Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts

நித்யானந்தா - யார் செய்த தவறு ?!


உலகம் முழுவதும் கடந்த சில நாட்களாய் நித்தியானந்தாவின் செக்ஸ் லீலைகள் பரபரப்பாகி பேசப்பட்டு வருகிறது. கூகிளில் அதிகம் தேடப்பட்ட வார்த்தையாகவும், ட்விட்டரில் அதிகமாக ட்விட் செய்யப்பட்டவையாகவும், அலுவலகம், டீக்கடை, பொதுஇடம் என கூடுமிடமெல்லாம் இதைப் பற்றிய விவாதமாகவே உள்ளது.

ஆனந்த விகடன், குமுதம் போன்ற வார இதழ்களில் காணப்படும் ஆன்மீகக் கட்டுரைகள் வாழ்க்கையை வழிப்படுத்தும் பணிகளை நமக்குத் தருகின்றன. விகடன் பிரசுரத்தின் மூலம் தயானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் 'மனம் மலரட்டும்' எனும் புத்தகம் வாங்கி படித்திருக்கிறேன். அதுபோலவே குமுதத்தில் வெளிவந்த 'கதவைத் திற காற்று வரட்டும்' எனும் தலைப்பில் நித்யானந்த எழுதி வந்த தொடர் எனக்கு மட்டுமல்லாமல் ஏனைய தமிழர்களுக்கும் நித்யானந்தாவை அறிமுகப்படுத்தியல் பெரும்பங்கு உள்ளது. குமுதம் கொடுத்த அறிமுகத்தில் சில நாட்களில் நித்யானந்தாவின் சொற்பொழிவு ஒன்றின் விளம்பரத்தைப் பார்த்து விசாரித்ததில் அந்த சொற்பொழிவில் கலந்து கொள்ள ரூ 500 என்றார்கள். அப்போதே நினைத்தேன், இவர்கள் பண்ணுவதெல்லாம் பணம் சம்பாதிக்கத் தான் என்று. அதே போல் கல்கி ஆசிரம தரிசனம் ஒன்றிற்கும் நண்பர் ஒருவர் சென்று வந்தார், அவரிடம் வினவியதில் தரிசனத்திற்கு ரூ 500 என்றார்கள். கல்வி நிலையங்கள் பெரும் வியாபாரமாகி அதன் மூலம் ஏற்படும் பாதிப்புக்கள் நாட்டை வேறுவழிக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிற தருணங்களில் ஆன்மீகம் கல்வி வியாபாரத்தை மிஞ்சியதாய் காணப்படுகின்றது. நித்யானந்தரின் செல்வாக்கு என்பது விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண்டுகளாகவே உள்ளது, ஆனால் அவரது சொத்துக்கள், ஆசிரமக் கிளைகள், பரப்பப்படும் விளம்பரங்கள் ஆகியவற்றைக் காண்கையில் ஒரு வெற்றிபெற்ற தொழிலபதிர்களுக்கு ஈடான அனைத்து விளம்பர உத்திகளும் கையாளப்பட்டு வருவதை மக்கள் யோசிக்க வேண்டும்.

சினிமாக்களிலும், கதைகளிலும் கடவுள் தோன்றி மறைந்து அருள் பாலிப்பதைப் போன்ற எந்த நிகழ்வுகளும் எந்த மதத்திற்கும் இந்த உலகில் நடப்பதில்லை. ஆனால் கடவுளின் அவதாரங்கள், மனித தெய்வம் எனச் சொல்லிக் கொள்ளும் இவ்வகை கடவுளின் முகவர்களை மக்களாகிய நாமும், நமது அரசாங்கமும் சற்றே தெளிவான பார்வையுடன் இவர்களை அணுக வேண்டும்.


நித்யானந்தா செய்த தவறு என்ன ?

சட்டப்படி வயது வந்த ஆணும், பெண்ணும் சம்மதத்துடன் நடைபெறும் எந்தவொரு நிகழ்வுகளையும் குற்றமென இந்திய அரசியலமைப்புச் சட்டம் சொல்வதில்லை. ஆனால் நம்பிக்கையை ஏற்படுத்துபவரும், நம்பிக்கையை ஏற்படுத்த சொற்பொழிவுகள் ஆற்றியும், ஏராளமான தொடர்கள், புத்தகங்கள் எழுதியும், ஆசை, ஆன்மீகம், சந்நியாசம், மனதைக் கட்டுப்படுத்துதல், கடவுளின் அவதாரம், மனித தெய்வம், தெய்வ மனிதன் என ஏனைய விளக்கங்களைக் கொடுத்து வருபவருமாகிய நித்யானந்தா, தன்னைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களுக்கு அவரின் பின்புலங்கள் அளிக்கின்ற ரகசிய அதிர்ச்சிகளே குற்றமாகும். அவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்களை அளிக்கின்ற செயல்களில் ஈடுபட்டது குற்றங்களாகும்.

தோண்டத் தோண்டத்தான் நிறைய குற்றங்கள் வரும். பூனைக்கு தற்சமயம் மணிகட்டியாகி விட்டது. இனி இது வரையில் புகார் கொடுக்கப்படாமலிருந்த ஏனைய புகார்கள் நித்யானந்தாவிடம் பாய்ந்து அவரை ஒருவழியாக்கமால் சும்மா இருக்கப் போவதில்லை. பார்ப்போம் இது எந்தளவுக்கு பாயுமென்று... அல்லது பதுங்குமென்று...

ஊடகங்கள் செய்த தவறு ?!

தமக்கு வீடியோ கிடைத்தது என்பதற்கான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை காணும் தொலைக்காட்சியில் அத்தனை காட்சிகளையும் ஒளிபரப்பப் தேவையில்லை. வெறும் புகைப்படங்களை மட்டும் காட்டியிருக்கலாம். ( இருந்தாலும், இவர்களின் நிகழ்ச்சிகளில் வருகின்ற நடன இயங்கக்களைக் காட்டிலும், கம்மி தான்.. ) ஊடகத்தின் உச்ச கட்டமாய் முழுவீடியோவைப் பெற சந்தா கட்டுங்கள் என நக்கீரம் கூறியது தான். ஆபாச வீடியைவைக் காட்டி தமக்கு கல்லா கட்டியதை என்னவென்று சொல்வது ?! கதவைத் திற காற்று வரட்டும் என இவரை அறிமுகப்படுத்திய குமுதம் தவறான ஒருவரை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியதற்கு வருத்தம் தெரிவிக்காமல் கூட்டத்தில் கோவிந்தாவாக ‘நித்யானந்தாவின் செக்ஸ் லீலைகள்’ என லிங்க் கொடுப்பதும் எந்த வகை எனத் தெரியவில்லை.

அரசாங்கத்தின் தவறு என்ன ?

கட்டுக்கடங்காமல் தனது தொழிலை விரிவுபடுத்திக் கொண்டு தமக்கான சட்டதிட்டங்களை வகுத்துக் கொண்டு கொட்டிக்கிடக்கின்ற கோடி கோடியான பணங்களுக்கு கணக்கு என்னவென்பதை அரசாங்கம் நெருங்குவதுமில்லை, நெறிப்படுத்துவதும் இல்லை. மாறாக ஆளும் அரசாங்க பக்திமான்களும் ஆன்மீகவாதிகள் நடத்தும் விழாக்களில் கலந்து கொள்வதால் காவல்துறை போன்றவர்கள் இவர்களிடம் கைவைப்பதில்லை. ஆன்மீகம் எனும் போர்வையில் இவர்கள் பண்ணும் அனைத்தும் அட்டூழியங்களுக்கும் அரசாங்கம் துணை போவதற்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கின்றதே ?!

ஆக, அரசாங்கம் இவ்வகை ஆன்மீகப் புள்ளிகளை நெறிப்படுத்துவதற்கான சட்டமியற்ற முறையான வகையில் செய்ல்படுத்தி கண்காணிக்க வேண்டும்.

மக்களின் தவறு என்ன ?

எத்தனை முறை ஏமாந்தாலும் அந்த நோயைக் குணப்படுத்துகிறார், இந்த நோயைக் குணப்படுத்துகிறார் என்று ஆங்காங்கே கூறுவதைக் கேட்டு விட்டு சாமியார்களின் முன் விழவைக்கின்ற நம்பிக்கை தான்.

Read more...

காதலில் காமம்...தொடர்ச்சி

நான் பதிவிட்ட ‘காதலில் காமம், கசந்த பின் ஏமாற்றம்’ க்கு தோழி ஒருவரிடமிருந்த வந்த கடிதத்தை இங்கே பதிவிடுகிறேன்.


ஆண்கள் மீது நம்பிக்கை வைப்பது தவறா ? அவர்களின் மீது ஆழமான அன்பு வைப்பது தவறா ? ஒரு பெண்ணின் உச்ச கட்ட நம்பிக்கை தான் அவள் வீட்டின் கவுரவும் மற்றும் அவளின் எதிர்காலம் அனைத்தைதும் காதலனின் விருப்பத்திற்காக இழக்கிறாள். ஆனால் ஆண்கள் சுயநலமியாகவும், நம்பிக்கை துரோகிகளாகவும், உறுதியான மனநிலை இல்லாதவர்களாகவும் இருப்பது இதற்குக் காரணம். ஆடை அழகாக, ஒழுக்கமாக இருந்தால் மட்டும் விட்டு விடுவார்களா என்ன ? - பெயர் வெளியிடாத ‘ஈர்த்ததில்’ வாசகி

ஆண், பெண் என வேறுபட்டு இருந்தாலும் பருவ வயதாலும், உணர்ச்சிகளாலும் உந்தப்பட்டு கொள்கிற செயல்முறைக்கு ஒழுக்கம் என்னும் பெயரில் ஆணாதிக்க துணை கொண்டு குற்றம் சாற்றிடல் நியாயம் இல்லை தானே? பாலின பாகுபாட்டைக் கொண்டு ஒருவன் மற்றொருவரை குற்றவாளி எனக் கூறுவது தான் கொடுமையிலும் கொடுமை. எதுவாயினும் இதில் நீக்கமற நிலைத்திருப்பது ஆணாதிக்கச் சிந்தனை மட்டுமே. காதலில் காமம் நெருக்கங்களையும் , அன்பையும், நம்பிக்கையையும் அதிகம் ஆழப்படுத்துகிறது. சில இடங்களில் சந்தேகங்களையும், வெறுப்புகளையும் ஏற்படுத்துகிறது.

Read more...

காதலில் காமம், கசந்த பின் ஏமாற்றம்...

அறிவிலியின் பதிவுகளிலிருந்து


அன்புடன் அந்தரங்கம், உண்மைக்கதை போன்றவைகள் படிப்பதற்க்கு சுவாரசியமாக இருக்கும். இது உங்களின் சுவாரசியத்திற்காக அல்ல, வாழ்வியல் பாடங்களுக்காக.. 

சிந்தியுங்கள் நண்பர்களே !

என்னதான் படித்துக் கல்வி அறிவு பெற்று விட்டாலும், சமூகத்திலும் வேலை வாய்ப்புகளிலும் ஓரளவிற்கு ஆண்களுக்கு நிகரான வாய்ப்புகளைப் பெற்று விட்டாலும் இன்னமும் கூட ஆண்களை நம்பித் தங்களைப் பறிகொடுத்து விட்டு தவிக்கும் பெண்களைத் தினமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

திருப்பூரில் பிறந்து வளர்ந்த 23 வயதான பிரியதர்சினி என்ற பெண்ணுக்கு ஏற்பட்ட நிலையைப் பாருங்கள்.

பிறந்ததில் இருந்தே தைரியசாலியாக இருந்த இந்தப் பெண் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்புடன் இருந்தார். அதற்காகத் திருப்பூரில் உள்ள தனது குடும்பத்தைப் பிரிந்து சென்னையில் சென்று வேலை பார்க்கும் அளவுக்குத் தைரியம் உள்ளவராகத்தான் இருந்து உள்ளார்.

சென்னையில் உள்ள தனது சித்தப்பா வீட்டில் தங்கி ஒரு இறக்குமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார். வாரம் ஒருமுறை தனது சொந்த ஊரான திருப்பூருக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்திருக்கிறார். அப்படி ரயிலில் செல்லும் போது ஒருமுறை எதிர் இருக்கையில் பயணம் செய்த ஈரோட்டைச் சேர்ந்த ஒரு இளைஞரைச் சந்தித்து உள்ளார்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட உடனேயே இருவருக்கிடையேயும் காதல் கனிந்து விட்டது. பார்த்த உடன் பற்றிக் கொண்ட காதலுக்கு பிரியதர்சினியின் தைரியமான சுபாவம் ஊக்கம் தரக் காதல் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்துள்ளது,

பிரியதர்சினி வீட்டை விட்டு வெளியில் தங்கி இருந்தது இந்தக் காதல் பறவைகளுக்கு வசதியாகப் போய் விட்டது. சென்னையில் உள்ள திரையரங்கம், பூங்காக்கள், கடற்கரை என்று சிறகு விரித்துப் பரந்த இந்தக் காதல் பறவைகளுக்கு நாளடைவில் சிற்றின்பம் அலுத்து விடப் பேரின்பம் தேட முனைந்து உள்ளனர்.

கேள்வி கேட்கக் குடும்பத்தினர் யாரும் அருகில் இல்லாத நிலையில் அடிக்கடி வெளியூர் சென்று அங்குள்ள விடுதிகளில் இருவரும் தனியாகத் தங்கித் தங்கள் காதலை வளர்க்க ஆரம்பித்து உள்ளனர்.

பலமுறை இது போன்று வெளியூர் விடுதிகளில் தங்கி வரம்பு மீறி உல்லாசம் அனுபவிக்க ஆரம்பித்து உள்ளனர் இந்தப் புனிதமான காதல் ஜோடிகள். காதலன் விரும்பிய போதெல்லாம் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன்னையே அவனுக்கு விருந்தாக்கித் தனது காதலனை இன்பத்தில் திளைக்க வைத்துத் தானும் இன்புற்று வந்திருக்கிறார் இந்தப் பெண்.

திருமணத்திற்கு முன்பே தான் விரும்பிய போதெல்லாம் தன்னுடைய காம இச்சைகளைத் தீர்த்து வைத்துத் தன்னுடன் பலமுறை உல்லாசமாக இருந்த பிரியதர்சினியைப் பற்றி அவரது காதலனுக்கு திடீரென சந்தேகம் வந்து உள்ளது.

திருமணத்திற்கு முன்னர் சிலநாட்கள் மட்டுமே பழகிய தன்னுடன், பலமுறை தகாத உறவு வைத்துக் கொள்ளச் சிறிதும் தயங்காத இந்தப் பிரியதர்சினி எப்படி ஒரு நல்ல குடும்பப் பெண்ணாக இருக்க முடியும் என்று எண்ணி உள்ளார் அந்த யோக்கியமான காதலன்.

அந்தப் பெண்ணைத் தன் விருப்பம் போல அனுபவித்து முடித்து, அந்தப் பெண்ணின் மீது தனக்கு இருந்த எல்லாவிதமான இச்சைகளையும் தீர்த்துக் கொண்ட பின்னர்தான் இந்தப் புனிதக் காதலனுக்கு இப்படிப்பட்ட ஒரு ஞானோதயம் தோன்றி அந்தப் பெண்ணின் மீது சந்தேகம் வந்துள்ளது என்பதைக் கவனிக்க வேண்டும்.

அந்தக் காதலன் தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தினால் அந்தப் பெண்ணுடனான உறவைத் துண்டிக்க முயன்றுள்ளார். அந்தப் பெண்ணை சந்திப்பதைத் தவிர்த்த அவர், தனது அலைபேசி எண்ணையும் மாற்றி விட்டிருக்கிறார்.

இன்பம் வேண்டும் என்ற போதெல்லாம் தன்னிடம் உல்லாசம் அனுபவித்து விட்டு, பின்னர் கருப்புச் சக்கையைப் போலத் தன்னைத் தூக்கி எறிய, தனது காதலன் முடிவு செய்து விட்டதை அறிந்த அந்தப் பெண் அதிர்ந்துள்ளார்.

தன்னைத் திருமணம் செய்து கொள்ளும்படி பலமுறை அந்த இளைஞனைக் கெஞ்சிக் கூத்தாடி உள்ளார்.ஆனாலும் அதற்கு எந்தப் பலனும் ஏற்படவில்லை. அந்த இளைஞனின் மனது சிறிதும் மாறவில்லை. பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என்று முற்றாக மறுத்து விட்டிருக்கிறான் அந்த இளைஞன்.

பிரியதர்சினி தைரியசாலி அல்லவா, உடனே காவலர்களிடம் புகார் கொடுத்து தனக்கு நியாயம் பெற்றுத் தரும் படி முறையிட்டு உள்ளார். காவலர்களின் விசாரணையின் போதும் பலத்த நிர்பந்தத்திற்குப் பின்னரே அந்த இளைஞன் பிரியதர்சினியைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டு உள்ளார்.

இந்த இளம் பெண்ணான பிரியதர்சினி ,

நாகரீகம் என்ற போர்வையில் கண்டது காதலில் விழுந்தது,

சில நாட்கள் பழகிய உடனேயே அந்தக் காதலன்தான் தனக்கு உலகம் என்று நம்பித் தன்னை முழுமையாக அவனுக்குக் கொடுத்தது,

காதல் என்பதையும் தாண்டித் தனது உடல் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் தனது காதலனுடன் எல்லை மீறிப் பலமுறை உல்லாசத்தை அனுபவித்தது,

தான் ஒரு பெண் என்பதையும் - சமுதாயத்தில் பெண்ணிற்குரிய கட்டுப்பாடுகளைய்ம், பொறுப்புகளையும் மறந்து - தனது கற்பையே காவு கொடுத்தது,

பின்னர் தனது காதலன் தன்னைத் திருமணம் செய்ய மறுத்த போது அழுது புலம்பியது,

என்ற சம்பவங்கள் வரை பிரியதர்சினி தொடர்ந்து தவறுகளையே செய்து வந்திருந்தாலும் பின்னர் காவல்துறை மூலம் நீதியைப் பெற்றது புத்திசாலித்தனம் என்றால் அதை விட முன் யோசனையுடன்- தீர்க்க தரிசனத்துடன் - இன்னொரு முடிவையும் தைரியமாக எடுத்து உள்ளார்.

திருமணத்திற்கு முன்னரே தன் மீது இத்தனை சந்தேகம் வைத்த தனது காதலன் இப்போது காவலர்களின் மிரட்டலால் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்டுள்ள சூழலில் அவனைத் திருமணம் செய்து கொண்டால் தனது எதிர்காலம் எப்படி வளமாக இருக்கும்? என்று எண்ணி அஞ்சியுள்ளார் பிரியதர்சினி.

நிதானமாக சிந்தித்து சமயோசிதமாக செயல்பட்டு உள்ளார் அந்தப் பெண், தன்னை விரும்பியபடி எல்லாம் அனுபவித்து விட்டு, காரியம் முடிந்த உடன் கழட்டி விட்டு விடத் தீர்மானித்த - தன் மீது சந்தேகப் பட்ட - அந்த இளைஞன் இனிமேல் தனக்கு இனிமையான வாழ்வினைத் தருவான் என்று நம்புவது ஒரு முட்டாள் தனமான நம்பிக்கையாக இருக்குமே தவிர புத்திசாலித் தனமான முடிவு அல்ல என்று முடிவெடுத்து இருக்கிறார் அந்தப் பெண்.

நீண்ட போராட்டத்திற்குப் பின்னர், காவலர்களின் மிரட்டலுக்குப் பின்னர் தன்னைத் திருமணம் செய்து கொள்ள ஒப்புக் கொண்ட அந்த இளைஞனை உதறி விட்டு விட்டு நடையைக் கட்டி உள்ளார் அந்தப் பெண்.

இவ்வளவு புத்திசாலித் தனமாகவும் , தீர்க்கமாகவும் சித்தித்து தைரியமாகச் செயல்படக் கூடிய துணிவு உள்ள பிரிய தர்சினியைப் போன்ற பெண்கள் கூட காதல் என்று வரும் போது மட்டும் இப்படி அவசரப்பட்டுத் தங்கள் வாழ்க்கையைத் தொலைத்து விடுவதான் வேதனையாக உள்ளது.

இளம் பெண்கள் படிக்கும் போதே அவர்களுக்கு இது போன்ற சூழ்நிலைகளை எப்படி எதிர் கொள்ளுவது என்பது பற்றிய பயிற்சிகளையும் பெண்களின் மனவலிமையை அதிகரிக்கும் வகையிலான பயிற்சிகளையும் அளிக்க வேண்டியது மிக அவசியம்........

Read more...

வெறுப்பிலிருந்து தப்பிக்க !


அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவு ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.

அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.

ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.

ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.

''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.

உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்; இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.

நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!

நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன... பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித் தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!'' என்றார் ஓஷோ.

'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!

''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித் தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.

ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள்.
உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது. அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்.

Read more...

’நம்பிக்கைகள்’ பட்டியலில் கல்கி

ஆனந்த விகடனின் Top 10 நம்பிக்கைகளில் இடம் பிடித்திருக்கிறார் கல்கி.  அவருக்கு வணக்கங்களும், மேலும் மேலும் சாதிக்க வாழ்த்துகளும், 



திசை வென்ற திருநங்கைகளில் ஒருவர். திருநங்கைச் சமூகத்தின் குரலாக, 'சகோதரி' என்னும் இதழைத் தொடங்கியதுதான் கல்கியின் முதல் முகவரி. 'இப் படிக்கு ரோஸூ'டன் இணைந்து 'சகோதரி ஃபவுண் டேஷன்' அமைப்பைத் தொடங்கினார். தொடர்ந்து, கல்கியின் ஒவ்வொரு செயல்பாடும் திருநங்கைகளின் வாழ்க்கை மேம்பாட்டுக்கே அர்ப்பணிப்பானது. கடலூர் குடிகாரத் தம்பதிகள் 500 ரூபாய்க்குத் தங்கள் குழந்தையை விற்க, அதைத் தத்தெடுத்து வளர்க்கிற கல்கி, இப்போது தாயுமானவர். திருநங்கைகளுக்கான ஊடகங்களை

Read more...

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக திருநங்கைகள்

பார்த்ததும்..ஈர்த்ததும்...(3)

இது ஓர் புதுமையான போராட்டம் அல்ல.. புதுமையானவர்களின் போராட்டம். உள்நாட்டில் இனம்,மொழி, உறவு, சாதி என எதையும் பாராது பாலினத்தின் அடையாளமின்றி அங்கீகாரமின்றி ஒடுக்கப்பட்ட ஓர் இனம் வெளிநாட்டில் ஒடுக்கப்பட்டும் சிங்கள இனவெறிச் செயலில் கொலையாகிக் கொண்டிருக்கும் தம் இனத்திற்கு ஆதரவாய் உண்ணாநிலை ஒப்பாரி போராட்டம்.

ஆம் நண்பர்களே,

சென்னை சேப்பாக்கத்தில் திசம்பர் 8 ஆம் தேதி காலை 9 மணியிலிருந்து 5 மணி வரை ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் உள்ள திருநங்கைகள் உண்ணாவிரதப் போராட்டத்துடன் ஒப்பாரி போராட்டமும் நடத்தினர். இப்போராட்டத்தை நாடளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் ஆரம்பித்து வைத்தார்கள். இப்போராட்டத்தில் திருநங்கைகள் தவிர ஏராளமான பத்திரிக்கையாளர்கள், சினிமா கலைஞர்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என சிறப்பாக போராட்டம் நடைபெற்றது.



அவ்வப்போது திருநங்கைகள் அவர்களின் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தினார்கள் என்று தான் கேள்விப்பட்டிருப்போம், ஆனால் முதன் முதலாக ஈழத்தமிழர்களுக்காக திருநங்கைகள் போராட்டம் நடத்தியிருப்பது மிகுந்த பாராட்டத்தக்கதும், வரவேற்கத்தக்கதுமாகும். கல்வி, வேலைவாய்ப்பு, ஊடகம், சமூகபணி என மெல்ல மெல்ல அவர்களின் பார்வைகளும், பணிகளும் திரும்பியிருப்பது ஓர் நல்ல முன்னேற்றத்தை திருநங்கைகளுக்கு, அவர்களின் தவறான பார்வையை வீசும் சமூகத்திற்கும் தருகிறது.

சகோதரி என்னும் இதழை நடத்தி வரும் கல்கி, சுடர் எனும் அமைப்பின் செயலாளர் பிரியா பாபு, விஜய் தொலைக்காட்சி புகழ் இப்படிக்கு ரோஸ், லிவிங் ஸ்மைல் வித்யா எனும் ஊடகங்களுக்கு தெரிந்த முகங்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள்.



கல்கி பேசுகையில் பலதுறைகளில் முன்னேறி வரும் திருநங்கைகளை புறக்கணிக்காமல் ஆதரவுக்கரம் கொண்டு அவர்களையும் சமூகத்தில் ஒரு மனிதராய் பாருங்கள் என கோரிக்கை விடுத்தார். அத்துடன் இனவெறியுடன் நடந்து கொண்டு தமிழ் மக்களை அழிக்கும் சிங்கள அரசுக்கும் கண்டனம் செய்தார். லிவிங் ஸ்மைல் வித்யா ஓர் நல்ல எழுத்தாளர் என்பதால் அதிகம் பேசுவார் என எதிர்பார்த்தோம், ஆனால் சுருக்கமாக முடித்துக் கொண்டார். பின்னால் பேசிய சில திருநங்கைகளும் தாங்களின் வலிகளையும், வேதனைகளையும் கூறியதோடு தமிழர்களுக்காக தாம் கொடுக்கும் நோக்கத்தையும் கூறினர். அவ்வப்போது ஒப்பாரிப் பாட்டுக்களையும் பாடினர், அப்பாட்டுக்களின் முழு வரிகளும், வலிகளும் நெஞ்சை உருக்குவதாய் அமைந்திருந்தது.

சுபாஸ்னா என்னும் கல்லூரி மாணவி திருநங்கைகளின் துயரால் மனம் பாதிக்கப்பட்டு அவர்களின் மீது சமூகத்தின் பார்வையை மாற்றிட ஆராய்ச்சி பல செய்து தம் கல்லூரியில் ஐநூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் திருநங்கைகள் நிலை விளக்கி மாற்றம் உண்டு பண்ணியிருக்கிறார். அவர் தம் உரையின் போது தமக்கு ஏற்பட்ட அனுபவத்தையும், ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் பெண்மையையும், ஆண்மையையும் உணர்ந்து திருநங்கைகளை ஒதுக்கும் மனநிலை நீங்கி மதிக்கும் மனநிலை உருவாகிட கேட்டுக் கொண்டார். சகலமாய் திருநங்கைகளிடம் பேசி, அன்பு பாராட்டி, அவர்களுடன் வெகுநேரம் உரையாடிக் கொண்டிருந்ததில் தெரிந்தது அவரின் ஆராய்ச்சிப் பணிகள்.





சினிமா கலைஞர்களான தயாரிப்பாளர் வி.சேகர், ஆர்.கே.செலவமணி, தமிழ் ஆர்வலர் தியாகு, ஜெகஸ்தர் திருநங்கைகளை பாராட்டி பேசியதோடு ஈழத்தமிழர்களை ஆதரித்தும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைகளை கண்டித்தும் பேசினர். விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரையில் தாம் பிரதமரை சந்தித்த போது நடந்த சம்பங்களை விளக்கி தமிழர்களுக்கு எதிராகவும், சிங்களவர்களுக்கு ஆதரவாகவும் நடந்து கொள்கிற நடுவண் அரசையும், ஏதோ ஒருவன் மாவட்ட ஆட்சியரிடத்தில் மனு கொடுத்து வந்திருப்பது போல் கொடுத்து வந்திருப்பதையும், இயலாமையின் விளிம்பில் தமிழக தலைவர்களும், தமிழனும் இருக்கிறான் என்பதை தோலுரித்து மிகுந்த வேதனையுடன் சொன்னார். அத்துடன் தமிழகத் தலைவர்களை விமர்சித்த இலங்கை ராணுவ தளபதி பொன்சேகாவையும் கண்டித்தார். மாலை ஐந்து மணி அளவில் திருநங்களுக்கு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதம் முடித்து வைக்கப்பட்டது.

பரவலான அறிவில்லாமல் தம் சிறு அறிவிலிருந்து விமர்சிப்பவர்களுக்கு மத்தியிலும், பதவி சுகங்களுக்காகவும், சுயநல விரும்பிகளாகவும் ஈனத்தனமாய் ஈடுபடும் ஒரு சில நபர்களிலிருந்து, அரசியல்வாதிகளிலிருந்து வேறுபட்டு ஒற்றுமையுடன் தம் இனத்திற்கு இழைக்கப்படும் கொடுமைகைகளுக்கு குரல் கொடுக்கும் இத் திருநங்கைகளின் வலிகளை உணர்வோம், வாய்ப்பளிப்போம் !

Read more...

பதில் வேணுமா ?





ஏன் மூன்று பேரும் இவ்வளவு யோசிக்கிறாங்க...


இவரு ஏன் மின்சாரம் பாய்ஞ்ச மாதிரி இருக்கிறார்.. ?

இங்கே சொடுக்கங்களேன்...

Read more...

மதங்கள் மறந்து மனிதம் வளர்ப்போம் !

பார்த்ததும்..ஈர்த்ததும்...(2)


மும்பை வழக்கம் போல் தாக்குதலாகி இருக்கிற்து.. அரசியல் கட்சிகளும் வழக்கம் போல் ஓர் அறிக்கை, தீவிரவாதிகளுக்கு ஒரு கண்டனம், எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சியை பதவி விலக வைக்கும் கோரிக்கை, மக்களும் அனைத்தையும் மறந்துவிட்டு பணிக்குச் செல்லும் வழக்கமான நிகழ்வுகளுக்கு மேலே “பொறுத்தது போதும்” என்னும் சிறியதொரு மாற்றங்களைக் காண முடிகிறது. நடுவண் அரசும் இம்முறை தீவிர நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது. பாகிஸ்தானை குற்றம் சாட்டி தீவிரவாதக் குழுக்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வருகிறது. தீவிரவாதத்தின் தீவிரத்தை நேரலையில் ஒளிபரப்பி மக்களுக்கு உண்மை உணர்த்தி உணர்ச்சிகளை எழுப்பி குடிமகனின் கடமை என்னவென்பதை உணர்த்தி பெரும்பங்கு ஊடகங்களுக்கு உண்டென்றாலும் பணியிலிருக்கும் ராணுவ வீரர்களை படமெடுத்து தப்பி வந்தவர்களை தாவி பிடித்து பேட்டி கண்டுகொண்டு ராணுவ நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பி தீவிரவாதிகளுக்கு உதவுவது மாதிரியான செயல் என்னவென்று தெரியவில்லை. இம்மாதிரியான தருணங்களில் நேரலைகளை தவிர்ப்பது நல்லது, அல்லது தடை செய்ய வேண்டும் தான்.



பாதுகாப்பு படையினரும் திறமையாகப் போரிட்டு சிலர் உயிரையும் தியாகம் செய்தது பெரும் வருத்தமளிக்கிறது. பல்வேறு தருணங்களில் சிறப்பாகப் பணியாற்றிய மிக முக்கியமான உயர் அதிகாரிகளும் பலியாகியிருப்பது மிகுந்த வேதனையளிக்கிறது. தீவிரவாதிகள் மிக நுணுக்கமாய் நாட்டில் உள்ளே நுழைந்து அட்டூழியங்கள் செய்யும் அளவுக்கு நமது பாதுகாப்பு இருப்பது மிகுந்த வேதனை தான். நாட்டில் பாதுகாப்புக்கு மட்டும் செலவிடப்படும் கோடிகளை என்ன பண்ணுகிறார்கள் என்ற கேள்வியும் வருகிறது. நீர் வழியே ஒரு நாட்டிற்குள் நுழைந்து நாடு முழுவதையும் சுமார் 60 மணி நேரம் பதட்டத்தில் வைக்கும் இந்த புதிய உத்தியைக் கையாண்டிருக்கிறார்கள். இம்மாதிரியான தருணங்களில் சிறப்பாக செயல்பட எல்லா காவல் துறை அதிகாரிகளால் முடியுமா? துப்பாக்கியை பெரும்பான்மையானவர்களுக்கு இயக்கவே தெரியாது. தெரிந்திருந்தாலும் குறிப்பிட்ட வகை துப்பாக்கிகளால் தான் இயக்க முடியும்.


தீவிரவாதம் ஆரம்பிக்கப்படும் போதே அதாவது சுட ஆரம்பிக்கும் போதே தகர்த்தெறிந்திருந்தால் பெரியளவு பாதிப்புகள் கட்டுப்படுத்த முடியும். ஆனால் காவல் துறை அதிகாரிகளே துப்பாக்கியைத் தூக்கி கொண்டு ஓடி ஒழியும் எங்கே காண்பீர்கள். பாவம் அவர்கள் என்ன செய்வார்கள் ? சோம்பேறிகளாய், பெரும் தொப்பை உடையவர்களாய், மாமூல் பண்ணவும், அப்பாவி மக்களை மிரட்ட மட்டுமே தெரிந்த காவல் துறை என்ன செய்ய முடியும் ? அவர்களை ஆளும் அரசால் தான் என்ன செய்ய முடியும்?


தீவிரவாதம் எங்குமே எதிர்வினையாகவே கொள்ளப்படுகிறது. அதாவது முன்னால் செய்த நிகழ்வுகளின் எதிர்வினைகளே ஆகும். சிறுபானமையினருக்கும், பெரும்பானையினருக்கும் ஏற்படும் சிறு சிறு தவறுகள் பெரியனவாகி சகிப்புத் தன்மையின்றி மக்களை சவப்பெட்டிக்குள் தள்ளுவதற்கான ஆயத்தங்களை மனிதர்களின் மனங்களே வழி செய்கிறது.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தான் என்பது மாதிரி மற்றொருவர் வழிபடும் கோயிலை இடிப்பானேன் ? பெரும்பான்மையினர் நம்பும் இடத்தை விட்டுக் கொடுத்து தனது பண்பை உலகிற்கு உணர்த்த சிறுபான்மையினர் வழிவகுத்திருக்கலாம் ? எங்கோ தனது மதம் அழிந்து விடுமோ என்றெண்ணியே இளரத்தங்களில் வன்மை வளர்த்து நெருப்பு வளர்த்து தீவிரவாதத்தை வளர்ப்பது பெரும்பான்மையோ, சிறுபான்மையோ எல்லாமே தீவிரவாதம் தான்.
கண்முன்னே காணும் ஒரு நிகழ்வுக்கு உனது ரத்தம் துடித்து அந்நிகழ்வுகளின் காரணகாரர்களை களைந்திட உன் உள்ளம் துடிக்குமாயின் தீவிரவாத நபர் உன்னைக் கையாண்டால் நீயும் ஒரு தீவிரவாதிதான். உனக்கு கிடைத்திடாத ஒரு தீயவழி எங்கோ வறுமையிலிருக்கும் இளைஞனுக்கு தீவிரவாதியாகும் வாய்ப்பு கிடைத்து விடுகிறது.

இதில் அரசியல்வாதிகள் பண்ணும் அக்கிரம அநியாயங்கள் வெட்கித் தலைகுணிய வைக்க வேண்டியவை. எங்கும் எதிலும் எவ்வளவு ஓட்டுகள் விழும் என்ற எண்ணம் கொண்ட ஓட்டுப்பொறுக்கிகளாக இருப்பது தான். ஒவ்வொரு நிலையிலும் ஆயிரத்தெட்டு நடைமுறைகள் அரசியல் ஓட்டுக்களுக்காக இயக்கப்படுகின்றன. அறுபது நாட்களுக்கொருமுறை அழைக்காமல் தீவிரவாத தாக்குதல்கள் நடைபெறுகின்றன என்னும் அளவுக்கு பாதுகாப்பில் அவ்வளவு ஓட்டை. அவ்வளவையும் புறந்தள்ளி விட்டு எந்த கட்சியை சமாதானப்படுத்தலாம் எங்கே ஓட்டைப் பொறுக்கலாம் என வழக்கமான செயல்களில் ஈடுபட்டு விட்டு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தவே முயல்வதில்லை. மக்களுக்கான அரசு என்பது போய் ஏதோ ஆட்சியை ஐந்து ஆண்டுகளுக்கு தள்ளவது தான் அரசு என்பதில் தான் குறியாயிருக்கிறது.



ராமனோ, கிருஷ்ணனோ, விநாயகனோ, யேசுவோ, அல்லாவோ எல்லாமே கடவுள் தான்.. அவர்களை நாம் யாரும் பார்த்ததில்லை ஆனால் அவர்களின் பெயரில் நம்மை அழித்துக் கொண்டிருக்கிறோம்.. மதங்களை நம்பி மனிதம் அழியலாமா? மதங்களை மறப்போம், மனிதம் காப்போம்.. !

Read more...

மனிதம் கொண்டு புனிதம் வளர்ப்போம்.

பார்த்ததும்.. ஈர்த்ததும்.. (1)


கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக கல்வி ஒன்றினால் தான் முடியும் என்ற பெரும் வைராக்கியத்துடன் வறுமை நிலையிலும், பல்வேறான சாதீய கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகி மாணவர்களுடன் அமர்வதற்கும், தங்குவதற்கும் என பெரும் அவமானங்களுக்குட்பட்டு அமெரிக்கா, இங்கிலாந்து வரை படிக்க வேண்டியவைகளைப் படித்து பின் தம் இனத்திற்கான அங்கீகாரம் பெற எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டு இந்தியா சுதந்திரமடைந்து சட்ட அமைச்சராகி உடல்நிலை பொருட்படுத்தாது பல்வேறு மாதங்கள் இரவும் பகலுமாய் சட்டவரைவு பணி மேற்கொண்டு இந்திய நாட்டிற்கான சட்டத்தையும், இனம் என பாராது கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த ஒரு மேதாவியை, அறிவுச்சுரங்கத்தை, ஆற்றல் மிக்க தலைவரை படித்த, எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகள் அவரின் பெயரை பயன்படுத்த மறுப்பதென்பது ஏன்?

சிலைகள் உடைப்பதும், பெயரை மறுப்பதும் என ஒரு ஆற்றல் மிக்க தலைவரை நாம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மனித மடையர்களால் வகுக்கப்பட்டிருக்கும் சாதிகள். புனிதப்படுத்தப்பட வேண்டிய மதங்களில் ஏனோ புண்களாய் சாதீய பிரிவுகள்.

பண்பில்லையெனினும் தம் இனம் மட்டும் பார்த்து ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் ஏன் இங்கே செழுமை பெற்றிருக்கிறது? எந்த ஒரு செயலையும், செயலுக்கும் காரணமாய் நிற்கும் தலைப்புகளையும், தலைமைகளையும் அவர் சார்ந்த சாதீ தவிர்த்து, தனது சாதீ தவிர்த்து நல்லவைகளையும், தீயவைகளையும் பகுத்தறிந்து பார்த்து படிப்பது தானே நம் முன்னோர் நமக்கு அளித்த நல்ல பண்பு.

படிக்கின்ற வயதிலே இளம் ரத்தம் துடிக்கின்ற நிலையிலே சாதீயத்தை தீட்டி தம் நெஞ்சினில் தீயதை வளர்க்கு சில பல தீயசக்திகளிடம் தம் மூளையை கொடுக்கும் மாணவர்கள் தன்னிலை அறிவதெப்போது?

நாம் மனிதர்கள்...
நாம் தமிழர்கள்..
சாதிகள் மறப்போம்..
மதங்களை மறப்போம் - நம்
சுயநிலை அறிவோம்

மனிதம் கொண்டு
புனிதம் வளர்ப்போம்.
மாணவர்களே..!

Read more...

இதயம் தானம் செய்த ஹிதேந்திரன்


மனித மனங்கள் எல்லாம் சுயநல சாக்கடைகளில் சுருண்டு கிடக்கின்ற நிலை பார்த்து வேதனைப்படுகின்ற வேளையினில் மகிழ்ச்சிகரமான ஓர் செய்தி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. அச்செய்தி தமிழ்நாட்டிலிருந்து வரும் பொழுது பெருத்த மகிழ்ச்சி தான்.

வாகன விபத்தொன்றில் அடிபட்டு தலை முழுதும் பெரும் சேதமடைந்து காப்பாற்ற முடியாது என்ற நிலையில் இருந்த தனது மகனின் மற்ற பாகங்களை வாழ வைக்க அவற்றை தானம் செய்ய முன்வந்து, அதன் மூலம் ஆறு உயிர்களை வாழ வைத்து உறுப்பு தானத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திச் சென்றிருக்கும் ஹிதேந்திரனுக்கும் அவரது பெற்றோர் அசோகன் - புஷ்பாஞ்சலிக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்.




அவர்களின் இந்த விரைவான முடிவை ஏற்று செயலிலிருக்கும் பாகங்களை பத்திரமாய் அறுவை செய்து தகுந்த நேரத்தில் பயனாளர்களை கண்டு பிடித்து சிகிச்சை செய்து வெற்றி கண்ட மருத்துவர்களுக்கும் அவருக்கு உதவி செய்த காவலர்களுக்கும் வாழ்த்துக்களும், வணக்கங்களும்.

வாழ்த்தொன்றை வழிமொழிந்து விட்டு வேறு வழி செல்வதற்காக அல்ல இந்த பதிவு. ஒவ்வொருவரும் உறுப்பு தானம் உணர்ந்து இம்மாதிரியான சமயங்களால் நம்மால் இயன்றவைகளை தானம் செய்யலாமே... நம் சுற்றுப்புறத்துக்கும் உணர்த்துவோம்.. வாருங்கள் நண்பர்களே...

Read more...