தை முடக்கியது.

இதனால் பிரபாகரனையும் பொட்டு அம்மான், சூசை ஆகி யோரையும் பாதுகாப்பாக வெளியேற்றுவது சாத்திய மானது. அவர்கள் தனித்தனி படகில் ஒருவர் பின் ஒருவராகப் பயணித்தனர். கடற்புலிகள் பயன் படுத்தும் படகுகளின் வேகம் சிங்கள ராணுவத்தை மிரள வைக்கக்கூடியது. உதாரணத்திற்கு, ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்குச் செல்ல வேண்டுமென்றால் 12 நிமி டங்களில் அந்தப் படகின் மூலமாகச் சென்று விட லாம். மின்னல் பாய்ச்சலில் செல்லும் அத்தகைய படகுகளில் பிரபாகரனும் முக்கியத் தளபதிகளும் பயணித்து, இலங்கையி லிருந்து கிழக்குத் திசை நோக்கி 3 மணி நேரப் பய ணத்தில் பாதுகாப்பான இடத்தை அடைந்துள்ளதாக கள நிலவரங் கள் தெரிவிக்கின்றன.

சிங்கள கடல் எல்லைக்குட்பட்ட ராணுவக் கப்பல்களை ஏமாற்றி விட்டுச் செல்வது புலிகளுக்கு கைவந்த கலை. அதே நேரத்தில், சர்வதேச கடல் எல்லையில் இலங்கைக்காகத் தீவிரக் கண்காணிப்பை மேற்கொண்டிருக்கும் இந்தியக் கடற் படைக் கப்பல்களின் கண்ணில் மணலை அள்ளிக்கொட்ட முடியுமா என்ற தயக்கம் புலிகள் தரப்பிலேயே இருந் திருக்கிறது. ஆனால், இந்தியக் கடற்படைக்கு ஏற்கனவே உரிய உத்தரவுகள் இடப்பட்டிருந்தன. இலங்கையிலிருந்து வெளியேறும் படகுகளைப் பிடித்துக் கொடுப்பது நமது வேலையல்ல என்பதுதான் அந்த உத்தரவு. பலவித பிரஷர்களால் இந்த உத்தரவு இடப்பட்டிருந்தது. அதனால், அந்த மின்னல் வேகப்படகு சீறிச் சென்றபோது, மேலிடத்து உத்தரவுக்கேற்ப இந்தியக் கடற்படை தனது செயல்பாடுகள் எதையும் மேற்கொள்ளவில்லையாம்.

ஞாயிறன்று புலிகள் மேற்கொண்ட இந்த வெற்றிகரமான ஊடறுப்புத் தாக்குதலுக்குப் பிறகுதான், திங்கட்கிழமையன்று காலையில் கடைசி நிலப்பரப்பையும் பிடிப்பதற்கான கொடூரத்தாக்குதலை சிங்கள ராணுவம் மேற்கொண்டது. பீரங்கிகள், எறிகணைகள் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தி தாக்குதலை நடத்தியபடியே முன்னேறிய ராணுவம், பிரபாகரன் தங்கியிருப்பதாகத் தங்களுக்கு தகவல் வந்த பகுதியில் சகட்டுமேனிக்குத் தாக்குதல் நடத்தி கரும்புகை மண்டல மாக்கியது. எஞ்சியிருந்த புலிகளையும் அப்பாவி மக்களையும் சிங்கள ராணுவத்தின் ஆயுதங்கள் உயிர் குடித்தன.

அந்தத் தாக்குதலின்போதுதான், குண்டு துளைக்காத கவசம் கொண்ட ஒரு ஆம்புலன்ஸ் வண்டியில் பிரபாகரனுடன் பொட்டு அம்மான், சூசை ஆகியோர் தப்பிக்க முயன்றதாகவும் அந்த வண்டிக்கு முன்னால் ஒரு வாகனத்தில் வந்த புலிகள், ராணுவத்தை நோக்கித் தாக்குதல் நடத்தியதாகவும், பதில் தாக்குதலாக ராக்கெட் லாஞ்சர்களை ராணுவம் ஏவியபோது, பிரபா கரனும் தளபதிகளும் சென்ற ஆம்புலன்ஸ் வண்டி தாக்கப்பட்டு மூவரும் கொல்லப் பட்டதாகவும் சிங்கள அரசு மீடியாக்களுக் குப் பரப்பியது. அதனை இந்தியாவின் ஆங்கில சேனல்கள் நொடிக்கொரு முறை பரப்பிக் கொண்டி ருந்தன.

ஞாயிறு இரவி லும் திங்கள் காலை யிலும் சிங்கள ராணுவம் நடத்திய கொடூரத் தாக்குதலில் புலிப்படையினர் பெரு மளவில் பலியாயினர். பிரபாகரன் உள்ளிட்ட அனைத்து தளபதி களின் கதையையும் முடித்துவிட்டோம் என சிங்கள அரசு கொக்கரித்துக் கொண்டிருந்தது. புலிகளை முற்றிலும் ஒழித்துவிட்டதாக பிரணாப் முகர்ஜியைத் தொடர்புகொண்டு ராஜபக்சே தெரிவித்தார்.

பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என இந்திய வெளியுறவுத்துறையும் நம்பியது. இதனை அத்துறையின் செய்தி தொடர் பாளரே பிரஸ் மீட்டில் தெரிவித்தார்.

வன்னிக்காட்டில் சிதறிக் கிடந்த புலிகளின் உடல்களை ராணுவத்தினர் வரிசையாக அடுக்கி வைத்திருந் தனர். சில உடல் கள் கருகியிருந்தன. பிரபாகரன் உள் ளிட்ட புலிகளின் முக்கியத் தலைவர் களை அடையாளம் காண்பதற்காக கருணாவை கொழும்பிலிருந்து தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்தது சிங்கள ராணுவம். புலிகளால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற அச்சத்தில் இருந்த கருணா, அவர் கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டு விட்டார்கள் என்ற தகவலைக் கேட்டு, உற்சாகமாகத்தான் காட்டுப்பகுதிக்கு வந்தார். வரிசையாகக் கிடத்தி வைக்கப் பட்டிருந்த சடலங்களைப் பார்த்த அவருக்கு அதிர்ச்சி.

சிங்கள ராணுவம் கொன்றதாகச் சொல்லப்பட்ட புலிகளின் தளபதிகளில் ஒருவரின் உடலைக்கூட கருணாவால் அங்கு பார்க்க முடியவில்லை. உதட்டைப் பிதுக்கிவிட்டுத் திரும்பிய கருணா, "மொக்கச் சிங்களனுங்க கோட்டை விட்டுட்டானுங்க' எனத் தனது சகாக்களிடம் சொல்லி யிருக்கிறார்.

இந்த நிலையில், செவ்வாயன்று காலையில் இலங்கை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பற்றி எதுவும் சொல்லாதது பலருக்கும் ஆச்சரியமாக இருந்தது. பகல் 12 மணியளவில், நந்திக்கடல் பகுதியில், தலையில் சுடப்பட்ட பிரபாகரனின் உடல் கிடந்ததாக சிங்கள ராணுவம் அறிவித்து, தான் எடுத்த சில க்ளிப்புங்கு களை மீடியாக்களுக்குக் கொடுத்தது.

பிரபாகரனின் தோற்றத்தை விட மெலிந்திருந்தது உடல். அவர் கையில் எப்போதும் கட்டியிருக்கும் வாட்ச் இல்லை. கழுத்தில் கயிறு அணிந்து பாக் கெட்டில் சய னைடு குப்பி வைத்தி ருப்பது வழக்கம். ஆனால், சிங்கள ராணுவம் காட்டிய படத்திலோ சயனைடு குப்பி இல்லை. ஐடென்ட்டி கார்டு காட்டப்பட்டது. இப்படி பல முரண்பாடுகளைக் கொண்ட க்ளிப்புங்கு களைக் காட்டியதுடன், மதியம் கண்டு பிடிக்கப்பட்ட உடலை ஒரு சில மணிநேரத்தில் டி.என்.ஏ சோதனை மூலமாக உறுதிப்படுத்தி விட்டதாகவும் சிங்கள அரசு தம்பட்ட மடித்தது.

தண்ணீரில் கிடந்த உடல் எனச் சொல்லப்பட்ட நிலையில் கைகள் மட்டும் ஊறியிருக்க, முகம் நன்கு ஷேவ் செய்யப்பட்ட நிலையில் மொழுமொழுவென இளவயது பிரபாகரன் போல் இருந்தது. இது எப்படி சாத்தியம் என்பதை தசாவதாரம் படத்தில் மாஸ்க் அணிந்த கமலை பத்து கெட்டப்புகளில் பார்த்த தொழில்நுட்பம் அறிந்தவர்களால் விளக்க முடியும் என்கிறார்கள் தடயவியல் துறையினர்.

சிங்கள அரசின் பிரச்சாரத்தை ஊடகங்கள் திரும்பத் திரும்ப ஒளிபரப்பிக் கொண்டிருந்த வேளையில், நக்கீரனின் தொடர்ச்சியான முயற்சிகளின் மூலம் கிடைத்திருக்கும் உறுதி யான தகவல், உலகத் தமிழர்களின் நேசத்திற்குரிய விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்பதுதான். பிர பாகரனின் மனைவி, மகள், இரண்டாவது மகன் ஆகியோர் பாதுகாப்பாக வெளிநாட்டில் உள்ளனர்.

தன்னுடைய பாதுகாப்பு ஏற்பாடுகளை சரிவர ஏற்படுத்திக்கொண்டபிறகு , பிரபாகரனே ஊடகத்தில் தோன்றி உரையாற்றுவார். அதுவரை சிங்கள ராணுவம் தனது தரப்புச் செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கும். பிரபாகரன் ஊடகங் களில் உரையாற்றும்போது சிங்கள அரசின் மாஸ்க் முகம் அம்பலத்திற்கு வரும் என்கி றார்கள் மிகமிக முக்கியமானவர்கள். நக்கீரனுக்கு கிடைத்துள்ள இந்தத் தகவல், ஆயிரம் மடங்கு நம்பகத்தன்மை வாய்ந்தது என்பதை வாசகர்களிடம் உறுதியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
-காமராஜ்

Read more...

ஈழத் தமிழன் செத்தால் தந்தி; புதல்வர்களின் பதவி வேண்டுமென்றால் டெல்லி


அடடா… கலைஞரின் தமிழின உணர்வு புல்லரிக்க வைக்கிறது. sonia-karu4ஈழத்தில் கொல்லப்பட்ட தமிழனின் எண்ணிக்கை பத்து நூறாகி ஆயிரம் லட்சமாகி இன்று ஆயுளுக்கும் நெஞ்சை விட்டகலாத துன்பமாகிவிட்டது.

தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரது இதயமும் ரத்தம் வடிக்கிறது. ஆனால் இங்கோ அது அத்தனை ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் தேர்தல் பிரச்சினைக்குத் தொட்டுக் கொள்ளும் உறுகாயாகிவிட்டது.

தேர்தல் வரை கொழுந்து விட்டு எரிந்த ஈழப் பிரச்சினை, தேர்தல் முடிந்ததுமே கை கழுவப்பட்டது. தனி ஈழம் என்று சொன்னவர், தேர்தல் தோல்வி தந்த கோபத்தில் ஒரு அறிக்கை விட்டு முடங்கிப் போக, அவருக்குப் போட்டியாக தமிழீழம் வாங்கித் தருவதாகச் சொன்னவர் இப்போது மீண்டும் தபால் அனுப்புவதிலும், தந்தியடிப்பதிலும்ம மும்முரமாகி விட்டார்.

தாயக தமிழினம் இந்த விளையாட்டுக்களை வேடிக்கை பார்க்க, உலகம் பேடித்தனமாய் வாய் மூடிக் கிடக்க, இந்தியப் பாதுகாப்போடு சிங்கள காடையர்கள் எம் உறவுகளைக் மொத்தமாகக் கொன்றழித்துவிட்டனர்.

யாருக்காக தமிழீழம்..? இனி எதற்காக தனி ஈழம்? யார் தலைமையில் தமிழீழம்?

இந்தக் கேள்விகளுக்கு உங்களிடம் பதிலிருக்கிறதா திமுக தலைவர் அவர்களே…

30 ஆண்டு காலம்… ஆயிரக்கணக்கான மறவர்களால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு நாட்டை, ராஜீவ் காந்தி என்ற சராசரி ஊழல் அரசியல்வாதி ஒருவரது மரணத்துக்காக நிர்மூலமாக்கிவிட்டீர்களே… நியாயமா?

ஈழத்தில் எம் உறவுகள் அழியும் போது, வேதனைக் குரலில் நாடகமாடி, தந்திகளையும் கடிதங்களையும் டெல்லிக்கு அனுப்பி வந்த நீங்கள், இன்று மத்திய ஆட்சியில் மகனுக்கும் மகளுக்கும் பங்கு வாங்க, இந்த தள்ளாத வயதிலும், நோயுடன் போராடிக்கொண்டிருக்கும் தருணத்திலும் விமானம் பிடித்து டெல்லி பறக்கிறீர்களே… உலக மகா நடிகரய்யா நீர்…

கொஞ்ச நஞ்சமிருந்த சின்ன மரியாதையும் தூக்கி எறிந்துவிட்டுச் சொல்கிறோம்… பழிவாங்கப்பட்டு, குடும்பங்களையும் எம் இனக் காவலர்களையும் இழந்துவிட்டு கண்ணீருடன் கதறும் எம் உறவுகளின் சார்பில் நின்று உணர்வுள்ள தமிழனாய்ச் சொல்கிறோம்…

எதிரிக்குக் கூட மன்னிப்புண்டு… இனப் படுகொலைக்கு மௌன சாட்சியாய் இருந்த உமக்கு எந்தப் பிறவியிலும் மன்னிப்பே கிடையாது! உங்கள் மரணத்தின்போது சிந்த இந்த தமிழர்களின் கண்களில் ஒரு சொட்டு கண்ணீரும் மிச்சமிருக்காது!

-இழந்த உறவுகளுக்காக இந்தப் பிறவி முழுக்க அழப் பிறந்த ஒரு அப்பாவித் தமிழன்


நன்றி - என் வழி

Read more...

தமிழினப் படுகொலைகள் - ஒரு முழு அறிக்கை பாகம் -1



தமிழினப் படுகொலைகள் - ஒரு முழு அறிக்கை

Read more...

பிரபாகரன் தற்கொலை ?


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் அவரது உடல் கொழும்பில் உள்ள பனகொடா ராணுவ முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இலங்கை ராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் இத்தகவலை இலங்கை அரசும், பாதுகாப்புத்துறையும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. ஆனால் இன்று மாலை இலங்கை அதிபர் ராஜபக்சே தொலைக்காட்சி மூலம் இத்தகவலைத் தெரிவிக்கக் கூடும் என கூறப்படுகிறது.


150 பேர் ஒட்டு மொத்தமாக தற்கொலை..

புலிகள் தலைவர்கள், பிரபாகரனுக்கு மிக நெருக்கமாக இருந்தவர்கள் 150 பேர் 2 நாட்களுக்கு முன் ஒட்டு மொத்தமாக தற்கொலை செய்து கொண்டதாகவும், அந்த உடல்களில் ஒன்று பிரபாகரனுடையதாக இருக்கலாம் என்றும் ராணுவம் கூறியுள்ளது.

பிரபாகரனின் உடல் என்று கருதப்படும் அந்த உடலை அடையாளம் காண்பதற்காக அது கொழும்புவுக்கு கொண்டு சென்றுள்ளதாகவும், அங்கு டி.என்.ஏ சோதனை நடந்து வருவதாகவும் ராணுவம் கூறியுள்ளது.

இதற்கிடையே இலங்கை செய்தித்துறை அமைச்சர் அணுரா யபா சிஎன்என்-ஐபிஎன் தொலைக்காட்சி்க்கு அளித்த பேட்டியில்,

இந்தச் செய்தியை நாங்கள் இப்போது உறுதிப்படுத்த முடியாது. ஒரு உடல் சிக்கியுள்ளது. அந்த உடலை அடையாளம் காண வேண்டியுள்ளது. அதன் பின்னரே இதை உறுதிப்படுத்துவோம் என்றார்.

ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சாமி அதே தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

இரு தினங்களுக்கு விடுதலைப் புலிகளின் கடற்படைப் பிரிவின் தலைவர் சூசை குடும்பத்தினர் ராணுவத்திடம் பிடிபட்டனர். அவர்கள் அளித்த தகவலின்படி 2 நாட்களுக்கு முன் 150 புலித் தலைவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகத் தெரியவந்துள்ளது என்றார்.

பிரபாகரன் இறந்துவிட்டதாகவும் கொல்லப்பட்டதாகவும் இலங்கை அரசு பலமுறை புரளி கிளப்பிவிட்டுள்ளது. இதனால் இந்தச் செய்தியில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை.
-நன்றி தட்ஸ்தமிழ்.காம்

Read more...

2000 தமிழர்கள் படுகொலை : திமுக-காங்கிரஸ் முயற்சி வெற்றி

எவருமே செய்ய முடியாத இவ்வகை சாதனைகளை செய்து வரும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு உங்களின் அரிய வாக்குகளை.. இல்லை நீங்களே முடிவு பண்ணிக்கோங்க..

கலைஞர் : மழை விட்டும் தூவானம் விடவில்லையடா தம்பி..
சோனியா : ஈழத் தமிழர்களை பாதுகாக்க உறுதி மேற்கொண்டிருக்கிறது. ( எல்லோரும் அழிந்த பிறகா ? )










Read more...

ஈழப்போரை நிறுத்த உயிராயுதம் ஏந்தியவர்கள்



ஈழப்போரை நிறுத்த உயிராயுதம் ஏந்தியவர்கள்

Read more...

போர் நிறுத்தமே கோரவில்லை.. கோத்தபயா..


கோத்தபயா அளித்த பேட்டியிலிருந்து..

சண்டை நிறுத்தம் தொடர்பாகவோ அல்லது விடுதலைப் புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதலை நிறுத்துவது குறித்தோ இந்திய அதிகாரிகள் எங்களை வற்புறுத்தவில்லை. அரசின் கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்குவது தொடர்பாகவே அவர்கள் பேச்சு நடத்தினர்

விடுதலைப் புலிகள் மீதான ராணுவ நடவடிக்கையை நிறுத்துவது தொடர்பாக இலங்கைக்கு இந்திய அதிகாரிகள் எவ்வித நெருக்குதலும் தரவில்லை. விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் உள்ள அப்பாவி மக்களை பத்திரமாக மீட்பது தொடர்பாகவே அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

போர் பகுதியிலிருந்து, அரசு கட்டுப்பாட்டுப் பகுதிக்கு தஞ்சம் புகுந்த தமிழர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள வசதிகள் குறித்து இந்திய அதிகாரிகள் இருவரும் அப்போது தி/ருப்தி தெரிவித்தனர். மேலும் இந்தியா சார்பில் நிவாரண உதவியாக ரூ.200 கோடி அளிக்கப்படும் என்று உறுதியளித்தனர் என்றார்.

அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் பிரான்ஸ் ஆகிய மேற்கத்திய நாடுகளும் புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குகளை கருத்தில் கொண்டே போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கைக்கு நெருக்குதல் அளிக்கின்றன. புலம்பெயர்ந்த மக்கள் அளிக்கும் நிதியை அந்நாட்டு அரசியல் கட்சிகள் பெற்றுக் கொள்கின்றன. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை காப்பாற்ற வேண்டும் என்பதே அவர்களது குறிக்கோள்


தாம் நடத்தும் நாடகங்களின் மூலம் திருப்தி அளிக்கிறது, வெற்றி என பறைசாற்றிய கலைஞர் கருணாநிதியின் பதில் என்ன? மத்திய அரசு நமது ஆறு கோடி மக்களையும் ஏமாற்றிக் கொண்டு தன்னையும் ஏமாற்றுவது தெரிந்தும் சுயமரியாதைச் சீடர் இன்னும் வாய் பொத்தி மவுனியாய் இருப்பதற்கு தானா இயற்கை அவரை இவ்வுலகிலும், இருக்கையிலும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது ?!

Read more...

இயற்கை என்ன பாவம் செய்தது ?

அனுதாபம் தேடும் முயற்சி

இன்று நான் திருச்சிக்கு வருவேன் என்று நினைக்கவில்லை. பிப்ரவரி 11ம்நாள் இங்கு வரக்கூடிய அளவுக்கு உயிரோடு இருக்க மாட்டேன் என்று மருத்துவர்கள் கூறினர். அன்று மருத்துவர்கள் கூடி கலந்தாலோசித்து இரண்டு வழிகள்தான் உள்ளது என்று என்னிடம் கூறினர். முதுகில் ஏற்பட்ட வலிக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் உங்களுக்கு 85 வயதாகிறது. இந்த அறுவை சிகிச்சை செய்தால் வெற்றி அல்லது ஆயுள் முடிவுதான் ஏற்படும். இதில் எதை தேர்வு செய்யப்போகிறீர்கள் என்று கேட்டனர். குடும்பத்தினர் அழுது புலம்பினர்.

அறுவை சிகிச்சையால் வரும் முடிவுக்கு தயார் என்று கூறினேன். அவை முடிந்து இரண்டு மாத காலம் ஆகியும் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறேன். இன்றும் 3 மருத்துவர்களை என்னுடன் அழைத்து வந்துள்ளேன்.

எப்படியெல்லாம் திரைக்கதை பாருங்கள்.

அவர்களில் சமீர் என்று முஸ்லீம், சார்லஸ் என்று கிறிஸ்தவர், கோபால் என்ற இந்து பிராமணரும் அடங்குவர். மருத்துவக் குழுவிலும் மதநல்லிணக்கத்தை எதிர்பார்த்தேன்.

இந்த சிகிச்சையை நாட்டின் முன்னேற்றத்துக்கு அளிக்கவும் இதுபோன்ற மதநல்லிணக்கம் வர வேண்டும் என்பது என் ஆசை.

மிகவும் பழைய கதைகள்

குளித்தலை சட்டமன்ற தொகுதியில் அண்ணா என்னை நிற்க சொன்னார். அப்போது முதன் முதலாக விவசாயிகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டேன். 1953ல் கல்லக்குடி போராட்டத்தில் கலந்து கொண்டு 6 மாதம் சிறை சென்றேன். அப்போது என்னுடன் முல்லை சக்தி, கஸ்தூரி ராஜா, குமாரவேலு, கவிஞர் கண்ணதாசன் ஆகியோர் தண்டவாளத்தில் படுத்து போராட்டம் நடத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

அப்போது ஏற்பட்ட வியாதிதான் இதுவரைடிக்கிறது. என்னை தமிழ் தொண்டனாக ஆக்கியது இந்த திருச்சிதான்.

இருவர் தீக்குளித்து மாண்டனர். சரித்திரம் படைத்தவர்கள் இந்த திருச்சியை சேர்ந்தவர்கள். அன்பில் தர்மலிங்கம், எம்.எஸ்.மணி, அழகுமுத்து காமாட்சி ஆகியோரும் சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது காமாட்சியை ஒரு பெண் என தவறாக நினைத்து பத்திரிகையில் செய்தி வெளியிட்டனர். அவர் பெயர் காமாட்சி நாதன் என்பது அதன் பிறகு தான் தெரிந்தது.

திருச்சியில் கிடைத்த இணை பிரியாத நண்பர்கள் இப்போது இல்லை. அவர்கள் இல்லாமல் நான் மட்டுமே இருக்கிறேன். தமிழுக்கு ஆபத்து வந்தால் அந்தத் தமிழை காப்பாற்றுவதற்காக இயற்கை என்னை விட்டு வைத்திருக்கிறது என்று கருதுகிறேன்.

குடும்ப சண்டையில் மூன்று தமிழர்கள் இறந்தனரே.. கைகூப்பிடும் தொலைவில் தமிழினம் அழிகிறதே... பாவம்ங்க இயற்கை விட்டுடங்க...

அறுவைச் சிகிச்சை முடிந்து 2 மாதமாகி விட்டது. டாக்டர்கள் சுற்றுப்பயணம் செய்யக் கூடாது என்றார்கள். ஏன் என்றேன். மீண்டும் கோளாறு வந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றார்கள். இருப்பது ஒரு உயிர், போகப்போவது ஒரு முறை. அது நல்லதுக்காக நல்லவர்களை காப்பாற்றுவதற்காக போகட்டும் என்று அண்ணா கூறினார். அவர் கூறியபடி என்னை உங்களிடம் ஒப்படைத்திருக்கிறேன். குளித்தலையில் இருந்த காலத்தில் இருந்து சொல்லி வருகிறேன்.

அவர் கூறிய எண்ணற்ற கருத்துக்களை, கொள்கைகளை விட்டு விட்டீர்களே.. ?! அப்புறம் ஏன் இப்படி?

இப்போது 85 வயதிலும் சொல்கிறேன். உங்கள் வீட்டுப் பிள்ளை, உங்கள் சகோதரன், உங்கள் சொந்தக்காரன், இந்த மேதினக் கூட்டத்துக்கு வந்திருக்கிறேன். எவ்வளவு நாள் வாழ்கிறோம் என்பது முக்கியமல்ல. வாழும் காலத்தில் என்ன பணியாற்றினோம் என்பதுதான் முக்கியம். தமிழ் இனத்தை வளர்த்தவர்களை மறக்க மாட்டேன்.

தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தில் திருக்குவளை என்ற ஊரில் பிறந்தவன். எனது தந்தை என்னை உங்களிடம் ஒப்படைத்துள்ளார். நான் உங்களுக்கு வேலைக்காரனாகவும், பணியாளனாகவும், தொண்டனாகவும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்.

அப்பப்பா... கண்ணைக் கட்டுதே.. இன்னுமா நாங்க நம்பணும்னு எதிர்பார்க்கிறீங்க.. அல்லது ஏமாறனும்னு எதிர்பார்க்குறீங்க..


என்னை நன்றாக திட்டுங்கள்..

என்னைப் பற்றியும், என்குடும்பத்தைப் பற்றியும் எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் பழித்து பேசுகிறார்கள். மரத்தின் அடியில் மாட்டு சாணத்தை கொட்டினால் அது எருவாக மாறி மரம் நன்றாக வளரும். அதேபோல் என் மீது போடப்படும் பழிகள், எருவாகி என்னை வளர்ச்சி அடைய செய்து கொண்டிருக்கிறது. என்னை நன்றாக திட்டுங்கள். அதை நான் எருவாக மாற்றிக் கொள்கிறேன்.

வடிவேலுவுக்கும் உங்களுக்கும் நெறைய ஒற்றுமை... அது இங்கே நிருபணம் ஆயிடுச்சு.. நிற்க: வடிவேல் காமெடி அண்ணேன்.. என்னைய நல்லா திட்டுங்கண்ணே..

இங்கு உள்ள நாம் அனைவரும் மதத்தாலும், மொழியாலும் ஒன்றாக உள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவின் சின்னம் உதயசூரியன், காங்கிரஸ் சின்னம் கை, விடுதலை சிறுத்தைகள் சின்னம் நட்சத்திரம். வானத்தில் சூரியன் இருக்கும், நட்சத்திரமும் இருக்கும். ( நாங்க இருக்கோம்..ஆனா நீங்க இல்லியே.. )

இதனை கை சுட்டிக்காட்டுவதுபோல நமது சின்னங்கள் பொருத்தமாக இருக்கிறது. இந்த மூன்று சின்னங்களுக்கும் உங்கள் வாக்குகளை அளித்து ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டுகிறேன் என்றார் கருணாநிதி.

அந்தைக் கை எங்களை சுட்டுக்கொண்டே உங்களை சுட்டிக்காட்டுவதை மறந்து, மறைத்து விட்டீர்களே..

Read more...

ஜாலியன் வாலாபாக் படுகொலையும், தமிழீழத் தமிழர் படுகொலையும்


உதம் சிங் என்னும் விடுதலைப் போராட்ட வீரனை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமிதம் கொண்டு .. அத்துடன் ஒரு ஒற்றுமை நமக்கும் உள்ளது என்பதைக் காட்டவே உங்களுக்கு இந்த அறிமுகம். பகத்சிங்கை நமக்குத் தெரியும். இளம் நெருப்பை நெஞ்சினில் நிறுத்தி பிரித்தானிய அரசாங்கத்தை வலிமையான போராட்டத்தின் மூலமே வெளியேற்றி தாய்நாட்டிற்கு சுதந்திரத்தைப் பெற வேண்டும் என்ற கொள்கை கொண்டு தீவிரமாக போராடிய பகத்சிங்குடன் துணையாக உதம்சிங்கும் இருந்தான் என்றால் உங்க்ளால் அவரை புரிந்து கொள்ள முடியும். இவர்களின் தீவிர நடவடிக்கைகளைக் கண்டு தீவிரவாதி என பிரித்தானிய அரசு அறிவித்தது.

இதற்கிடையே ஜாலியன் வாலாபாக் படுகொலை என்ற ஒன்றை நமது சமூக அறிவியல் பாடங்களில் படித்திருக்கிறோம். கி.பி 1919 ஆம் ஆண்டு ஏபரல் 13 ல் மருத்துவர்கள் சத்யா பால், சய்புதீன் கிட்ச்லாவின் கைதைக் கண்டித்தும், பிரித்தானிய அரசுக்கு எதிராகவும் ஜாலியன் வாலாபாக் பூங்கா என்னும் இடத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கிட்டத்தட்ட இருபதாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். தீவிரமான சுதந்திர போராட்ட செயல்களில் ஈடுபட்டிருந்த இளைஞரான உதம்சிங் அப்போது மக்களுக்கு தண்ணீர் ஊற்றிக் கொடுக்கும் பணியிலிருந்தார்.

அந்நேரத்தில் 90 ராணுவ வீரர்கள் ஜெனரல் டயர் என்னும் அதிகாரியின் தலைமையில் அங்கே குழுமியிருந்தனர். சரியாக மாலை 5 15 மணிக்கு பொதுக்கூட்டம் நடந்து கொண்டிருந்த நேரத்தில் எந்தவித எச்சரிக்கையுமின்றி மக்களை நோக்கி சுட்டு வீழ்த்த டயர் கட்டளையிட்டான். பத்து நிமிடங்கள் சரசரவென பாய்ந்த குண்டுகள் ஆயிரக்கணக்கானவர்களின் உடல்களை துளைக்க ஆரம்பித்தது. வெளியே செல்ல ஒரே வழியைக் கொண்டிருந்த பூங்காவினால் மக்களால் எளிதில் வெளியேற முடியவில்லை. பூங்காவின் சுவர்களிலும், கிணறுகளிலும் உயிரைக் காப்பாற்ற குதித்து தப்பிக்க முயன்றனர்.

இப்படுகொலையில் 379 பேர் கொல்லப்பட்டார்கள், ஆயிரத்திற்கும் அதிகமானோர் காயம்பட்டார்கள். இப்படுகொலையில் தப்பித்த எண்ணற்றவர்களில் உதம்சிங்கும் ஒருவர். இதில் ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாகவும் கருதப்படுகிறது. பிரித்தானியர்களுக்கு எதிராக தீவிரவாதத்தை ஒடுக்குவதற்காகவும், போராட்டம் நடத்தும் மக்களுக்கு பாடம் கொடுத்து எச்சரிக்கவும் இப்படுகொலைக்கு முக்கிய காரணியாக பஞ்சாபின் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் என்பவரே ஆவர்.
இந்நிகழ்வு உதம்சிங்கை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தி தனது வாழ்வின் திருப்புமுனையாக ஏற்படுத்தியது. அதன் விளைவாக தனக்குள் அமைதியான உறுதிமொழியை மேற்கொண்டு படுகொலைகளுக்கு காரணமாய் இருந்த கவர்னரை கொலை செய்து உயிரிழந்த மக்களுக்கு சமர்ப்பிக்க சபதம் எடுத்தார்.

அந்நேரத்தில் கவர்னராக இருந்த மைக்கேல் ஓ டயர் மாற்றாலாகி விட்டிருந்தார்.
பல்வேறான பெயர்களில் பல நாடுகளுக்கு பயணித்து மைக்கேல் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்க ஆரம்பித்தார். 1920 ல் ஆப்பிரிக்கா சென்றார், பின் 1921 ல் நய்ரோபி சென்றார். அமெரிக்கா சென்றும் கண்டுபிடிக்க முயற்சி செய்து தோல்வியுற்றார். விடுதலைக்கான புரட்சியில் அமெரிக்காவில் மூன்று வருடங்கள் வெளிநாடுவாழ் இந்தியர்களுடன் பணியாற்றினார். கி.பி 1927 ல் இந்தியா திரும்பினார். பின்னர் லைசென்ஸ் இல்லாத ஆயுதங்களையும், வெடிகுண்டுகளையும் வைத்திருந்த காரணத்திற்காக 1921 ல் கைதானார். இவ்விசாரணையில் 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 1931 ல் விடுதலை செய்யப்பட்ட உதம்சிங் பஞ்சாப் சென்று பெயிண்ட்டராக வேலை செய்து கொண்டே புரட்சிக்கான பணிகளிலும் கவனம் செலுத்தினார். அத்துடன் டயரை கொலை செய்யும் தனது முயற்சியையும் கைவிடவில்லை. 1933 ல் காஷ்மீர் சென்ற உதம்சிங் போலி வேடம் பூண்டு ஏமாற்றி ஜெர்மனிக்குச் சென்றார். 1934 ல் லண்டனை அடைந்த சிங் 9 அட்லர் ஸ்டிரீட், கமெர்சியல் ரோடு ல் வீடு எடுத்து தங்கினார். தனக்கென தனியாக கார் வாங்கி தனது பயணத்துக்கு உபயோகித்துக் கொண்டார். டயரின் இருப்பிடத்தை தெரிந்து கொண்ட மைக்கேல் நிறைய வாய்ப்புகள் கிடைத்தாலும் சரியான வாய்ப்புக்காகவும் உலகமனைத்திற்கும் கொண்டு செல்லும் வாய்ப்புக்காகவும் காத்திருந்தார்.

கடைசியாக அந்த வாய்ப்பு 21 வருடங்கள் கழித்து 1940 ஆம் வருடம் மார்ச் 13 ம் நாளில் வந்தது. கிழக்கு இந்திய சங்கமும், ராயல் செண்ட்ரல் ஆசியன் சொஸைட்டியும் இணைந்து காக்ஸ்டன் ஹாலில் நடத்திய சந்திப்பிற்கு மைக்கேல் ஓ’டயர் பேச்சாளராக வந்திருந்தார். தனது புத்தகத்தில் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியுடன் காக்ஸ்டன் ஹாலுக்கு நுழைந்தார். சந்திப்பு முடிந்ததும் கூடியிருந்தவர்கள் எழுந்து நின்றனர், அந்நேரத்தில் மற்றொருவருடன் பேசுவதற்காக நகர்ந்த மைக்கேல் டயரை நோக்கி சிங் இரண்டு முறை சுட்டார். மைக்கேல் டயர் அந்த இடத்திலேயே இறந்தார். அத்துடன் இந்தியாவின் செய்லாளராக இருந்த லார்ட் செட்லாண்டையும், சர் லூயிஸ் டேனையும், லார்ட் லாமிங்டனையும் சுட்டார். இவர்களனைவரும் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினர். தனது பணியை முடித்த சிங் தப்பிக்க முயலவில்லை. பின் அங்கேயிருந்த காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்த வீரச்செயலைக் கேள்விப்பட்ட இந்திய பொது ஜனங்கள் உதம்சிங்கை ஒரு கதாநாயகனாக பார்த்தனர். சிங்கின் செயலுக்கு மிகுந்த மரியாதையையும், பிரித்தானிய அரசை முடிவுக்கு கொண்டுவர வேண்டுமென்ற முடிவையும் மக்கள் மனங்களில் கொண்டு வந்தது. இந்நிகழ்வு 1942 ல் மகாத்மா காந்தி நடத்திய வெள்ளையனே வெளியேறு போராட்டத்திற்கும், 1947ல் கிடைத்த சுதந்திரத்திற்கும் அடிப்படைக் காரணமாய் அமைந்திருந்தது.

இந்நிகழ்வினைக் கண்டித்த மகாத்மா காந்தி பின்வருமாறு பத்திரிகைக்கு எழுதினார்.

”the outrage has caused me deep pain. I regard it as an act of insanity...I hope this will not be allowed to affect political judgement"”

ஒரு வாரத்திற்கு பிறகு தனது பதிப்பான “ஹரிஜன்” பத்திரிக்கையில் பின்வருமாறு எழுதினார்.

"We had our differences with Michael O'Dwyer but that should not prevent us from being grieved over his assassination. We have our grievances against Lord Zetland. We must fight his reactionary policies, but there should be no malice or vindictiveness in our resistance. The accused is intoxicated with thought of bravery"

ஜவஹர்லால் நேரு தனது நேஷனல் ஹெரால்டுவில் பின்வருமாறு எழுதினார்.

"Assassination is regretted but it is earnestly hoped that it will not have far-reaching repercussions on political future of India. We have not been unaware of the trend of the feeling of non-violence, particularly among the younger section of Indians. Situation in India demands immediate handling to avoid further deterioration and we would warn the Government that even Gandhi's refusal to start civil disobedience instead of being God-send may lead to adoption of desperate measures by the youth of the country"

சுபாஷ் சந்திரபோஸ் மட்டுமே உதம்சிங்கின் செயலை பகிரங்கமாக வரவேற்று பேசினார்.

மக்களின் மனதில் பெரும் மகிழ்வை ஏற்படுத்திய இந்நிகழ்வுகள் மக்களை பழிக்குப் பழிவாங்கியாயிற்று என அமைதிப்படுத்தியதுடன் உதம்சிங்கை தமது கதாநாயகனாக ஏற்றுக் கொண்டார்கள். அத்துடன் உலக ஊடகங்கள் பலவும் ஜாலியன் வாலாபாக் கதையினை தெரிந்து கொண்டன. அத்துடன் டயரின் பங்கையும் தெளிவு படுத்தின. சிங்கை ஒரு விடுதலைப் போராட்ட வீரனாகவும், பயங்கரமாக படுகொலை செய்யப்பட்ட மக்களின் எதிர்விளைவாகவும் லண்டனின் டைம்ஸ் பத்திரிக்கை அங்கீகரித்தது. டயர் இலண்டனில் தான் கொலை செய்யப்பட்டார் எனபது குறிப்பிடத்தக்கது. ஜெர்மன் வானொலி ”மக்களின் அழுகுரல் துப்பாக்கி தோட்டாக்களாக பேசியது” என தொடர்ந்து ஒளிபரப்பினர்.

இதனிடையே கொலைக்கான விசாரணையில் நீதிபதிகள் கேட்ட கேள்விக்கு “நான் தான் கொலை செய்தேன், ஏனெனில் அவர் மேல் எனக்கு ஏற்பட்ட வன்மத்திற்கு பழிவாங்கினேன். மற்றும் கொலையாவதற்கு தகுதியானவர் தான்” என பகிரங்கமாக ஒத்துக் கொண்டார்.

விசாரணை முடிவில் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, 1940 ஜூலை 31ல் தூக்கிலிடப்பட்டார். மற்ற கைதிகளைப் போல சிறைக்குள்ளாக அமைக்கப்பட்டிருந்த இடமொன்றில் புதைக்கப்பட்டார். 1940 மார்ச்சில் நடந்த இப்படுகொலையைக் கண்டித்த இந்திய காங்கிரஸ் தலைவர்களில், 1962ல் ஜவஹர்லால் நேரு ”டெய்லி பிரதாப்” ல் “தூக்கு கயிற்றிற்கு முத்தம் கொடுத்த உயிர் நீத்த ஷாஹீத்-ஐ-அஸாம் உதம் சிங்கிற்கு எனது வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்” என புகழாராம் சூட்டினார்.

இதன் பின்னர் ஜூலை 1974ல் சுல்தான் லோதியின் எம்.எல்.ஏ சாது சிங் தின்னின் பிரதமராக இருந்த இந்திரா காந்திக்கு வேண்டுகோள் விடுத்தார். அவ்வேண்டுகோளின் பேரில் இந்திரா காந்தி பிரித்தானிய அரசிடம் உதம் சிங்கின் உடலை ஒப்படைக்க கோரினார். உதம் சிங்கின் உடலைக் கொண்டு வர சாது சிங்கே இங்கிலாந்து சென்று உதம் சிங்கின் உடலைப் பெற்று வந்தார். தில்லி விமான தளத்தில் இறங்கிய சிங்கின் உடலை சங்கர் தயாள் சர்மா, பஞ்சாப் முதலமைச்சர் ஜெய்ல் சிங் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். இவர்களுடன் பிரதமராக இருந்த இந்திரா காந்தியும் சென்று மரியாதை செய்து பஞ்சாபிலுள்ள சுனம் என்னும் உதம்சிங்கின் பிறந்த ஊரில் எரிக்கப்பட்டார். அவரை எரித்தபின் அவருடைய சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.


பகத்சிங்கை கேள்விப்பட்டிருப்போம், ஆனால் உதம் சிங்கை நிறைய பேர் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன். தினமலரில் வெளியான ஒரு கட்டுரையில் “அகிலேஷ்” என்னும் பெயரில் இடப்பட்டிருந்த மறுமொழியைக் கொண்டே இக்கட்டுரையை விரிவாக்கியிருக்கிறேன்.

இக்கட்டுரைக்கான நோக்கத்தை தற்போது காண்போம்.

இடம்: ஜாலியன் வாலாபாக்
காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக
பொறுப்பாளர்: மைக்கேல் ஓ டயர், பஞ்சாப் கவர்னர்

விளைவு : 400க்கு அதிகமானோர் பலி
1000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
கற்பழிப்புகள் : இல்லை



இந்தியனாய் தனது தேசத்தில் நடைபெற்ற ஒரு படுகொலைக்கு பழிவாங்க திட்டமிட்டு 21 வருடம் காத்திருந்து கொலைகளுக்கு காரணமானவரை இந்தியன் ஒருவர் அவருடைய நாடுக்கே சென்று பழிவாங்கியிருக்கிறார். அவர் இந்தியர்களால் ஒரு தியாகியாகவும், சுதந்திர போராட்ட வீரராக மக்களாலும், தலைவர்களாலும் போற்றப்படுகிறார்.

இந்நிகழ்வை ஒத்த ஒரு நிகழ்வுகளும் ஒன்று இருக்கிறது.




இடம்: தமிழீழம்
காரணம்: மக்களை ஒடுக்குவதற்காக
பொறுப்பாளர்: ராஜிவ் காந்தி, இந்திய பிரதமர்

விளைவு : 5400க்கு அதிகமானோர் பலி
5000க்கும் மேற்பட்டோர் படுகாயம்.
கற்பழிப்புகள்: 800


இலங்கையில் சிங்களர்களுக்கும், தமிழர்களுக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் வெடித்துக் கொண்டிருக்கும் பல்வேறு உயிரழப்புகளுக்காக அனுதாபம் அப்பிரச்ச்னையை தீர்த்து அமைதி ஏற்படுத்திட ( குறித்துக் கொள்ளுங்கள் “அமைதி” ஏற்படுத்திட தான்..) ”இந்தியா அமைதிப் படை” (Indian Peace Keeping Force) என்னும் பெயரில் இலங்கை சென்று ராஜிவ் காந்தி - ஜெயவர்த்தனா ஒப்பந்தம் என்ற பெயரில் ஒப்பந்தம் ஒன்றை எழுதி தயாரித்து அதை ஒத்துக்கொள் என போராட்டத்திற்கு போரிடும் தமிழர்களிடம் கட்டாயப்படுத்தி, பின் ஆயுதம் ஏந்தி ஒடுக்க நினைத்து, போராக வெடித்து கிட்டத்தட்ட 6500 பேர்களின் உயிர்களை வாங்கி, ஆயிரக்கணக்கானவர்களை காயப்படுத்தி, கொடுமைப் படுத்தி, சொல்லவே கூசும் வகையிலான 800 பெணகளைக் கற்பழித்து, கொடுமையினால் கொதிப்படைந்து கிடப்பவனை மேலும் கொடுமைகளுக்கு ஆட்படுத்தி தாயகம் திரும்பிய அமைதிப் படைகளுக்கும், அவர்கள் செய்த தவறுகளின் முழுப்பொறுப்பிற்கும் சொந்தக்காரரான ராஜிவ் காந்தி 6000 தமிழர்களின் கொலைகளுக்கு பழியாக இலங்கைத் தமிழர் சிலரால் கொல்லப்படுகிறார்.

இக்காரணங்களைக் கொண்டு இவ்விரண்டு நிகழ்வுகளையும் ஒப்பிடமுடியாது என்றாலும் மனிதர்களின் உணர்வுகளால் ஒன்றாகத் தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியனாக உதம்சிங்கை தியாகி என பார்க்கும் மக்களின் மனப்பாங்கை தமிழர்களாய் பார்க்கும் மனங்களை தீவிரவாதிகள் எனும் பார்வை கொண்டு நோக்குவதை எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்?

நாம் நமது இனத்திற்கான பழிதீர்த்தலை தியாகம் என்கிறோம் ! அதையே மற்றவர்கள் செய்தால் தீவிரவாதம் என்னும் வாதத்தை எப்படி ஏற்பது? இதை ஒரு இந்தியனாக, தமிழனாக பார்க்க வேண்டாம், ஒரு மனிதாக இருந்து தீர்மானித்துச் சொல்லுங்கள் எது தீவிரவாதம், எது தியாகம் என்று.


இவ்விடயங்களில் புதிராய் பேசும் தமிழல்லாதவர்களுக்கு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அனுப்ப வேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கு முன்னால் வியாக்கியானம் பேசும் சில தமிழர்களல்லவா புரிந்து கொள்ள வேண்டும் எனற முனைப்புடன் விரிவாக எழுதியிருக்கிறேன். அத்துடன் அகிலேஷ் தினமலர் கட்டுரையில் இட்ட ஒரு மறுமொழியை தெளிவாக படித்து தாங்களை தாங்களே தெளிவாக்கிக் கொள்ளுங்கள்.

வாழ்க தமிழுடன்,

தமிழ் நிலவன்.


அகிலேஷின் பின்னூட்டம்.


“ஒரு பெண் தன் கற்பை காப்பற்றி கொள்ள தன் நகங்களை ஆயுதமாக பயன் படுத்தி எதிரியை கொல்லலாம் மற்றும் என் சகோதிரியின் கற்பு பரி போகும் போது நிச்சயமாக் என்னால் அகிம்சையை கடை பிடிக்க முடியாது”
- மகாத்மா காந்தி


1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!

400 மக்களை கொன்றதற்கு உதம் சிங்கிற்கு இவ்வளவு வெறி வருமானால்.....
அதை விட 15 மடங்கு அதிகமான மக்களை (400 பேர் எங்கே - 6200 பேர் எங்கே) இந்திய அமைதி படை கொன்றதற்கு ஈழ தமிழனுக்கு எவ்வளவு வெறி வர வேண்டும்..... வந்தது.
பின் அவர்கள் செய்தால் மட்டும் குற்றமா?

அவர்கள் செய்தால் தீவிரவாதி பட்டம்... நாம் செய்தால் தியாகி பட்டமா?
நல்ல நியாம்டா சாமி..............சிறிது கூட விடுதலை உணர்வு என்றால் என்ன அல்லது இன பற்று என்றால் என்ன என்று தெரியாத பதவிக்காக ** தின்னும் மனிதர்களுக்கு, இந்த நியாங்கள் அனைத்தும் எங்கே புரிய போகிறது.......
ஆனால் ஒருவருக்கு புரிந்தது.....

''ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையில் பகத்சிங்கின் தம்பி ரன்பீர் சிங்கின் மகன் யோணன் சிங்கும் இடம் பெற்றிருந்தார்.. இலங்கைக்குப் போன படை இந்தியா திரும்பியவுடன், யோணன் சிங்குக்கு வீர சர்க்கார் விருது கொடுப்பதாக இந்திய அரசு அறிவித்தது. இந்த செய்தியை தன் அப்பாவிடம் தெரிவித்த யோணன், விருது விழாவுக்கு அவரையும் அழைத்திருக்கிறார்.
ஆனால் ரன்பீர் சிங்கோ, 'இன விடுதலையை அடக்குவதற்காகக் கொடுக்கப்படும் விருதை நான் வீர விருதாகவே கருத மாட்டேன். அப்படி ஒரு விருதை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வர வேண்டாம். அந்த விருதை நீ வாங்கினால், நமக்குள் எந்த உறவும் இருக்காது' என்று சொல்ல...
யோணன் அந்த விருதையே புறக்கணித்திருக்கிறார்!''
ரன்பீர் சிங் ஒன்றும் தமிழர் இல்லையே..... பிறகு எப்படி ரன்பீர் சிங்கிற்கு புரிந்த ஈழ போராட்டத்தின் நியாயம் இங்கு இருக்கும் ஏராளமான தமிழகம் மற்றும் இந்திய நாதரிகளுக்கு புரிவதில்லையே ஏன்?

ஏன் எனில் அந்த நாதரிகளுக்கு சுதந்திரம் என்பது ஓசியில் கிடைத்தது மற்றும் அடிமை வாழ்கை என்றால் என்ன என்று அவர்களுக்கு தெரியாது................
மேலும் ஒரு விஷயத்தை சொல்கிறேன்....................
1981 October 31 இந்திரா காந்தி அவரது பாது காவலலார்கலாலே சுட்டு கொல்லபடுகிறார். அவர்களுடைய பெயர் Satwant Singh மற்றும் Beant Singh. அதாவது இந்தியாவின் பிரதமரை தன் உயிரை கொடுத்தாவது காப்பாற்ற வேண்டிய இந்தியா ராணுவ வீரர்களே தங்களுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக சுட்டு கொள்கிறார்கள்.
இந்திரா காந்தியை கொன்றவர்களில் ஒருவன் அப்பொழுதே கொல்லப்டுகிறார்.... மற்றொருவன் மூன்று ஆண்டுகள் கழித்து கொல்லபடுகிறான். சீக்கிய குருமார்கள் இந்திரா காந்தியை கொன்றவர்களை சீக்கிய இனத்தின் தியாகியாக அறிவித்து இருகிறார்கள்!!!!


இப்பொழுது இந்திய அரசு ( காங்கிரஸ் ) என்ன செய போகிறது...
பிரதமரை கொன்றவனை தியாகிகள் என்று அறிவித்த இனத்தை தீவிரவாத இயக்கம் என்று சொல்லி தடை செய்திருக்க வேண்டாமா? ஏன் செய்ய வில்லை மாறாக அவர்களுக்கு பிரதமர் பதவி கொடுத்து அழகு பார்கிரிர்கலே அது ஏன்?
அப்படி எனில் ராஜிவ் காந்தியை கொன்றது சுபாதானே?
சுபாதான் அப்பொழுதே இறந்து விட்டாலே...

அதோடு சுபா கூட இருந்த ஐந்து பேரும்(ஒற்றை கண் சிவராசன் – உட்பட) பெங்களூரில் உள்ள வீட்டில் சயனைடு சாபிட்டு இறந்து விட்டார்களே பின் ஏன்?
இந்த வழக்கில் மேலும் நளினி, பேரறிவாளன் மற்றும் முருகன் ஆகியார் 17 ஆண்டுகளுக்கு மேல் தனிமை சிறையில் வாடுகின்றனரே அது ஏன்?
இதற்கு மேலும் விடுதலை புலிகளுக்கு மட்டும் தடை ஏன்???
இங்கு பிரபாகரன் பெயரை சொன்னாலே தேசிய பாதுகாப்புக்கு சட்டம் பாயுமாம்....... (NSA)

ஆனால் சீக்கிய மடம் இந்திரா காந்தியை கொன்றவனை தியாகி என்கிறது..... !!!!!!
எதெற்கெடுத்தாலும் நான் இந்தியன் பிறகு தமிழன் என்று சொல்லும் அறிவு ஜீவிகளே இதற்கு நீங்கள் என்ன சொல்ல போகிறிர்கள்?

தமிழர்களில் இருக்கும் கருங்காலி கூட்டம் சீகியர்களிடம் இல்லை..
இப்படி வரலாற்று உண்மைகளை எடுத்து சொல்லி சீக்கியர்களுக்கு இப்படி நடக்கிறது, தமிழர்களுக்கு மட்டும் ஏன் அநியாயம் செய்கிரிகள் என்று கேட்டால் நாம் இந்திய இறையான்மைக்கு எதிராக பேசுகிரோமாம் மற்றும் நாங்கள் எல்லாம் விடுதலை புலிகள் ஆதரவாளர்களாம்..........
அட நாய்களே.....

நியாத்தை கேட்பதற்கு நான் ஒன்றும் புலியாக இருக்க தேவை இல்லை…..
இந்தியனாக இருக்க தேவை இல்லை…..
தமிழனாகவோ இருக்க தேவை இல்லை
மனிதனாக இருந்தால் போதும்.....
இப்படிக்கு,
மனிதர்
தமிழர்
இந்தியர்

by m akilesh,India

Read more...

ஒன்றரை லட்சம் மக்கள் மீது அகோரமான பீரங்கிக் குண்டு மழை:


முல்லைத்தீவு மக்கள் பாதுகாப்பு வலய பகுதி நோக்கி நேற்று மாலையில் இருந்து இன்று பிற்பகல் வரை சிறிலங்கா படையினர் நடத்திய அகோரமான பீரங்கி மற்றும் வான் தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் கோரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், சாளம்பன், ஒற்றைப்பனையடி மற்றும் ஐ.பி.சி வீதி ஆகிய பகுதிகளை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று திங்கட்கிழமை மாலை 6:00 மணி தொடக்கம் இன்று பிற்பகல் 1:00 மணிவரை ஆட்லெறி, பல்குழல் வெடிகணை, மோட்டார் மற்றும் கனரக துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதல்களை அகோரமாக நடத்தினர்.


2,600 வரையான குறுந்தூர பல்குழல் பீரங்கி குண்டுகள்

1,000 வரையான ஆட்லெறி நெடுந்தூர பீரங்கி குண்டுகள்

2,500 வரையான இடைத்ததூர மோட்டார் பீரங்கி குண்டுகள்

ஆகியன நேற்று மாலை 6:00 மணியில் இருந்து இன்று பிற்பகல் 1:00 மணிவரை சிறிலங்கா படையினரால் மக்கள் வாழ்விடங்களை நோக்கி வீசப்பட்டன.

அத்துடன், சிறிலங்கா வான்படையும் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் கிளஸ்டர் ரக குண்டுத்தாக்குதலை நடத்தியது.

இத்தாக்குதல்களில் பல நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 1,374-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளர்கள் சிலரும் படுகொலை ஆனவர்களுக்குள் அடங்குவர்.

மருத்துவமனை சூழலை நோக்கி சிறிலங்கா படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதல்களிலும் 18 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் இயங்கிவரும் முல்லைத்தீவு மருத்துவமனையில் 428 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர்.

நட்டாங்கண்டல் மருத்துவமனையில் 618 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

திலீபன் மருத்துவமனையில் 328 பேர் சிகிச்சை பெற்றுச் சென்றனர்.

மக்கள் வாழ்ந்த குடியிருப்பு பகுதிகள் அனைத்தும் பிணக்காடாக காட்சியளிப்பதாகவும் அப்பகுதி முழுவதும் ஒரே சாவு ஓலமும் அவலக்குரலும் கேட்பதாகவும் புதினத்தின் வன்னிச் செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

Read more...

அன்னை பூமியிலேயே ஈழம் அமையும் : ஜெயலலிதா


தனிஈழம் அமைத்துத் தருவேன் எனச் சொன்ன ஜெயலலிதாவிற்கு ”ஈழம் அமைக்க இலங்கையில் இடம் இல்லை. வேண்டுமானால், வேறு இடம் பார்த்து அமைத்துக் கொள்ளுங்கள்” என நக்கலாக அறிக்கை விட்டிருந்தார் கோத்தபாய ராஜபக்சே.

இதற்கு பதிலடியாக திருப்பூரில் பிரச்சாரம் மேற்கொண்ட ஜெயலலிதா ”இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன்” எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர் தெரிவித்துள்ளாவது.

இலங்கைத் தமிழர் பிரச்சினையில், எண்ணற்ற நாடகங்களை அரங்கேற்றி வந்த கருணாநிதி, இன்று ஒரு உண்ணாவிரத காட்சியையும் அரங்கேற்றி முடித்திருக்கிறார்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, இலங்கையில் நடைபெற்று வரும் சண்டையை நடத்துவதே இந்திய இராணுவம் தான் என்ற குற்றச்சாட்டை உலகெங்கும் இருக்கும் தமிழர்களும், பல்வேறு அமைப்புகளும் தெரிவித்து வரும் நிலையில், கருணாநிதி இன்று நடத்திய உண்ணாவிரத நாடகம் யாருடைய கவனத்தை ஈர்க்க? அல்லது யாரை ஏமாற்ற? உறுதியான நடவடிக்கை எடுக்கிறோம் என்று மத்திய அரசு தனக்கு வாக்குறுதி அளித்ததால், உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டதாக கருணாநிதி கூறி இருக்கிறார்.

என்ன உறுதியான நடவடிக்கை? எப்போது அந்த நடவடிக்கை? இத்தனை நாளாக ஏன் இல்லை அந்த நடவடிக்கை?.

இரண்டு நாட்களுக்கு முன்னர், இந்திய தொலைக்காட்சிக்குப் பேட்டி அளித்த இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச, இந்திய இராணுவம் தங்களுக்கு இந்தப் போரில் என்னென்ன உதவிகளைச் செய்தது என்பதை பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார்.

இலங்கையின் வடபகுதியில் போர் நடைபெறும் இடங்களில் உள்ள விமானத் தளங்களை இந்திய இராணுவம் தான் செப்பனிட்டுத் தந்தது. தற்காப்பு ஆயுதங்கள் அனைத்தும் இந்திய இராணுவத்தால் தரப்பட்டன. போர் பகுதியில் உளவு வேலைகளை செய்யத் தேவையான நவீன கருவிகள் எல்லாம் இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு கொடுத்தது.

வடக்கு இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளைப் பற்றிய அடிப்படை பூகோள தகவல்கள், அதாவது Geographical விவரங்கள் இலங்கை இராணுவத்திடம் இவ்வளவு காலமும் இல்லாமலேயே இருந்தது. அதனால் தான் தமிழர் பகுதிகளில், அதாவது வவுனியா, முல்லைத்தீவு, வன்னிக் காடுகள் போன்ற பகுதிகளில் இலங்கை இராணுவத்தால் இவ்வளவு காலமும் முன்னேறிச் செல்ல முடியவில்லை.

இப்பொழுது, இந்தப் போரில் தான் இலங்கை இராணுவம் இந்திய இராணுவம் அளித்த புலனாய்வு உதவியோடு தமிழர் பகுதிகளைப் பற்றிய பூகோள விவரங்களைப் பெற்று முன்னேறிச் சென்றிருக்கிறது. இலங்கை இராணுவத்தின் எல்லா முன்னேற்றத்திற்கும் இந்திய இராணுவத்தின் உதவி தான் அடிப்படை என்பது உலகறிந்த உண்மை.

இந்தியாவில் இலங்கை இராணுவ வீரர்கள் படை பயிற்சி பெற்றார்கள் என்று இந்திய இராணுவம் இலங்கை இராணுவத்திற்கு இந்தப் போரை நடத்த அளித்த ஒவ்வொரு உதவியையும் பட்டியலிட்டு தெரிவித்தார் கோத்தபாய ராஜபக்ச.

இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளையும் செய்யக்கூடாது. ஆயுதங்களையும் அளிக்கக் கூடாது என்று நான் கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனையோ முறை மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கூறி வந்திருக்கிறேன். பல பத்திரிகைகளில், என்னுடைய வேண்டுகோள் வெளியானது.



பல பத்திரிகைகள் இலங்கை அரசுக்கு இந்திய அரசு செய்யும் இராணுவ உதவிகளை புலனாய்வு செய்து கண்டுபிடித்து செய்தி வெளியிட்டன. அப்போதெல்லாம், மத்திய அரசிடம் இராணுவ உதவிகளை இலங்கைக்கு செய்யாதீர்கள் என்று வலியுறுத்தாத கருணாநிதி, இன்றைக்கு லட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கையில் அரசு முகாம்களில் சொல்லொணாத் துயரங்களுக்கு உள்ளாகி இருக்கும் நேரத்தில், இந்த உண்ணாவிரதம் இருந்ததால் அவர்களுக்கு என்ன உதவி கிடைத்தது?.

இலங்கைப் போரில் மத்திய அரசின் ஈடுபாடு இன்று எல்லோருக்கும் தெரிந்துவிட்ட நிலையில், தேர்தல் களத்தில் காங்கிரசோடு கைகோர்த்து நின்றால், தனக்கு ஏற்படப்போகும் அவமானகரமான தோல்வியை நினைத்து, மக்களின் கவனத்தை திசை திருப்ப கருணாநிதி இன்றைக்கு ஒரு உண்ணாவிரத நாடகத்தை அரங்கேற்றினார் என்று நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.

இலங்கைத் தமிழர்களை காக்க தனி ஈழம் தான் ஒரே தீர்வு. தனி ஈழம் அமைத்தே தருவேன் என்று நான் பேசியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, இந்திய அரசு தங்களுக்குச் செய்த உதவிகளையெல்லாம் பட்டியலிட்ட போது, கருணாநிதி அதைக் கண்டுகொள்ளவில்லையே! ஏன்?.

வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி, இந்தியாவில் இருந்து தூதுவர்களை ராஜபக்சவுடன் பேச்சு நடத்த கடந்த வாரம் அனுப்பினார்களே, அவர்கள் ஏன் போர் நிறுத்தத்திற்கு வழி செய்யவில்லை? போரை நடத்துவதே இவர்கள் தானே!

எனவே தான் சொல்லுகிறேன், போரை நடத்தும் அரசாங்கம் கருணாநிதி பங்கேற்றிருக்கும் இந்திய மத்திய அரசாங்கம். இன்றைக்கு திடீரென்று கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தது தமிழக மக்களை ஏமாற்றத் தான்.

தேர்தல் களத்தில் ஈழப் பிரச்சினை பெரும் பிரச்சினையாக உருவாகி இருப்பதால், மக்களின் கோபத்தில் இருந்து தப்பிக்க கருணாநிதி நடத்திய மோசடி செயல் திட்டம் தான் இந்த உண்ணாவிரதம்.

இன்று அதிகாலை 4:00 மணியில் இருந்து தமிழர்கள் வாழும் பகுதிகள் மீது இலங்கை இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்தியதாக கொழும்பில் இருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. 6:00 மணி நேரம் நடைபெற்ற அந்தக் கொடூரத் தாக்குதலை இந்த உண்ணாவிரத நாடகம் உலகின் பார்வையில் இருந்து மறைத்துவிட முடியாது.

மனிதாபிமான அடிப்படையில் செய்ய வேண்டிய உதவிகளை இந்த நேரத்தில் கூட இந்திய அரசு இலங்கைத் தமிழர்களுக்காக அறிவிக்கவில்லை. சார்க் அமைப்பின் சக உறுப்பு நாடான இலங்கையை தனது செல்வாக்கைக் கொண்டு நிர்பந்தித்திருக்க வேண்டிய இந்தியா, தமிழர் நலனில் பாரா முகமாக இவ்வளவு காலமும் இருந்துவிட்டது. அந்தக் களங்கத்தைப் போக்க கருணாநிதி நடத்தும் இந்த நாடகம் ஈழத் தமிழர்களுக்கு எந்தப் பயனையும் தராது.



மாறாக, கருணாநிதி மத்திய அரசை நிர்ப்பந்தித்து உடனடியாக இலங்கைத் தமிழர்களைக் காக்க போர் நிறுத்தம் செய்யட்டும். இந்தியாவில் இருந்து யாரையெல்லாம் அனுப்பி இலங்கையில் மக்களுக்கு உதவ முடியுமோ அவர்களையெல்லாம் அனுப்பட்டும். இலங்கைத் தமிழர்களுக்கு தனி ஈழம் அமைத்துத் தருவேன் என்று பிரகடனம் செய்ததற்காக என் மீது சிறிலங்கா அரச தலைவர் ராஜபக்சவின் இராணுவச் செயலாளர் கடும் கோபம் கொண்டு பதில் அளித்திருக்கிறார்.

இலங்கையில் இல்லாமல் வேறு எங்காவது ஜெயலலிதா ஈழம் அமைக்கட்டும் என்று கோத்தப்பாய ராஜபக்ச கூறி இருக்கிறார். ஈழத் தமிழர்கள் அவர்கள் மண்ணிலேயே ஈழம் காண்பார்கள். அவர்கள் அன்னை பூமி அது. அவர்களது உரிமை பூமி அது.

இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி ஈழம் அமைப்பேன். அங்கு இப்போது அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழர்களுக்காக எல்லா உதவிகளையும் செய்வது நாங்கள் அமைக்க இருக்கும் மத்திய அரசின் தலையாய கடமையாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னதைப் பற்றி காங்கிரஸ் மத்திய மந்திரி, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கபில்சிபில், இது தேச விரோத கருத்து, தேசவிரோத செயல், பொறுப்பற்ற செயல் என்று கூறி இருக்கிறார்.

கபில்சிபிலுக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். தனி ஈழம் அமைப்போம், தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான் சொன்னது எந்த இந்திய சட்டத்திற்கு எதிரானது? இந்தியாவை துண்டாடி தனி ஈழம் அமைப்போம் என்று நான் சொல்லவில்லையே!

இலங்கையில் தனி ஈழம் அமைத்துக் கொடுப்போம் என்று தானே நான் சொன்னேன். அது எப்படி தேச விரோதச் செயலாகும். எந்த சட்டத்தில் அப்படி சொல்லக்கூடாது என்று இருக்கிறது. கபில்சிபிலுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நான் சொல்லிக் கொள்வேன். தேசபக்தியில் எனக்கு நீங்கள் யாரும் பாடம் சொல்லித் தர தேவையில்லை. நான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்கும் தேசியவாதி தான். எனது தேசப்பற்றில் குறை கண்டுபிடிக்க முடியாது. களங்கம் கற்பிக்க முடியாது.

கருணாநிதியின் உண்ணாவிரத நாடகம் முடிந்த பிறகு, இலங்கை அரசு ஓர் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இலங்கை தமிழர்கள் வாழும் பகுதிகளில் போர்நிறுத்தம் போர் விமானங்களை இனிமேல் பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய பீரங்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம். பெரிய துப்பாக்கிகளை பயன்படுத்தமாட்டார்களாம்.

இலங்கைத் தமிழர்கள் செத்துமடிவார்கள் என்பதற்காக அதை எல்லாம் நிறுத்தி வைத்துவிட்டார்களாம். ஆனால், அங்கே விடுதலைப் புலிகள் இலங்கைத் தமிழர்களை பிடித்து வைத்து இருக்கிறார்களாம். ஆகவே, விடுதலைப் புலிகளிடமிருந்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவதற்காக சிறிய ரக துப்பாக்கிகளை மட்டும் பயன்படுத்த போகிறார்களாம். இது என்ன நாடகம்? இது என்ன கேலிக்கூத்து? இதை எப்படி போர் நிறுத்தம் என்று சொல்ல முடியும்? இந்த அறிவிப்பை பார்த்து கருணாநிதி அவசர அவசரமாக உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். இந்தக் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தன்னலம் மிகுந்த குடும்ப ஆட்சி, தமிழகத்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, ஏற்பட்டுள்ள தீமைகளையும், அவலங்களையும், நீங்கள் எல்லாம் வேறு வழியின்றி, வேதனையோடு தாங்கிக் கொண்டு இருக்கிறீர்கள்.



Read more...

கலைமாமணி பதவியை திருப்பி அனுப்புகிறேன் : இன்குலாப்












தரல்

இன்குலாப்
269,மதுரை மீனாட்சிபுரம்,
ஐயஞ்சேரி சாலை,
ஊரப்பாக்கம் - 603210
காஞ்சி மாவட்டம்

பெறல்

செயலர்,
தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றம்,
சென்னை.

அன்புடையீர்,

வணக்கம்.

எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதைப் பின்வரும் காரணங்களால் திருப்பி அனுப்புகிறேன்.

தமிழீழத்தில் நடைபெறும் தமிழினப் படுகொலைக்கு எதிரான தமிழக மக்களின் போராட்டத்தில் முத்துக்குமார் உள்ளிட்ட இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்வது தொடர்கிறது. உண்மையான மக்கள் அரசு இங்கு இருக்குமேயானால், இவற்றால் துணுக்குற்றுத் தமிழினத்துக்கு நியாயம் செய்திருக்கும்.

ஆனால் தமிழின ஒழிப்பை முன்னின்று நடத்தும் சிங்களப் பேரினவாத அரசுக்கு, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இன்றும் வஞ்சகமாக உதவிக் கொண்டிருக்கிறது. வன்முறையில் நம்பிக்கை அற்றதாகப் பீற்றிக் கொள்ளும் காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள், தமிழக இளைஞர்கள் மேற் கொண்ட உயிர்த்தியாக அகிம்சைப் போராட்டத்தைச் சிறிதும் பொருட்படுத்தவில்லை.

அகிம்சைப் போராட்டங்களைப் பொருட்படுத்தாத வல்லாதிக்க மரபு காங்கிரசுடையது. தமிழ் நாடு என்ற பெயர் சூட்டக் கோரிய தியாகி சங்கரலிங்கனார் உண்ணா நோன்பிருந்து உயிர்துறந்தது காங்கிரஸ் ஆட்சியின் போதுதான். 1965-இல், இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உணர்வுகொண்ட தமிழர்கள் தீக்குளித்து உயிர்துறந்தபோதும், துப்பாக்கிச் சூடு நடத்தி ரத்தவெறி தீர்த்துக் கொண்டது காங்கிரஸ் ஆட்சிதான். இந்திய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி திலீபன் யாழ்மண்ணில் உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த போதும் பொருட்படுத்தாது, ஈழத்தமிழர்களை ஆயிரக் கணக்கில் கொன்று குவித்ததும், தமிழ்ப் பெண்களை வல்லாங்கு செய்து கொடுமைப்படுத்தியதும் இதே காங்கிரஸ் ஆட்சிதான்.

இன்று இலங்கையில் போர்நிறுத்தம் கோரித் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் காலவரம்பற்ற உண்ணா நோன்பைமேற் கொண்டிருக்கிறார். அவர் எல்லா நலத்துடனும் நீடுழி வாழவேண்டும். தமிழகச் சட்டமன்றமும் தமிழக மக்களும் ஒருமித்து நடத்திய அனைத்து அறப் போராட்டங்களையும் கண்டு கொள்ளாது, சிங்களப் பேரினவாத அரசுக்குப் படை, கருவி, நிதி முதலியவற்றை வழங்கியது காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசுதான். இது குறித்துத் தமிழக அரசு மேற்கொண்ட செயல்பாடுகள் அனைத்தும், நடுவணரசின் தமிழின விரோத நடவடிக்கைகளுக்கு உதவுவதாகவே முடிந்தன. இந்திய அரசே தமிழகத்தில் நிகழ்ந்த உயிர்த்தியாகங்களைப் பொருட்படுத்தாதபோது, ராஜபக்N~ அளவிலான சிங்கள பாசிஸ அரசு, கலைஞரின் உண்ணா நோன்புப் போராட்டத்தை ஏற்று நியாயம் வழங்கும் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டத்தின் பயனாக, முன்பு கலைஞர் அவர்களே முன்வைத்த இலங்கை அரசுடனான அரசியல் (ராஜீய) உறவைத் துண்டிக்கவேண்டும் என்ற கோரிக்கையையாவது இந்திய அரசு நிறைவேற்றுமா? கலைஞர் அவர்களின் இந்தப் போராட்டம் தமிழகத்தில் மூண்டெரியும் சிங்களப் பேரினவாத எதிர்ப்பையும், இந்திய அரசின் துரோகத்துக்கு எதிரான தமிழ் உரிமை உணர்வையும் மடை மாற்றத் தான் பயன்படும். இன்று கலைஞர் செய்ய வேண்டியது தேர்தலைப் பற்றிக் கவலைப்படாது காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறுவது தான்.

மனிதன், தமிழன், படைப்பாளி என்றவகையில் இந்தக் கொடுமைகளுக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கடமை எனக்கும் இருக்கிறது, இந்த வகையில் 2006-ஆம் ஆண்டு, தமிழக அரசின் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தால் வழங்கப்பட்ட |கலைமாமணி| விருது, எனக்குக் கௌரவமாக அல்லாமல் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. இதைத் தமிழக அரசிடமே திருப்பித் தருவதுதான் எனது மனித கௌரவத்தைத் தக்க வைத்துக் கொள்வதாக அமையும்.

தமிழக இளைஞர்கள் நிகழ்த்திய உயிர்த்தியாகங்களுடன் ஒப்பிடும்போது இது நிரம்பச் சாதாரணமானது.

அதனால் இம்மடலுடன் எனக்களிக்கப்பட்ட கலைமாமணி விருதுக்கான தங்கப்பதக்கம், சான்றிதழ் ஆகியவற்றைத் தமிழ்நாடு இயல் இசை நாடகமன்றச் செயலாளர் அவர்களுக்குப் பதிவு அஞ்சலில் திருப்பி அனுப்புகிறேன்.

இங்ஙனம்,
27-04-2009 
இன்குலாப்
கைபேசி: 9444284281

Read more...

கலைஞர் உண்ணாவிரதம் : வெற்றியா ? தோல்வியா ?

காலை முதல் உண்ணாவிரதமிருந்து மதியம் 12 30 மணிக்கே இலங்கையிடமிருந்து பலமான ஆயுதங்களை பிரயோகிக்காமல் போரைக் கையாள்கிறோம், மக்களை பாதுகாக்க வழிசெய்கிறோம் என கூற வைத்த கருணாநிதிக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். ஆனால் இதை ஒன்றை வைத்து இந்த வெற்றியை பிரச்சாரமாக பயன்படுத்திக் கொண்டு இலங்கையில் ஏற்படப்போகும் மேலும் பல இனப்படுகொலைகளை மறைக்காமல் இருந்தால் சரி. 

இவர்களிடம் இருக்கும் ஊடக பலத்தைக் கொண்டு இவர்கள் செய்யப்போகும் பிரச்சாரங்கள் மிகைப்படுத்தியதாய் இருக்கும். திருமாவளவனின் உண்ணாவிரதம், மாணவர்களின் உண்ணாவிரதம், வழக்கறிஞர்களின் உண்ணாவிரதம், பெண்களின் உண்ணாவிரதம் என எவற்றையும் தெளிவாக மக்களிடம் கொண்டு செல்லாத சூரிய ஊடகங்கள் கருணாநிதியின் இவ்வெற்றியை வெகுவாக கொண்டாடுவதோடு, மேலும் பல இனப்படுகொலைகள் இலங்கையில் ஏற்பட்டால் அவற்றை மறைக்கவே செய்யும். 

இனப்படுகொலைகளும் தொடர்ந்து நடக்கின்றன என அறிவித்தால் தற்போதைய வெற்றியை பிரச்சாரத்தில் மேற்கொள்ள முடியாதே ? ஆக கருணாநிதியை வரலாறு மன்னிக்க வேண்டுமெனில் தற்போது ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையைக் கொண்டு மேலும் கொலைகள் நடைபெறாமல் இருக்கவும், பேச்சு வார்த்தை மேற்கொண்டு இலங்கைக்கும், ஈழத்துக்கும் உடன்பாடு ஏற்பட்டு அங்கே அமைதி ஏற்பட வழிவகை செய்யலாம்.. 

இவற்றை மேற்கொண்டால் காலம் கடந்தாலும் வரலாறு கலைஞரை மன்னிக்கும், இல்லையெனில் இவை ஆரிய, வடநாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போல் “தேர்தலுக்கான நாடகம்” மட்டுமே என தமிழினம் உணரும், என்றும் தமிழினம் மன்னிக்காது. 

Read more...

ஒற்றுமை வேண்டும் ..

சுவாமி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களை சந்தித்த பின் இலங்கையில் நடக்கும், நடந்த கொடுமைகளைக் கண்டு "இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சமவுரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான்" என ஜெயலலிதா உறுதி மேற்கொண்டுள்ளார். இத்திருப்புமுனையை ஏராளமான தமிழ் அமைப்புக்கள் வரவேற்றுள்ளன. இத்தருணத்தில் கருணாநிதியின் உண்ணாவிரதமும் மத்திய அரசின் மனங்களில் மாற்றங்களைக் கொண்டு வரும் என்பதில் மாற்றம் இல்லை.

ஆயினும் இவர் செய்வது நாடகம், அவர் செய்வது நாடகம் என அறிக்கைப் போரிடாமல் இலங்கைத் தமிழர்களின் தமிழீழக கனவை நனவாக்க இருபெரும் கட்சிகளும் முயற்சித்தால் தமிழினம் என்றுமே மறவாத நன்றியினை, பெருமையினை இவர்கள் பெறுவார்கள்..

அரசியல் தவிர்த்து ஒற்றுமையுடன் இவர்கள் பாடுபடுவார்களா ?

Read more...

நம் இன‌ப் போராட்ட‌ம் ப‌ற்றிய‌ முக‌ம்தெரியாத‌ சீக்கிய‌ ச‌கோத‌ர‌னின் க‌டித‌ம் !


As the world watches and India celebrates elections and cricket, hundreds upon thousands are dying a few hundred kilometers away. It is time to awaken our conscience and the spirit of universal brotherhood.

The death of Eelam Tamils and the destruction of their homeland in Sri Lanka have prompted Jagmohan Singh to write an Open Letter to Charles Anthony, the son of Vellupillai Prabhakaran. The writer pleads for immediate international intervention by civil society from all over the world and expresses solidarity with Tamil fighters and civilians.

Dear Charles Anthony,

Please accept my solidarity with your struggle for survival, identity and freedom.

Having witnessed the struggle in Punjab from close quarters, I can understand the circumstances in which you and your people are waging a fight for survival.

In the media, one day, your father –Vellupillai Prabhakaran is a friend, the other day he is a foe. Some day he was protected, today he is haunted. For some he is a terrorist, for many he is a saviour. What he is should be best left for history to judge.

I belong to a martial race. Sikhs are known to befriend martial people. Though many political leaders in Punjab may not have opened their mouths and made bold statements, believe me,there are many who admire the spirit, determination and fighting prowess of Tamil Eelam fighters. The present news about the downtrend in your struggle has saddened many here.

I write this letter to express solidarity when you and your people face the chemical weapons and poisonous gasses of the Sri Lankan army and when thousands of innocents trapped in the cross fire are given just a few hours to leave.

I am moved by the suffering of the Tamil Eelam population in Sri Lanka. The photographs of the misery of women and children should move mountains but sadly it does not. The whole world, thanks to 24 hour multiple television channels has become immune to pain and suffering.

My heart goes out to all men, women and children who are forced to flee their homeland and also to the core Tamil Eelam fighters. While writing so, I feel a sense of guilt that my writing is only an expression of my inner feelings, though as a Sikh the only thing that I should be doing is joining you in your fight. My prayers and good wishes are with you.

For the Tamil Eelam as for many organizations worldwide, despite the best of timely and thorough documentation, the international community has failed to take action to mitigate the misery and suffering of the thousands in Sri Lanka. Like India downing the Sikhs, Kashmiris and the people of the North-East and getting away with it, today, the Sri Lankan government is getting away with broad daylight murder and mayhem.

It is heartening to see the Tamil Diaspora taking to the streets and forcing dialogue in European capitals. I am particularly impressed by the retort of the Tamil Diaspora to the Norwegian leadership. I have read reports that when Norwegian Tamils laid a siege of the Oslo-based office of the country’s Prime Minister and confronted the government there, the Norwegian Minister for International Development, Erik Solheim is reported to have said, “I can understand the level of desperation among the Tamils in Norway. But, I can't cause miracles."


He is reported to have replied to a question posed by the journalists of Norwegian state owned NRK, "I can talk to the demonstrators. I can talk to USA, Japan and EU once again to see if there is anything more that could be done to stop the war in Sri Lanka." Tamil writer K. P. Aravintham’s reply to him is apt and classic. He said, “Solheim may not be able to perform miracles, but at least he should have restrained himself from committing blunders. Diplomacy may be the art of the possible, but a liberation struggle is to make impossible, possible.”

Scandinavian countries are particularly known for their courage and conviction in the area of human rights and that is why perhaps your leadership had chosen the brokerage of Norway. However, Aravintham has hit the nail on the head when he said, “Norway failed in grasping the point. Posing as a neutral party to peace facilitation, Norway has no justification in joining the co-chairs demanding the LTTE to lay down arms. More serious is the stand expecting the civilians of Vanni to forfeit themselves into the genocidal hands of Colombo. Through their procedural failures, the Norwegians have brought in discredit to the whole idea of international peace brokering. There is still time for them to mend their ways if they can come out really independent from playing stooges to geo-political ambitions of powers and are prepared to commit themselves to the norms of global human civilization.”

The beleagured people of Tamil Eelam continue to reel under the jackboots of the Sinhalese despots with active and passive support from India and many other countries. The affinity of Eelam Tamils with their brethren in the Indian state of Tamil Nadu is also being ignored. Thirteen Tamil sisters and scores of others are on fast unto death in your support, but do the media and the government care, particularly when the whole country is in an election mode?

From a distance the pan-Tamil posturing by the Tamil leadership in Tamil Nadu appears to be deceptive and insincere. I am not sure whether they are genuinely supporting your mission. You know better.

To me it seems that like the Tamil leadership, the Indian leadership too has been playing Chanakya with you and your cause. And, successfully. The world cannot clearly decipher whether India is your foe or friend. India revels in this kind of double entendre. It continues to train and arm Sri Lankan army personnel to the teeth, yet maintains a soft face.

I am not a defence analyst, but I think that when the Norway-led peace process started, the struggle of your people was hit hard. I am sure your leaders then had practical reasons for the decision but invariably such peace process attempts of insincere governments enable the entrenched violators to further arm themselves and cause more death and destruction. India has always done the same with Sikhs, Kashmiris, Nagas and Mizos. The changed geo-political situation of the world after 9/11 has changed the paradigm of your struggle and this could also be the cause for shifting stands by the Norwegians.

Last year around this time, Kosovo was born a new country. A year before that, Timor Lieste attained freedom. I was hoping that 2009 would belong to Tamil Eelam. I am still hopeful, though it does not appear likely this year.

There is an impression worldwide that your struggle is at the last stage. With truth as a casualty and facts not clearly emerging, it is my sincere hope that it is not so. Your struggle must carry on. You must continue to hold high the flag of rebellion and freedom.

It is also my hope that former US attorney Bruce Fein succeeds in indicting US citizen Gothabaya Rajapakse and green card holder Gen. Fonseka for crimes against humanity. The New York based Genocide Prevention Project has issued a red alert against eight countries where genocide is happening and Sri Lanka is one of them. Let us hope they succeed in heightening awareness of the deteriorating human rights situation in your homeland.

Even in the United Nations Security Council, there is a bleak hope the Mexican ambassador to UN -Claude Hellen’s attempt to bring a resolution on the question of responsibility to protect one’s own population goes through.

Dear Mr. Charles, as the son of a man who ventures to change the geography of South Asia, I am sure you would keep the fight on. From my side, I have this to say, as I told the Kosovars when they won their freedom, “We have a saying attributed to the Tenth master of the Sikhs, Guru Gobind Singh, which reads, “no one gives you freedom on a platter; those who have it, get it by the sheer grit of their own determination and strength.” Sooner or later, you will have it.

I wish you and your people to have the taste of freedom in this lifetime. Let God Almighty shower his blessings on the Tamil people and their suffering end and let them stand tall as a free people in the world.

Sincerely
Jagmohan Singh

The author is a commentator based in Ludhiana, Punjab. He may be contacted at jsbigideas@gmail.com

Read more...

கலைஞர் சாகும்வரை உண்ணாவிரதம்.

இலங்கையில் நடைபெற்று வரும் போரினாலும், இனப்படுகொலைகளாலும் பெரும் பாதிப்புக்குள்ளாயிருக்கும் நம் தமிழ் மக்களைக் காக்க பல மாதங்களாய் நாட்களைக் கடத்தி செயல்படாமலிருந்தாலும் தற்போதைய செல்வாக்கு, இறுதி எச்சரிக்கை ஆகியனவற்றை முதலில் நம் மனதில் கொண்டு சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க கலைஞர் ஆரம்பித்துவிட்டார். அவர் ஓட்டிற்காக, அனுதாபத்தை கவர்வதற்காக எடுக்கிறாரா எனபது முக்கியமில்லை. அவ்வாறு சொல்ல ஜெயலலிதா ஒருவர் இருக்கிறார்.

இந்த உண்ணாவிரதத்தை மதித்தாவது மத்திய அரசு இலங்கை அரசுக்கு எச்சரிக்கை செய்து போரை நிறுத்தி பட்டினியால் வாடி மடிந்துகொண்டிருக்கும் நம் மக்களை காப்பாற்ற வேண்டும். இல்லையேல் காங்கிரசு எந்த காலத்திலும் ஆட்சிக்கு வரமுடியாத நிலைக்குத் தள்ளப்படும்.

தமது தலைவனை (கலைஞர்) உண்ணாவிரதம் இருக்க வைத்து வாட்டி எடுக்கும் காங்கிரசுக்கு உண்மையான உடன் பிறப்புக்கள் ஓட்டளிக்குமா ?!

Read more...

தொடர்ந்து போரிடுவதற்கு பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது - அனிதா பிரதாப்


தொடர்ந்து போரிடுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது என்று இந்தியாவின் பிரபல ஊடகவியலாளர் அனிதா பிரதாப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக 'த வீக்' ஆங்கில வார இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் தமிழ் வடிவம் வருமாறு:

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒரு தேசியத் தலைவர், விடுதலைப் போராளி, புரட்சியாளர், கெரில்லா வீரர், கொலையாளி, பாதுகாவலர், கொடுங்கோலர், தொலைநோக்குப் பார்வை கொண்டவர், பயங்கரவாதி எனப் பலருக்கும் பலவகையில் தோற்றம் அளிக்கிறார். அவரைப் போற்றுவதும், தூற்றுவதும் அவரவரின் கொள்கை நிலையைப் பொறுத்தது.

பிரபாகரனின் சிந்தனையில் என்ன ஓடிக் கொண்டிருக்கிறது என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் அவர் அச்சம் அடையவோ, விரக்தி அடையவோ இல்லை என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்.

சாவைக் கண்டு அவர் அஞ்சவில்லை. 17 வயதிலிருந்தே அவர் சாவுடன் உறவாடி வருகிறார். அவர் சிறிதும் தளர்ச்சி அடையாத போர் வீரர். அனைத்து நடைமுறை விடயங்களில் இருந்தும் தத்துவஞானி போல விலகி நிற்பவர்.

எனினும், தனது கொள்கைத் திட்டக் குறிக்கோளான தமிழ் ஈழத்தை அடைவதில், ஊசலாட்டம் அற்ற ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருபவர்.

இந்தப் போர்ப் பின்னடைவுகள், இலட்சியத்தின் மீதான அவரின் நம்பிக்கையை அல்லது உறுதிப்பாட்டை தளர்வடையச் செய்துவிடுமோ, சீர்குலைத்துவிடுமோ, அழித்துவிடுமோ என்பது எனக்கு ஐயம்தான். அவர் தனது மக்களின் விடுதலைக்காகவே போராடி வருகிறார் என்பதில் அவர் மனத்தில் மிகவும் தெளிவாக இருக்கிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் வாழ்ந்து வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் போராடி வருகிறார். அந்தக் கோட்பாட்டுக்காகவே அவர் சாவதற்கும் தயாராக இருக்கிறார்.

வெற்றிகளும் தோல்விகளும் வரும், போகும். பிரதேசங்களை இழப்பதும், வெல்வதும் உண்டு. போராளிகள் இறப்பார்கள், தோழர்கள் துரோகம் செய்வார்கள். ஆனால் அவரின் இறுதி மூச்சு வரையில், தமிழ் ஈழத்துக்கே அவர் உண்மையானவராக இருப்பார்.

இந்த மோதல் குறித்து நான் 30 ஆண்டுகளாக எழுதி வருகிறேன். ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கம் அதனுடைய போராட்டத்தில் இந்த அளவுக்குத் தனியாகவும், நண்பர்கள் இல்லாமலும் இதற்கு முன் ஒருபோதும் இருந்தது இல்லை.

பிரபாகரன் அவரின் சொந்தச் செயற்பாடுகள் மற்றும் உலகச் சூழ்நிலைமைகள் ஆகிய இரண்டும் சேர்ந்த கூட்டுக்கலவையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதன் காரணமாக, இந்தியாவை மாற்ற முடியாத கருணையற்ற எதிரியாக அவர் ஆக்கிக் கொண்டார்.

அமெரிக்கா மீது செப்ரெம்பர் 11 இல் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ஜோர்ஜ் புஸ் அறிவித்த பயங்கரவாதத்துக்கு எதிரான போர்க் கொள்கையால், உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை சிறிதும் சகித்துக் கொள்ளாத ஒரு சூழ்நிலைமை உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பயங்கரவாத அமைப்புகளுக்கும் தேசிய விடுதலைக் குழுக்களுக்கும் இடையிலான வேறுபாடுகளை இது மங்கச் செய்துவிட்டது.

உலகில் அரசு பயங்கரவாதத்தை எதிர்கொள்ளாத விடுதலைப் படையோ, பதிலுக்குத் தங்களது தேசியவாதக் குறிக்கோள்களை அடைவதற்காக பயங்கரவாதத்தை ஒரு நடைமுறைத் தந்திரமாகப் பின்பற்றாத விடுதலைப் படையோ எதுவும் இல்லை. தான் போற்றி வணங்கும் மாவீரர்களாகப் பிரபாகரன் கருதும் நேதாஜி சுபாஷ் சந்திர போசும், பகத் சிங்கும் இந்தியாவை ஆண்ட இங்கிலாந்து ஆட்சியாளர்களால் பயங்கரவாதிகள் என்று அறிவிக்கப்பட்டவர்கள்தான்.

அண்மைக் காலம் வரையில் நெல்சன் மண்டேலாவும் கூட பயங்கரவாதிகளின் பட்டியலில்தான் வைக்கப்பட்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கம் 30 நாடுகளில் பயங்கரவாத அமைப்பு எனத் தடை செய்யப்பட்டுள்ளது. இது விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழிப்பதற்கான உலகளாவிய ஒப்புதலை சிறிலங்கா அரசுக்கு வழங்கியிருக்கிறது. இவ்வாறு செய்ததன் மூலம், வரலாற்றில் பெரும் பேரழிவு ஆபத்து ஏற்பட உலகச் சமுதாயம் அனுமதித்து விட்டது.

இது விடுதலைப் புலிகளுக்கு நேர்ந்த துன்பம் அல்ல, தமிழர்களுக்கு நேர்ந்த துன்பம்.

ஓராண்டுக்கும் மேலாக, அப்பாவிகளான தனது சொந்த மக்கள் மீதே குண்டு வீசித் தாக்கி வரும் அரசு உலகில் வேறு எங்குமே இருக்காது. இதுபோன்ற குற்றத்துக்கு இஸ்ரேலிய, அமெரிக்க, நேட்டோ படைகள் கூட உள்ளானதில்லை.

மோதல் அற்ற பாதுகாப்புப் பகுதி என்று அறிவிக்கப்பட்ட பகுதியே, தாக்குதல் நடத்தும் படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே சிக்கியுள்ள அப்பாவித் தமிழ் மக்களுக்குப் பெரிய சாவுக் களமாக மாறி வருகிறது.

வெளி ஆட்கள், சுதந்திரமான சாட்சிகள் இல்லாமல் உலகில் எங்குமே போர் நடத்தப்பட்டது இல்லை. ஈராக்கில் இல்லை, ஆப்கானிஸ்தானில் இல்லை, காசா பகுதியில் இல்லை. ஆனால் இலங்கையில், போர்ப் பகுதிக்குச் செல்ல செய்தி ஊடகங்களுக்கும், தன்னார்வ அமைப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அங்கு உதவிப் பணியாளர்களைக் கொண்டுள்ள ஒரே அமைப்பான அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம், அங்கு அப்பாவி மக்கள் பேரழிவு நிலைமையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

இரண்டரை இலட்சம் தமிழ் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் சிறை வைக்கப்பட்டுள்ளனர். ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர், முடமாக்கப்பட்டுள்ளனர்.

பிரபாகரனை ஆதரித்ததால் தமிழ் மக்களுக்கு இந்தக் கதி வேண்டியதுதான் என்று சொல்பவர்கள் இதயமற்றவர்கள், குருடாகிப் போனவர்கள். பிரபாகரனை ஆதரிக்கிறவர்களும் இருக்கிறார்கள், ஆதரிக்காதவர்களும் இருக்கிறார்கள். எப்படி இருந்தாலும், அவர் மீது செல்வாக்கு செலுத்தக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.

இந்நிலையில் சாதாரண அப்பாவி மக்களைத் தண்டிப்பதை நியாயப்படுத்த முடியுமா? ஈராக்கில் புஷ் செய்த பாவத்துக்காக அமெரிக்க
மக்களை கொல்வது, அவர்கள் புஷ்சை இருமுறை தேர்ந்தெடுத்தவர்கள் என்ற போதிலும், நியாயம் ஆகுமா? சிறிலங்கா படைகள் விடுதலைப் புலிகளை அழிக்க முயல்வதில் தவறு காண முடியாது. ஆனால், அந்த நடைமுறையில், தமிழ் மக்களையும் அவர்களது தாயகத்தையும் சிறிலங்கா அரசு அழிப்பதை நியாயப்படுத்தவோ மன்னிக்கவோ முடியாது.

ஆனால் இது பிரபாகரனை வலுப்படுத்தவே செய்யும். விடுதலைப் புலிகள் போரை வரவேற்கிறார்கள் என்பதை அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.

ஏனெனில் அது அவர்களின் அணிகளை பெருகச் செய்கிறது, குறிக்கோள் மீது அவர்களின் உறுதிப்பாட்டை மீண்டும் வலுப்படுத்துகிறது, தனிநாடு கோரிக்கைக்கு இன்னும் உணர்ச்சிமயமான ஆதரவை உருவாக்குகிறது. நான் பார்த்த முந்தைய போர்களில் (அப்போது செய்தியாளர்கள் போர்ப்பகுதிக்குள் செல்ல முடிந்தது) இருந்து, விடுதலைப் புலி போராளிகள் போரிடுவதை விரும்புகிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடிந்தது.

சமாதான காலத்தில் விடுதலைப் புலி கெரில்லாக்கள் கட்டுப்பாட்டுடனும், நிதானத்துடனும் இருக்கிறார்கள். போர்க் காலத்தில் முற்றிலும் மாறுபட்டு அதிக உணர்ச்சியும் மகிழ்ச்சியும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

விடுதலைப் புலிகளின் கதை முடிந்துவிட்டது என்று இதற்கு முன்பும் பலமுறை கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் பிரபாகரன் பலமுறை 'கொல்லப்பட்டிருக்கிறார்' அல்லது 'கொல்லப்படும் நிலையை நெருங்கியிருக்கிறார்.' அவரது பதுங்கு குழியைப் படையினர் எப்போதேனும் நெருங்கும் எனில், பிரபாகரன் தனது சயனைட் குப்பியைக் கடித்து விழுங்கி காவிய நாயகன் நிலையை அடைந்துவிடுவார்.

"தந்திரமான மதிப்பீடுகள் இல்லாத நிலையில், இதுதான் முடிவு ஆட்டம் என்றும், இதுதான் பிரபாகரனின் கடைசி நிலை என்றும் சிறிலங்கா அரசு கூறி வருவதையே பத்திரிகையாளர்களும் திருப்பிச் சொல்லி வருகிறார்கள்.

கடந்த கால அனுபவத்தை வைத்து மதிப்பிடும்போது, இதை நான் சந்தேகிக்கிறேன். பிரபாகரனின் பிடியில் இருந்து கடைசித் துண்டு நிலத்தையும் சிறிலங்கா படை கைப்பற்றிவிடும் என்பது உறுதி. ஆனால், விடுதலைப் புலிகள் இயக்கமே முடிந்துவிட்டது என அதற்குப் பொருளாகாது. அவர்கள் தாங்கள் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றுள்ள, யாரும் எதிர்பாராத நிலையில் தாக்கும் கொரில்லா போர்முறைக்குத் திரும்புவார்கள். ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றுவது வேறு என்பதையும், அதைத் தொடர்ந்து கட்டுப்பாட்டில் வைத்திருப்பது பல்வேறு சிக்கல்களை எழுப்பும் என்பதையும் ஏற்கெனவே பல்வேறு படைகள் உணர்ந்திருக்கின்றன.

பிரபாகரன் இதற்கு முன்பும் போர்களில் தோற்றிருக்கிறார். சொந்தப் படை, காவல்துறை, நீதிமன்றங்கள், வரி விதிப்பு முறை முதலியவற்றைக் கடந்த காலத்தில் ஒருமுறை அல்ல பலமுறை அவர் உருவாக்கி இருக்கிறார் அவை எல்லாம் அழித்து ஒழிக்கப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும் மீண்டும் அவர் தொடங்கி உருவாக்கி இருக்கிறார்.

54 வயதாகும் பிரபாகரனிடம், மீண்டும் தொடங்குவதற்கும், மேலும் 20 ஆண்டுக் காலம் தொடர்வதற்கும் இன்னும் போதிய மன உறுதி இருக்கிறது. இன்று பிரபாகரனின் நிலைமை ஆபத்துக்கும் அச்சத்துக்கும் உரியதாகத் தோன்றுகிறது. ஆனால் நல்வாய்ப்புச் சக்கரம் அப்படியே நிற்பதில்லை.

நிலைமைகள் மாறும். அமெரிக்கா மாறியிருக்கிறது. உலகம் மாறிக் கொண்டிருக்கிறது. முதலாளித்துவம் மதிப்பிழந்து விட்டது. சோசலிசம் பின்வாசல் வழியாக நுழைந்து கொண்டிருக்கிறது. பெரிய வங்கிகள் எல்லாம் நொடித்துப் போய்விட்டன. தலைப்புச் செய்திகளில் வளவாழ்வுச் செய்திகளுக்கு மாற்றாக துன்பச் செய்திகள் இடம்பிடித்து வருகின்றன.

புதிய காற்று கடந்த காலத்தின் அதீத நம்பிக்கைகள் பலவற்றையும் தூக்கி வீசி வருகிறது. உலக அரங்கில் புதிய வாய்ப்புகள், அணி மாற்றங்கள், முன்மாதிரிகள் நிகழ்ந்து வருகின்றன. அவற்றின் தாக்கம் வெகுதொலைவில் இலங்கையில் உள்ள மூலை முடுக்குகளிலும் உணரப்படும். கண்ணீர்த் துளி வடிவில் அமைந்த அந்த அழகிய மரகதத் தீவு அமைதியுடன் உறவாடுவதற்காக காத்திருக்கிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Read more...