சிங்கப்பூர் ’தமிழ் முரசு’ - நாடகம் பற்றிய செய்தி

இன்று (01-12-2011) நாடகம் தொடங்குவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்த செய்திக் கட்டுரை.
-விஜய் சங்கர்ராமு

இன்று (01-12-2011) நாடகம் தொடங்குவதைத் தொடர்ந்து சிங்கப்பூர் தமிழ் முரசு நாளிதழில் வெளிவந்த செய்திக் கட்டுரை.
சிங்கப்பூரில் வருகிற டிசம்பர் 1, 2 மற்றும் 3ம் தேதிகளில் அவந்த் தியேட்டரின் படைப்பில் ரோம்ஸ் & ஜூல்ஸ் எனும் தமிழ் நாடகம் நடைபெற உள்ளது. திரு செளந்திராஜனின் எழுத்தில் உருவாக்கப்படும் இந்நாடகத்தை சிங்கப்பூரில் ஏராளமான நாடகங்களைப் படைத்த செல்வா அவர்கள் இயக்குகிறார். 20க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், வசந்தம் பிரபலங்கள் நடிகர் புரவலன். , கார்த்திக் உட்பட்ட 18 நாடக நடிகர்களின் உழைப்புடன் உருவாகும் இந்நாடகம் சிங்கப்பூர் நாடக வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமையும் என ரோம்ஸ் & ஜூல்ஸ் நாடக குழு நம்பிக்கை தெரிவிக்கிறது.
![]() | ![]() |
| செல்வா | செளந்தர்ராஜன் |
இந்நாடகமானது ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட்டின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டாலும் நாடகம் முழுவதும் நகைச்சுவை ததும்பளவுக்கு “துன்பம் இவ்வளவு நகைச்சுவையாக இருந்ததில்லை” எனக் கூறுமளவுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக நடந்த ஒத்திகைகளில் கொஞ்சம் கொஞ்சமாக மெருகூட்டப்பட்டு நல்லதொரு வடிவத்திற்கு வந்துள்ளது. அழகான தமிழில், அடுக்கடுக்கான வசனங்களில் அனுபவமிக்க நாடகக் கலைஞர்களின் திறமையான நடிப்பில் உருவாகும் இந்நாடகம் உங்களை நிச்சயம் கவரும் என்பதில் மாற்றமில்லை.

![]() | ![]() |