ரஜினி மன்னிப்பு கேட்கணும் - இந்து முன்னணி

சமீபத்தில் தனது ரசிகர்களைச் சந்தித்த ரஜினி “கடமையைச் செய்.. பலனை எதிர்பார் !” என்னும் புதுமொழியை அச்சிட்டு அதற்கு விளக்கமாக கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்னும் கிருஷ்ணரின் வரிகளில் நம்பிக்கை இல்லை என்பது மாதிரியான விளக்கம் கொடுத்திருந்தார். பட்ட காலிலே படும் என்பது போல மன்னிப்பு சிறப்பாளர் ரஜினியை பகவத்கீதையை அவமானப்படுத்திவிட்டார் என்று மன்னிப்பு கேட்க வேண்டும் என இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் பண்ண ஆரம்பித்து விட்டனர்.
ஆகா, என்னடா இது புது வம்பா இருக்கே, முதல்ல எப்படி விளக்கம் அளிப்போம், பின்னால எப்படி மன்னிப்பு கேட்போம் என தீவிர விவாதத்தில் ரஜினி இருப்பதாகக் கேள்வி. இதில் வாய்க்கு எப்படி பூட்டு போடுவது ? என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருப்பதாகவும் நம்பிக்கையான செய்தி குறிப்புகள் கூறியுள்ளன். கண்ணனை, பெருமாளை, ராமனை கடுமையாக விமர்சித்த திராவிட தலைவர்களையெல்லாம் மன்னிப்பு கேட்க வைக்கட்டும் இந்த முன்னணியினர், பின்னால் அகில உலக ஆன்மிகவாதி மன்னிப்பு கேட்பார்..
ஆத்திகரா இருக்கிற ரஜினிக்கே ஆப்பா ? என ரசிகர்கள் ஒருபக்கம்..
என்ன கொடுமை சரவணா இது ? என ரஜினி பிரபுவிடம் கேட்டுக்கொண்டிருக்கிறார்...
பார்ப்போம் என்ன நடக்குதுன்னு..
4 மறுமொழிகள்:
nalla velai naan rajiniyaa birakala? :)
அது சரி...
ரஜினியோட ரசிகனா இருக்கலியே,, அதுக்கே மகிழ்ச்சி தான்..
சங்கங்கள் தமது கடமையான கண்டனத்தை தெரிவித்துவிட்டன............ பலனை எதிர்பார்க்காதே…!!!!!!!!!!!
கண்டணம் தெரிவிக்கும் முன் அறிவோடும் மிகுந்த யோசனையோடும் தான் சொல்கிறோமா என்த்று சிந்திக்க வேண்டும்.
ராமர் பாலம் பிரச்சனையே இன்னும் முடியவில்லை. அதற்குள், பகவத் கீதையை அவமானப்படுத்தி விட்டார் ரஜினி என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் சிலர்.
பாப்புலாரிட்டி வேணும்னா, வேற எதாவது பண்ணுங்கடா, ஏண்டா ரஜினிய வம்புக்கு இழுக்குறீங்க...
சரி அம்மாவாசைக்கும் அப்துல்காதருக்கும் என்ன சம்மந்தம், அதுபோல யாதவ மகா சபைக்கும் பகவத் கீதைக்கும் என்ன சம்மந்தம்.
முதலில் அவரை பற்றி பேச உங்களுக்கு தகுதி இருக்குதா என்பதை என்னி பாருங்கள்.இந்நாட்டில் எத்தனையோ தலைவர்கள் இந்து மதத்தை பற்றி தரகுறைவாக பேசும்போது நீங்கள் எங்கே சென்றீர்கள். ஒரு உதாரணத்துக்கு கூட அவர் எதையும் சொல்ல கூடாதா, அப்படி என்ன சொல்லிடார் ஒரு உழைபாளி ஊதியத்துக்கு தானே உழைபான், நீங்கள் எத்தனை பேர் ஊத்தியம் வாங்காமல் மக்களுக்கு சேவை செய்யிரிங்க, பகவத் கீதையை தினம் படிக்கிறீங்க, உங்க மனச தொட்டு சொல்லுங்க. அவரு முதலில் உண் தாய், தந்தையை கவனியுங்கள், ஒரு நல்ல மகனாக, கணவனாக, நாட்டின் குடிமகனாக இருங்கள் என்று தன் ரசிகர்களுக்கு சொன்னாரே அதல்லாம் உங்க காதுல விழல இது மட்டும் விழுந்துதோ, தயவு செய்து திருந்துங்கப்பா.
கடவுள் கிருஷ்ண பரமாத்மா மாட்டுக் கொட்டகையில தானே பிறந்தார். அதனால அவரும் கோனாரு தானாம். (அப்படீன்னா யேசுவும் கோனாரு தானா?
சரியான கேள்விய தான் கேட்டு இருக்கீங்க செல்வா..
தடியெடுத்தவெல்லாம் தண்டல்காரன் மாதிரி நெறைய பேரு கெளம்பிட்டாங்க...
வாழ்க தமிழ்டன்,
நிலவன்.
Post a Comment