வாரணம் ஆயிரம் : வாரணம் என்றால் என்ன ?
.jpg)
சூர்யாவின் நடிப்பு மிக அருமை.. சின்ன வயசு மாதிரி எல்லாம் நடிச்சு விக்ரமுக்கு சவாலா நடித்து இருக்கிறார்.. விஜய் ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேங்கிறாரு... படம் ரொம்ப வளவளன்னு நீளமா போய்ட்டுருக்கு.. பிளாஸ்பேக்குக்கு மேல பிளாஸ்பேக்.. சூர்யாவோட முகம் அப்பப்ப மாறிட்டே இருக்கிறது யாதார்த்தமா இருந்தாலும் கொஞ்சம் அதிகமாகத் தான் இருக்கு.. அப்பா சூர்யாவா வருகிறவரின் முதல் காட்சியிலேயே மனதைப் பறித்துக்கொள்கிறார்..
சமீரா அழகான தேவதை மாதிரி வந்து மனதில் பச்சக்குன்னு ஒட்டிக்கிறாங்க.. விட்டுட்டு போகும்போதும் நிறைய பாதிக்கிறாங்க.. ரம்யா(வுக்கு) ஒண்ணுமே இல்லை.. சிம்ரன் தன்னோட நடிப்பிலே ரொம்ப அருமை.. கிளைமாக்ஸ் சிம்ரனும், கிழவி சிம்ரனும் பச்சக்..
சற்று பொறுங்கள்.. எல்லாம் சரிதான்.. ஆனால் வாரணம் என்றால் என்ன ? சற்றே யோசிக்க வேண்டிய பதில் தான்... நானும் பார்த்ததில் இருந்து கூகிளில் தேடணும்னு இருந்தேன்.. அதை மட்டுமல்ல சிம்ரன் கடைசிக் காட்சியில் கூறும் ஆண்டாளின் வரிகளையும்.. திடீரென்று நண்பர் அழைபேசியில் அழைத்து வாரணம் என்றால் என்ன என்று தேடி தலையை உடைத்துக் கொள்வதாக கூறினார்.
கூகிளில் அடித்தேன்.. கிடைத்தது பதில் வாரணம் என்றால் யானை என்று பொருள். ஆக வாரணம் ஆயிரம் என்றால் ஆயிரம் யானைகள். ஆண்டாள் அருளிய “நாச்சியார் திருமொழியில்” இச்சொல்லை பயன்படுத்தியிருக்கிறார். திருமால் தன்னை திருமணம் செய்வது போல் தான் கண்ட கனவை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
“வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான்”
திருமால் ஆயிரம் யானைகள் புடைசூழ வருகிறார், அக்காட்சியைக் கண்ட மக்கள் யாவரும் பொன்குடங்களை வைத்து, தம் சுற்றுப்புறங்களில் தோரணங்கள் கட்டி வரவேற்பதை தன் கனவில் கண்டதாக தோழியிடம் கூறுவதாகக் கூறப்படுகிறது. இதே பாடல் கேளடி கண்மணி படப்பாடலிலும் இளையராஜாவின் இசையில் வருகிறது.
4 மறுமொழிகள்:
//விஜய் ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேங்கிறாரு... //
Ketta comedy....hahahahah.....Vijay - Masalaa padam thavira vera ethuvume nadikka theriyathu.....Thandam......Aaanaa avanga appavoda Arasiyal selvaakka vachukittu periya rasikar mandram amachu oora ematharaapla....
Recent SMS Joke:
Vijay is so talented
Vijay's acting in each film is different and amazing
Vijay will be the next super star
P.S: For more jokes SMS to 8888 just Rs. 0.05 per motnh.
hahahahahahahahahahahha
அதை அவரே தான் சொல்லிட்டாருல்லா. அதற்கு மேல் நாங்களோ நானோ கிண்டல் பண்ணி ஒன்றும் இல்லை. ஆயினும் விஜய்க்கு பின் வந்த சூர்யாவால் முடிகிற போது நம்ம விஜயால் முடியாத என்ற ஒரு சினிமா ரசிகனின் ஏக்கம் அவ்வளவு தான்.....
அது சரி எஸ்.ஏ.சிக்கு செல்வாக்கு இருக்கா என்ன ?
//விஜய் ஏன் இந்த மாதிரியெல்லாம் நடிக்க மாட்டேங்கிறாரு... //
Vijay bit adichey.. pass aanavaru... avara poyee padichu pass panna sonna epdi nilavan. Nadakuratha yosibom. Innumaa vijaya namburinga ? haaa..haaa..haaa..
ajithuku -varalaru.,
Suryavuku - Vaaranam aayiram.
Vikramuku - anniyan.,
Vijayku - '?' (varaaathu...)
Post a Comment