மொரிசியசு நாட்டுப் பணத்தில் தமிழ்

தமிழ் விக்கிபீடியாவில் உலவிய போது உங்களுக்கு தெரியுமா ? என்ற பக்கத்தில்
மொரிசியசு நாட்டின் ரூபாய் தாளில் தமிழில் எழுத்துக்களும், எண்களும் இடம் பெற்றிருப்பதைப் பற்றிய செய்தி அது. எத்தனை பேருக்கு தெரிந்துருக்கும் எனத் தெரியவில்லை. ஆதலால் அதனை உங்களின் பார்வைக்கு இட வேண்டிய நோக்கத்தில் இங்கே பதிவிடுகிறேன். கன்னட, தெலுங்கு, மராட்டிய மக்கள் தங்களை எண்களை மறக்காமல் பேருந்துகளிலும், அரசுத்துறைகளிலும் பயன்படுத்துகிறார்கள். ஆனால் நாம் தான் சிறுவயதில் வாய்ப்பாடு புத்தகத்தில் பார்த்ததோடு நமது இலக்கங்களையும், இலக்குகளையும் தொலைத்து கொண்டு இருக்கிறோம். எங்கோ தூரத்தில் ஆப்பிரிக்காவின் அருகில் உள்ள மொரிசியசு அரசு தமிழ் இலக்கங்களை பயன்படுத்துவது பெருமைக்குரியதே..
மொரிசியசில் 30000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் வாழ்கின்றனர், அண்மையில் தமிழக அரசு இவர்களின் தமிழ் கல்விக்கும் உதவ முன்வந்துள்ளது.
இந்திய தேசீய மொழியான இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.
மறந்திருந்தீர்களானால் இங்கே சொடுக்கி ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள்..
3 மறுமொழிகள்:
///இந்திய தேசீய மொழியான இந்தியிலும் எழுதப்பட்டுள்ளது.///
இந்திய தேசிய மொழி இந்தி அல்ல. அது மத்திய அரசு பயன்படுத்தும் மொழி அவ்வளவே...
இந்திய குடிமகன் என்ற முறையில் ஒரு அரசு விருப்பமில்லா முடிவெடுத்தாலும் அதனை சனநாயக் நாட்டில் நாம் ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும்..
வாழ்க தமிழுடன்,
நிலவன்.
அரசு இந்தியை தேசிய மொழி என்று எப்பொழுது அறிவித்தது??
Post a Comment