மனிதம் கொண்டு புனிதம் வளர்ப்போம்.
பார்த்ததும்.. ஈர்த்ததும்.. (1)
கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை உயர்த்துவதற்காக கல்வி ஒன்றினால் தான் முடியும் என்ற பெரும் வைராக்கியத்துடன் வறுமை நிலையிலும், பல்வேறான சாதீய கொடுமைகளுக்கெல்லாம் ஆளாகி மாணவர்களுடன் அமர்வதற்கும், தங்குவதற்கும் என பெரும் அவமானங்களுக்குட்பட்டு அமெரிக்கா, இங்கிலாந்து வரை படிக்க வேண்டியவைகளைப் படித்து பின் தம் இனத்திற்கான அங்கீகாரம் பெற எண்ணற்ற போராட்டங்களை மேற்கொண்டு இந்தியா சுதந்திரமடைந்து சட்ட அமைச்சராகி உடல்நிலை பொருட்படுத்தாது பல்வேறு மாதங்கள் இரவும் பகலுமாய் சட்டவரைவு பணி மேற்கொண்டு இந்திய நாட்டிற்கான சட்டத்தையும், இனம் என பாராது கோடானு கோடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அங்கீகாரத்தை வாங்கிக் கொடுத்த ஒரு மேதாவியை, அறிவுச்சுரங்கத்தை, ஆற்றல் மிக்க தலைவரை படித்த, எதிர்கால இந்தியாவின் சட்ட மேதைகள் அவரின் பெயரை பயன்படுத்த மறுப்பதென்பது ஏன்?
சிலைகள் உடைப்பதும், பெயரை மறுப்பதும் என ஒரு ஆற்றல் மிக்க தலைவரை நாம் அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறோம். எல்லாவற்றுக்கும் காரணம் மனித மடையர்களால் வகுக்கப்பட்டிருக்கும் சாதிகள். புனிதப்படுத்தப்பட வேண்டிய மதங்களில் ஏனோ புண்களாய் சாதீய பிரிவுகள்.
பண்பில்லையெனினும் தம் இனம் மட்டும் பார்த்து ஆதிக்கம் செலுத்தும் மனோபாவம் ஏன் இங்கே செழுமை பெற்றிருக்கிறது? எந்த ஒரு செயலையும், செயலுக்கும் காரணமாய் நிற்கும் தலைப்புகளையும், தலைமைகளையும் அவர் சார்ந்த சாதீ தவிர்த்து, தனது சாதீ தவிர்த்து நல்லவைகளையும், தீயவைகளையும் பகுத்தறிந்து பார்த்து படிப்பது தானே நம் முன்னோர் நமக்கு அளித்த நல்ல பண்பு.
படிக்கின்ற வயதிலே இளம் ரத்தம் துடிக்கின்ற நிலையிலே சாதீயத்தை தீட்டி தம் நெஞ்சினில் தீயதை வளர்க்கு சில பல தீயசக்திகளிடம் தம் மூளையை கொடுக்கும் மாணவர்கள் தன்னிலை அறிவதெப்போது?
நாம் மனிதர்கள்...
நாம் தமிழர்கள்..
சாதிகள் மறப்போம்..
மதங்களை மறப்போம் - நம்
சுயநிலை அறிவோம்
மனிதம் கொண்டு
புனிதம் வளர்ப்போம்.
மாணவர்களே..!
2 மறுமொழிகள்:
இன்னும் எத்தனை நாள் தான் இந்த ஆதிக்கக் சாதிக்காரர்கள் தங்கள் ஆதிக்கத்தை காட்டுவார்கள்....சாது மிரண்டால் காடு கொள்ளாது....அதுதான் இப்போது நடந்திருக்கிறது....சாதியை பற்றி பேசுபவர்கள் வாயில் மலத்தை தான் திணிக்க வேண்டும்.....
like music come and check mine out.
Post a Comment